Categories: Daily QuizLatest Post

General Tamil Quiz For TNUSRB SI – 27 March 2023

Published by
Gomathi Rajeshkumar

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1.  வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது …………………….. விடை? 

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. உற்றது உரைத்தல் விடை
  3. உறுவது கூறல் விடை
  4. இன மொழி விடை

Q2. பொருந்தாததைத் தேர்க. 

  1. நேர் விடை
  2. மறை விடை
  3. ஏவல் விடை
  4. சுட்டு விடை

Q3. வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல் …………………….. விடை?

  1. இனமொழி
  2. உற்றது உரைத்தல் விடை
  3. உறுவது கூறல் விடை
  4. வினா எதிர் வினாதல் விடை

Q4. நாளை ஊருக்குச் செல்வாயா? என்று கேட்கப்படும் வினாவிற்கு “செல்வேன்” என்று விடை கூறுதல் ___________________ விடை?

  1. நேர் விடை
  2. சுட்டு விடை
  3. மறைவிடை
  4. இனமொழி விடை

Q5. விடை எத்தனை வகைப்படும்?

  1. 5
  2. 7
  3. 8
  4. 6

Q6. மதுரைக்குச் செல்லும் வழி யாது ? – இந்த வினாவிற்கு ‘இது’ எனக் கைக்காட்டி  விடையாகச் சொல்வது  _________________ விடை ஆகும்?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. சுட்டு விடை
  3. மறை விடை
  4. இனமொழி விடை

Q7. நீ நீந்துவாயா? என்ற கேள்விக்கு நீந்த மாட்டேன் என்று விடையளித்தல் _________________விடை ஆகும்?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. சுட்டு விடை
  3. மறை விடை
  4. இனமொழி விடை

Q8. நீ சென்னை செல்கிறாயா ? என்ற கேள்விக்குச் செல்கிறேன் என்று விடையளித்தல் ________________________ விடை ஆகும்?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. சுட்டு விடை
  3. நேர் விடை
  4. இனமொழி விடை

Q9. கடை வீதிக்குச் செல்வாயா ? என்ற கேள்விக்கு ‘நியே செல்‘ என்று விடையளித்தல் ___________________ விடை ஆகும்?

  1. நேர் விடை
  2. மறை விடை
  3. ஏவல் விடை
  4. சுட்டு விடை

Q10. நீ தேர்வுக்குப் படித்தாயா?  இவ்வினாவிற்கு விடையாக ‘படிக்காமல் இருப்பேனா?’ என்று கேட்டவரையே கேள்வியாகக் கேட்பது _____________________ விடை ஆகும்?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. சுட்டு விடை
  3. நேர் விடை
  4. இனமொழி விடை

 

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1. ANS (a) 

Sol. வினா எதிர் வினாதல் விடை

வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது வினா எதிர் வினாதல் விடை

சான்று: என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா என்று கூறுவது.

S2. ANS (c) 

Sol. ஏவல் விடை

பொருந்தாதது: ஏவல் விடை

S3. ANS (b) 

Sol. உற்றது உரைத்தல் விடை

வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல் உற்றது உரைத்தல் விடை 

சான்று: ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் கால் வலிக்கிறது என்று ஏற்கனவே நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

S4. ANS (a) 

Sol. நேர் விடை

உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும் .

நாளை ஊருக்குச் செல்வாயா? என்று கேட்கப்படும் வினாவிற்குசெல்வேன்என்று விடை கூறுதல் நேர் விடை 

S5. ANS (c) 

Sol.

விடை எட்டு வகைப்படும் . அவை

  1. சுட்டு விடை
  2. மறை விடை
  3. நேர் விடை
  4. ஏவல் விடை
  5. வினா எதிர் வினாதல் விடை
  6. உற்றது உரைத்தல் விடை
  7. உறுவது கூறல் விடை
  8. இனமொழி விடை

S6. ANS (b) 

Sol. சுட்டு விடை

சுட்டி கூறும் விடை சுட்டு விடை எனப்படும்.

 மதுரைக்குச் செல்லும் வழி யாது ? – இந்த வினாவிற்குஇது எனக் கைக்காட்டி  விடையாகச் சொல்வது  சுட்டு விடை ஆகும்

 S7. ANS (c) 

Sol. மறை விடை

மறுத்துக் கூறும் விடை  மறைவிடை எனப்படும் .

  நீ நீந்துவாயா? என்ற கேள்விக்கு நீந்த மாட்டேன் என்று விடையளித்தல் மறை விடை ஆகும்

S8. ANS (c) 

Sol. நேர் விடை

உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும் .

நீ சென்னை செல்கிறாயா ? என்ற கேள்விக்குச் செல்கிறேன் என்று விடையளித்தல் நேர் விடை ஆகும் 

S9. ANS (c) 

Sol. ஏவல் விடை

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக்  கூறும் விடை .

கடை வீதிக்குச் செல்வாயா ? என்ற கேள்விக்குநியே செல் என்று விடையளித்தல் ஏவல் விடை ஆகும்

S10. ANS (a) 

Sol. வினா எதிர் வினாதல் விடை

வினாவிற்கு விடையாக  இன்னொரு வினாவை கேட்பது  எதிர் வினாதல் விடை எனப்படும் .

 நீ தேர்வுக்குப் படித்தாயாஇவ்வினாவிற்கு விடையாகபடிக்காமல் இருப்பேனா?’ என்று கேட்டவரையே கேள்வியாகக் கேட்பது வினா எதிர் வினாதல் விடை ஆகும் 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

Q. How does daily quiz in Tamil will help aspirants to score well in competitive exams?

Ans. Tamil is a mandatory paper for all the Tamilnadu State Government Exams. So Practicing with daily quizzes prepares the aspirants to score well in the competitive examination.

Gomathi Rajeshkumar

Addapedia Daily Current Affairs Highlights for Competitive Exams

Daily Current Affairs - நடப்பு நிகழ்வுகள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4,…

12 hours ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

13 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

13 hours ago

TNPSC Free Notes Biology- Cell membrane

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

13 hours ago

Top 30 Polity MCQs for TNPSC,TN TRB,TNUSRB Exams – 03 May 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இந்திய அரசியலமைப்பு முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs) …

14 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024 மற்றும் பிற முக்கிய தேதிகள்

TNPSC குரூப் 4 தேர்வு தேதி 2024: TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம…

14 hours ago