HUMAN RIGHTS: Human rights are fundamental rights and freedoms that every human being should have and deserve. These rights are considered to be “certain fundamental, inalienable and inalienable rights that human beings have by virtue of being born human”. Read the article to get information about HUMAN RIGHTS.
Fill the Form and Get All The Latest Job Alerts
மனித உரிமைகள் பற்றி ஐ.நா. சபை பின்வருமாறு வரையறுக்கிறது. மனித உரிமைகள் என்பது “இன,பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே ஆகும். மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது. Human rights தலைப்பு குறித்து அனைத்து தகவல்களும் இங்கே கிடைக்கும்.
TNPSC Group 1 Notification 2022 | TNPSC குரூப் 1 அறிவிப்பு 2022
மனித உரிமையின் வரலாற்று வேர்கள், உலகின் பல முக்கிய நிகழ்வுகளில் ஊடுருவி சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றினை நிலை நிறுத்தியுள்ளன. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை சமாளிக்கவும், எதிர்காலத்தில் உலகப்போர் போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும், 1945-ல் ஐ.நா. சபை தொடங்கப்பட்டது. மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை (The Universal Declaration of Human Rights) பெரும்பங்கு வகிக்கின்றது.
உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை என்பது வெவ்வேறு சட்ட மற்றும் பண்பாட்டுப் பின்னணியுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கலந்துகொண்டபிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டது. இது மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட (பொது சபை தீர்மானம் 217A) இந்தப் பேரறிக்கை, அனைத்துலக நாடுகள் மற்றும் அனைத்துலக மக்களின் பொதுத்தர சாதனை ஆகும். அடிப்படை மனித உரிமைகள் உலகளவில்பாதுகாக்கப்படவேண்டும் எனும் நோக்கம் கொண்ட முதல் பேரறிக்கையான இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன. அது சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு குடிமை, அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளையும் தருகிறது. இவ்வுரிமைகள் இனம், பால், தேசியம் ஆகியவற்றைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், சம உரிமையோடும் பிறக்கின்றனர்.
இந்த பேரறிக்கையின் பொது விளக்கமானது சட்டபூர்வமாக பிணைக்கப்பட்ட ஆவணம் அல்ல என்ற போதிலும் அது அரசியல் மற்றும் அறநெறிசார் முக்கியத்துவம் உடையது. மேலும் அதில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மையான உத்திரவாதங்கள் இக்காலத்தில் தரம்மிக்க விதிமுறைகளாக நிலைபெற்று விளங்குகின்றன.
TNPSC Field Surveyor & Draftsman Notification 2022
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் அமைக்கப்பட்டது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு ஒரு தலைவரையும், சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கையில் உத்திரவாதம் தரப்பட்டுள்ள ஒரு தனி மனிதனின் வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பேற்கிறது.
ராணுவ அக்னிவீர் பெண் ஆட்சேர்ப்பு 2022
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் வகையுரை ஒன்று பிரிவு 21, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993ல் உள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை இவ்வாணையத்தின் முதன்மை நோக்கமாகும். மேலதிகமாக, எழுத்து மூலமான புகார் பெறாவிட்டாலும்கூட ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் வகையிலும், மாநில மனித உரிமை ஆணையங்களின் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையாக்கியது போன்ற ஒழுங்காற்றுவிதிகளை ஆணையம் வகுத்ததன் மூலமாக மாநிலங்களில் ஆணையத்தின் செயல்முறைகள் வலுவாக்கப்பட்டுள்ளது.
TNPSC Recruitment 2022, Notification for VOC and CO Posts
உலகெங்கிலும் பல நிறுவனங்கள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முயற்சிகளை எடுத்துள்ளன. இந்த அரசுசாரா நிறுவனங்கள் அரசாங்கங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் மனித உரிமைக் கொள்கைகளின்படி செயல்படுமாறு வலியுறுத்துகின்றன. அவைகளுள் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International), குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் (Chidren’s Defence fund), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆகியனவாகும்.
Read More: TNUSRB SI Exam Marks, Check Your Exam Result and Marks at www.tnusrb.tn.gov.in
Read More: IBPS RRB PO தேர்வு தேதி 2022 வெளியீடு, புதிய தேர்வு அட்டவணை
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை உலக அளவில் அறிவித்த பெருமை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையையே சாரும். மனித உரிமைகள் ஒவ்வொருவருக்குமான சமத்துவம் மற்றும் நேர்மை பற்றியதாகும். மேலும் இது அனைவரையும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. மனித உரிமையைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். மனித உரிமைகளுக்கான புரிதலும் மரியாதையையும் நமது சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அடித்தளத்தை வழங்குகிறது. இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அல்லது 4 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
***************************************************************************
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil
TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…
TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…
SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…
TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…
இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…