Table of Contents
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு ஆண்டும் TNPSC குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் போதும் விண்ணப்பிக்கும் முன் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் முதலில் பார்க்க வேண்டுவது தகுதி விவரங்களை தான். நீங்கள் TNPSC குரூப் 4 தேர்வுகள் 2024க்கு தயாராகும் நபராக இருந்தால், TNPSC குரூப் 4 வயது வரம்பு, கல்வித் தகுதிகள் மற்றும் பலவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். TNPSC குரூப் 4 தகுதி அளவுகோல் 2024 தொடர்பான வயது வரம்பு, கல்வித் தகுதிகள், குடியுரிமை, பணி அனுபவம் போன்ற அனைத்து தகவல்களையும் இந்தப் பக்கத்தில் பெறலாம்.
TNPSC GROUP 4 2024 DECODE PDF (TAMIL)
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024: ஆண்டு தோறும் TNPSC ஆல் நடத்தப்படும் முக்கிய தேர்வுகளில், TNPSC குரூப் 4 ம் ஒன்று. தேர்வின் கடினத்தன்மை, தேர்வின் முறை (ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும்), ஊதியம், அரசு வேலை என்கிற அங்கீகாரம் இவையே இதை அதிக மக்கள் விரும்பும் காரணிகள். TNPSC குரூப் 4 வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதிகள் குறித்து விரிவாக கீழே பார்க்கலாம்.
TNPSC குரூப் 4 வயது வரம்பு 2024 |
|
ஆணையத்தின் பெயர் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
தேர்வின் பெயர் | குரூப் 4 – ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு–IV (குரூப்-IV சேவைகள் & VAO) |
பதவியின் பெயர் | ஜூனியர் உதவியாளர், VAO, பில் கலெக்டர் போன்றவை |
அதிகாரபூர்வ தளம் | tnpsc.gov.in |
TNPSC குரூப் 4 வயது வரம்பு
TNPSC குரூப் 4 வயது வரம்பு தேர்விற்கான வயது வரம்பு, வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 வயது வரம்பு 3 : TNPSC Group 4 Age Limit & VAO தேர்விற்கான வயது வரம்பு
வ எண் | வகுப்பு | குறைத்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
1 | OC | 21 | 30 |
2 | BC | 21 | 40 |
3 | MBC | 21 | 40 |
4 | SC | 21 | 40 |
5 | ST | 21 | 40 |
இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் தேர்விற்கான வயது வரம்பு
வ எண் | வகுப்பு | குறைத்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
1 | OC | 18 | 30 |
2 | BC,BC(M) | 18 | 32 |
3 | MBC | 18 | 32 |
4 | SC | 18 | 35 |
5 | ST | 18 | 35 |
TNPSC குரூப் 4 கல்வித் தகுதி 2024
- குரூப் 4/VAO :
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- தட்டச்சர் :
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சியுடன் தமிழ்நாடு ஆரசால் அங்கீகரிக்கப்பட்ட தட்சச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
- ஸ்டெனோ தட்டச்சர்:
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது மேல்நிலை படிப்பில் சேர்வதற்கு ஏற்ற தேர்ச்சியுடன் தமிழ்நாடு ஆரசால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டெனோ தட்சச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |