Tamil govt jobs   »   Vedic Culture Part 1 in Adda247...   »   Vedic Culture Part 1 in Adda247...

Vedic Culture Part 1 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி – 1 Adda247 தமிழில்

வேதகாலம்:

  • சிந்துவெளி நாகரிகத்தின் சரிவோடு இந்தியாவில் நகரமயமாதலின் முதல் கட்டம் ஒரு முடிவிற்கு வந்தது.
  • ஆரியரின் வருகையால் வேதகாலம் எனும் காலகட்டம் தொடங்கியது.
வேதகாலம்—இந்திய(பொ.ஆ.மு) 1500 வரலாற்றில் கி.மு.600 காலகட்டம்.
‘வேதங்கள்’ என்பதில் இருந்து இப்பெயரைப் பெற்றது.

ஆரியர்கள்:

  • ஆரியர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும், இடம் விட்டு இடம் குடிபெயர்ந்து செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
  • இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலையலையாகக் குடிபெயர்ந்து இந்துகுஷ் மலைகளிலுள்ள கைபர் கணவாய் வழியாக வந்தனர்.
  • கால்நடைகளை மேய்ப்பதே இவர்களின் முதன்மைத் தொழில்.
  • அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறையையும் (slash and burn agriculture) பின்பற்றினர்.

Vedic Culture Part 1 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி - 1 Adda247 தமிழில்_3.1

அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண்முறை (Slash and Burn Agriculture):

  • நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி, கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்படும்.
  • அந்நிலத்தில் குறுகிய காலகட்டத்திற்கு வேளாண்மை செய்து அதன்பின் அந்நிலம் கைவிடப்படும்.
  • பின்னர் மக்கள் மற்றொரு இடத்தில் இதே போன்று வேளாண்மை செய்யத் தொடங்குவர்.

காலம், பரப்பு, சான்றுகள்:

  • புவியியல் பரப்பு  – வட இந்தியா
  • காலப்பகுதி  – இரும்புக் காலம்
  • கால அளவு –  கி.மு (பொ.ஆ.மு) 1500- 600 வரை
  • சான்றுகள்  – வேதகால இலக்கியங்கள்
  • நாகரிகத்தின் இயல்பு – கிராம நாகரிகம்

ஆரியர்களும் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும்:

  • ரிக்வேதகால ஆரியர்கள் நாடோடிகள் ஆவர்.
  • அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினரான அவர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து ஆகும்.
  • ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும்.
  • அப்போது அப்பகுதி ‘சப்த சிந்து’ அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி என்ற ழைக்கப்பட்டது.
  • ஏறத்தாழ கி.மு (பொ.ஆ.மு) 1000-இல் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கைச் சமவெளியில் குடியமர்ந்தனர்.
  • இரும்புக் கோடரி, இரும்பினாலான கொழுமுனையைக் கொண்ட கலப்பை ஆகியவற்றைப் பரவலாக பயன்படுத்தினர்.
நான்கு வேதங்கள்: ரிக், யஜுர், சாம, அதர்வன.

இது பகுதி 1 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil