Categories: Latest Post

TNPSC Group 4 and VAO Vacancies Out | TNPSC குரூப் 4 மற்றும் VAO காலியிடங்கள் வெளியானது

Published by
bsudharshana

TNPSC Group 4 and VAO Vacancies:

TNPSC குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், விஏஓ பதவிகளுக்கான காலியிடங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TNPSC குரூப் 4 தேர்வு 2021 VAO, தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் காலியிடத்திற்கான அறிவிப்பு 2021 நவம்பர்  கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும், மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவம் கடைசி தேதி அதாவது டிசம்பர் 2021 வரை கிடைக்கும்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Importance of Group 4 exam|குரூப் 4 தேர்வின் முக்கியத்துவம்

தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNPSC பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தினாலும், குரூப் 4 தேர்வு தான் தேர்வர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே நீங்கள் இந்த தேர்வை எழுதலாம். அதுவும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே. எழுத்து தேர்வு கொள்குறி வகை அடிப்படையிலானது. விரிவான எழுதுதல் தேர்வு கிடையாது. இந்த எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் நீங்களும் அரசு அதிகாரி தான். மேலும் குருப் 4 தேர்வுகளில் உள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

READ MORE: TNPSC GROUP 4 SYLLABUS

Why most people are choosing VAO |ஏன் பெரும்பாலானோர் VAO-வை தேர்வு செய்கிறார்கள்?

இதற்கிடையே குரூப் 4 தேர்வானது விஏஓ பதவிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுவதால், ஒவ்வொரு முறையும் அதிகமான தேர்வர்கள், இந்த தேர்வில் பங்கேற்று வருகின்றனர். குரூப் 4 தேர்வுகளில் விஏஓ பதவிகளுக்கு தனி மவுசுதான். அந்த பதவிக்கு உண்டான பொறுப்புகள் மற்றும் மரியாதை காரணமாக சில தேர்வர்கள் விஏஓ பதவிகளையே விரும்புகின்றனர்.

தற்போது TNPSC குரூப் 4 தேர்வானது, 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman).

இதற்கு முன் விஏஓ தேர்வுகள் தனியாக நடத்தப்பட்டு, அதற்கென தனி பாடத்திட்டம் இருந்த வந்த நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுகளுடன் சேர்த்து, ஒரே பாடத்திட்டமாக, தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வு, தேர்வர்களிடையே கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

READ MORE: TNPSC Group 4 2021 : previous year Vacancies 

VAO Vacancies | VAO காலியிடங்கள்

குரூப் 4 தேர்வுக்கான பதவிகளில் ஒன்றான விஏஓ பதவிகளில் தமிழகம் முழுவதும் 1436 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் தேர்வு அறிவிப்பில் விஏஓ பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் குரூப் 4 தேர்வுக்கான மற்ற பதவிகளிலும் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

READ MORE: TNPSC Group 4 2021 Exam Strategy 

TNPSC Group 4 Vacancies Conclusion |TNPSC குரூப் 4 காலியிடங்கள் முடிவுரை

TNPSC ஆல் வெளியிடப்படும் தேர்வு அறிவிப்புகளில் அதிக காலியிடங்களை கொண்டுள்ள தேர்வு குரூப் 4 தேர்வு தான். இதில் தற்போது விஏஓ காலியிடங்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதேபோல் மற்ற துறைகளிலும் அதிக காலியிடங்கள் உள்ளதாக கூறப்படுவதால், இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பதவிகள் நிரப்பப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதே நேரம் ஒவ்வொரு முறையும் குரூப் 4 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடக்காததால், ஏற்கனவே தேர்வுக்கு தயாரானவர்களோட, தற்போது தேர்ச்சி பெற்றவர்களும் போட்டியிடுவர். எனவே தேர்வு மிக போட்டி மிகுந்ததாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருவதால், இன்னும் தேர்வுக்கு தயாராதவர்கள் உடனடியாக தயாராகி கொள்ளுங்கள்.

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
Weekly Current Affairs One-Liners | 11th to 17th of October 2021 Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

Coupon code- NOV75-75% OFFER

TNPSC Group – 4 Batch Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

bsudharshana

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Part 1

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

7 hours ago

TNPSC Book Back Questions Revision Tamil- Evolution of Humans and Society – Prehistoric Period

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back…

7 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரியின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

7 hours ago

TNPSC Book Back Questions Revision – Evolution of Humans and Society – Prehistoric Period

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back…

7 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – சமத்துவ உரிமை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

8 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Indian National Congress – Moderates 1

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

8 hours ago