Categories: Latest Post

காந்தி ஜெயந்தி (Happy Gandhi Jayanti Quotes) நல்வாழ்த்துக்கள் | காந்தி ஜெயந்தி சிறப்பும் பொன்மொழிகளும்

Published by
Ashok kumar M

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் : காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் “அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அனுசரிக்கப்பட்டு) வருகிறது.

காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti)

Happy Gandhi Jayanti Quotes, விடுதலை போராட்டத்தில்  காந்தியின் பங்களிப்பு:

மகாத்மா என்று அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தினார் . இதன் காரணமாக விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். இவரது சத்யாகிரகம் என்ற அறவழிப் போராட்டம் இந்திய விடுதலைக்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல் வேறு சில நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கும் அது ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

தீண்டாமை, மனித உரிமை மீறல் என பலவற்றிற்கு எதிராகவும் மகாத்மா காந்தி குரல் கொடுத்தார். பாலின பேதமின்றி அனைவரையும் சமமாக பாவிப்பது அவரது செயல்களில் முதன்மையானது. அவரது லட்சிய போராட்டங்களில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களை தனது போராட்டங்களில் இணைத்துக் கொண்ட காந்தி, மவுனப் போராட்டம், பட்டினி போராட்டம் உள்ளிட்ட பெண்களின் அகிம்சை போராட்டங்களை நாடு தழுவிய தேசத்தின் போராட்டமாக மாற்றினார். அதில் வெற்றியும் கண்டார்.

இந்தியாவின் சுதந்திர போராட்ட முகமாக பார்க்கப்பட்டவர் காந்தி. அவரை சுற்றியே இந்திய விடுதலை இருந்தது. அதேபோல தான் தீண்டாமை, சமூக சமத்துவதுக்கான அவரது குரலும். விடுதலையுடன் சேர்த்து, தீண்டாமைக்கு எதிராக பல போராட்டங்களை அவர் முன்னெத்தார்.

Happy Gandhi Jayanti Quotes, காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்:

காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

Happy Gandhi Jayanthi

காந்தி ஜெயந்தி அன்று புது தில்லியில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. கல்லூரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக-அரசியல் நிறுவனங்கள் வெவ்வேறு நகரங்களில் நினைவு விழாக்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்றவைகள் பிரபலமான நடவடிக்கைகளில் அடங்கும்.

Happy Gandhi Jayanti Quotes, காந்தி ஜெயந்தி நிகழ்வுகள்:

காந்தி ஜெயந்தி அன்று ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன மற்றும் பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியின் முயற்சியைக் கொண்டாடுவதற்கும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. காந்தியின் விருப்பமான பஜனைகள் (இந்து பக்திப் பாடல்), ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்) பொதுவாக அவரது நினைவாக பாடப்படுகிறது. நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படும்.

காந்தி ஜெயந்தி பொன்மொழி:

உங்களை நீங்கள் அறிந்து கொள்ள ஒரு சிறந்த வழி எதுவென்றால்,

பிறருக்கு சேவை செய்வதில் உங்களை அர்பணித்துக் கொள்வது தான்!

 

முடிவுரை:

மகாத்மா காந்தியின் கொள்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் மக்கள் அனைவருக்கும் உண்டு என்பதை நாம் அனைவரும் காந்தி ஜெயந்தி நாளில் உறுதி ஏற்க வேண்டும்.

*****************************************************

Use Coupon code: BAPU (75% offer)+ DOUBLE VALIDITY ON MAHAPACK & TEST SERIES

ALL IN ONE MEGAPACK TNPSC, RRB, IBPS, SSC, TN & OTHER CENTRAL EXAMS ALL LIVE, TEST SERIES, EBOOKS -12 MONTH VALIDITY

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

 

Ashok kumar M

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

9 hours ago

TNPSC Geography Free Notes – Location and Physical Features of India

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

12 hours ago

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…

12 hours ago

TNPSC Revised Annual Planner 2024 Out, Download Annual Planner PDF

TNPSC Revised Annual Planner 2024 Out: Tamil Nadu Public Service Commission (TNPSC) released the TNPSC…

12 hours ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Demands of Moderates

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

14 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Part 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

14 hours ago