Tamil govt jobs   »   Job Notification   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வேளாண்மை

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வேளாண்மை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

வேளாண்மை

பொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு:

  • நம் நாட்டின் பொருளாதார வாழ்வில் வேளாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது நமது பொருளாதார அமைப்பிற்கு இதுவே முதுகெலும்பாகும்
  • இந்திய பொருளியலில் வேளாண்மையே பிழைப்பூட்டும் முதன்மையான அடிப்படை ஆதாரமாகும் இந்தியா ஒரு விவசாய நாடாகவே தொன்றுதொட்டு விளங்கி வருகிறது. 
  • இன்றும் நாட்டின் எதிர்காலம் வேளாண் உற்பத்தி போக்கை பொருத்தே அமையும்.நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கினை பற்றி கீழ்காணுமாறு விளக்கலாம்.
  1. நாட்டு வருமானத்தில் வேளாண்மையின் பங்களிப்பு:
  • இன்றைய நாட்களிலும் கூட நாட்டு வருமானத்தில் வேளாண்மை பெரும் பங்கு அளிக்கிறது 1950 முதல் 1951 மற்றும் 1979-80ம் ஆண்டுகளில் பல்வேறு வேளாண்மை பண்டங்கள் கால்நடை வளர்ப்பு (பராமரிப்பு) அத்துடன் தொடர்புடைய துணை செயல்பாடுகள் வாயிலாக நாட்டு வருமானத்திற்கு 40 சதவீதத்திற்கும் அதிகமான வருமானம் கிடைத்தது. 
  • ஐம்பதாம் ஆண்டுகளில் நாட்டு உற்பத்தி வெளியீட்டில் பாதி பகுதியினை வேளாண்மை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த பிரிவின் மூலமாகவே உற்பத்தி செய்யப்பட்டது. 80 மற்றும் 90ஆம் ஆண்டுகளில் இந்த விகிதத்தில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது.  2002 – 03 ஆண்டில் இது 25 சதவீதமாக இருந்தது.
  1. வாழ்க்கைக்கு ஒரு அடிப்படை ஆதாரம்:
  • வாழ்க்கைக்கு பிழைப்பூட்டும் ஆதாரமாக வேளாண்மை திகழ்கின்றது பத்து நபர்களில் ஒவ்வொரு ஆறாம் நபரும் வேளாண்மையை சார்ந்தே வாழ்கின்றனர். 
  • தொழிலில் வளர்ந்த நாடுகள் ஆகிய இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் போன்றவைகளில் இந்திய நாட்டுடன் ஒப்பிடும் போது வேளாண்மையை சார்ந்த மக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது 1921- 2001ஆகிய ஆண்டுகளில் வேளாண்மையைச் சார்ந்த உழைப்புச் சக்தியின் அளவானது இரு மடங்கு அதிகமாகிவிட்டது.   
  • இத்துறையினை குறை வேலைவாய்ப்பு, மறைமுக வேலையின்மை மற்றும் குறை உற்பத்தி வேலைவாய்ப்பு ஆகிய தீமைகள் பற்றி பிடித்து பெரும் தொல்லைக்கு உட்படுத்தியுள்ளது. 
  1. வேலைவாய்ப்பளித்தல்:
  • வேளாண்மை ஏராளமான இந்திய மக்களுக்கு பெரும் அளவில் வேலை வாய்ப்பளித்துள்ளது கிராமப்புறங்களில் வேளாண்மையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் 70% மக்கள் சார்ந்து உள்ளனர். 
  • இன்றும் குறிப்பாக 1995ஆம் ஆண்டில் 97 மில்லியன் மக்கள் எண்ணிக்கையில் இருந்து 235 மில்லியனாக நிலத்தை சார்ந்த தொழிலில் ஈடுபடுவோரின் (விவசாயிகள் மற்றும் உழவர்கள்) எண்ணிக்கை அதிகரித்தது. 
  1. தொழில்துறை முன்னேற்றம்:
  • வேளாண்மை தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருள்களை வழங்குகிறது பருத்தி மற்றும் சணல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், வனஸ்பதி, தோப்பு வகைகள் போன்றவை விவசாயத்தை சார்ந்த தொழில்கள் ஆகும். 
  • மேலும் பல சிறு தொழில்கள் மற்றும் கைத்தறி பருத்தி ஆலைகளான நெசவாலைகள் நெல் (அரிசி) உமி நீக்கும் ஆலைகள் நார் மற்றும் காதி தொழில்கள் தங்களின் கச்சா பொருள்களுக்கும் வேளாண்மையை சார்ந்துள்ளன மறைமுகமாக ஏனைய பிற தொழில்களும் விவசாயத்தை சார்ந்து உள்ளன.
  1. பன்னாட்டு வாணிபம்:
  • பன்னாட்டு வாணிபத்தில் வேளாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது ஏற்றுமதியில் தேயிலை, எண்ணெய், பிண்ணாக்கு, கனி மற்றும் காய்கறி வகைகள் வாசனைப் பொருட்கள், புகையிலை, பருத்தி, காப்பி, சர்க்கரை, பதப்படாத கம்பளி மற்றும் தாவர எண்ணெய் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 
  • ஏற்றுமதி மூலம் நல்லதொரு பங்கை பெற்றுத் தருவதோடு இறக்குமதியின் ஒரு முக்கிய பிரிவாகவும் இது உள்ளது. இவ்வேளாண் துறையானது நிகர வெளிநாட்டு செலவாணியை ஈட்டித் தந்து மூலதன ஆக்கத்திற்கும் விவசாயம் சாராத பிற தொழிலுக்கான இறக்குமதிக்கு இது பெரிதும் உதவுகிறது.
  1. முதலீட்டு ஆக்கமும் முதலீடும்:
  • நாட்டின் முதல் ஆக்கத்தில் உற்பத்தி சொத்தானது விவசாய சொத்துக்களாகிய நிலம், நீர் பாசன வசதிகள், டிராக்டர்கள், உழவுக் கருவிகள் அல்லது ஏர் கலப்பை, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் சரக்கு பாதுகாப்பு வசதிகள் போன்ற வடிவங்களில் உள்ளது. 
  • நாட்டு வருமானத்தில் 25 சதவீதத்தை வேளாண்மை ஈட்டிதருவதால் இத்துறையே சேமிப்பதற்கும் பொருளாதாரத்தின் முதலாக்கத்திற்கும் அடிப்படை மூலாதாரமாக விளங்குகிறது.
  1. உணவு மற்றும் வைக்கோல் (தீவனம்):
  • இந்தியாவில் வேளாண்மையை அனைத்து மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது பலகோடி கால்நடையை பராமரிக்க வைகோல் மற்றும் தீவனங்களை வேளாண்மை அளிக்கிறது.
  1. பொருளாதார திட்டம்:
  • இந்திய பொருளாதாரத்திற்கு வேளாண்மையை முதுகெலும்பாகும் மற்றும் வேளாண்மையின் செழிப்பு நாட்டின் செழிப்பை குறிக்கும். நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கினை பல குறியீட்டு சுட்டிக்காட்டுகின்றன எடுத்துக்காட்டாக சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து, தொழிலாளர்கள் பெருமளவு விவசாய பொருட்களை ஓரிடத்தினின்று மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதில் அடங்குகிறது. 
  • வேளாண் பொருட்கள் வெளிநாட்டு வாணிபத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. வேளாண்மை வளர்ச்சி என்பது வறுமை ஒழிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  1. பன்னாட்டு – தரப்படுத்தலில் இடம்பெறுதல்:
  • உலக அளவில் இந்திய வேளாண்துறை சில குறிப்பிட்ட பண்டங்களில் நல்ல தரத்தில் இடம்பெற்றுள்ளன நிலக்கடலை உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தையும் அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் புகையிலை உற்பத்தியில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
  • நாட்டு பொருளாதார முன்னேற்றத்திற்கு விவசாய முன்னேற்றம் மிக மிக அத்தியாவசியமானது என்று குறிப்பிடும்போது தான் இந்தியாவின் முக்கியத்துவம் எழுகின்றது. அறிஞர் ரேக்னர் நர்க்ஸ் என்பவரின் கூற்றுப்படி உபரி (அதிக) மக்களை வேளாண்மையிலிருந்து பிரித்தெடுத்து அவர்களை புதிதாக ஆரம்பிக்கும் தொழிற்சாலைகளிலும் கிராமபுறங்களில் செய்யப்படும் பொதுப் பணிகளிலும் வேலைக்கு அமர்த்துதல் வேண்டும். 
  • இவ்வாறாக செய்வதின் வாயிலாக விவசாய உற்பத்தித்திறனை ஒருபுறம் அதிகரிப்பதோடு மறுபுறத்தில் சிறிய உபரி உழைப்பாளர்களுக்கு அவர்களுக்காக சிறிய புதிய தொழில் அமைப்புகளையும் அமைத்துக் கொள்ளலாம். 
  • இந்திய வேளாண்மை மிகப்பெரிய மற்றும் முக்கியமான துறை மட்டுமின்றி மிகப் பின்தங்கிய நிலையிலும் உள்ளது முழு பொருளாதாரமும் வளர்ச்சி அடைய விவசாய வளர்ச்சி மிக மிக முக்கியமானதாகும்.  

பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மையின் பங்கு:

  • ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மை அளிக்கும் நான்கு வகையான பங்குகளை சைமன் குஸ்நட் அவர்கள் கீழ்காணுமாறு விளக்குகிறார். 
  • பொருட்களின் பங்களிப்பு (உணவு மற்றும் கச்சாப் பொருட்களை கிடைக்கச் செய்தல்)
  • அங்காடியின் பங்களிப்போர் (விவசாயம்சாரா உற்பத்தி துறையில் உற்பத்தியாளர் பொருட்களுக்கும் நுகர்வு பொருட்களுக்கும் அங்காடியை ஏற்படுத்திக் கொடுத்தல்)
  • உற்பத்தி காரணிகளில் பங்களிப்பு (வேளாண் சாரா துறைக்கு உழைப்பையும் முதலையும் கிடைக்கச் செய்தல்)
  • அயல்நாட்டு வாணிபத்திற்கு பங்களிப்பு

வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு:

  • ஒரு நாடு வளர்ச்சி அடையும் பாதையில் செல்லும்போது வேளாண்மைக்கும் மற்றும் தொழிற்சாலைக்குமிடையே உள்ள ஒன்றோடொன்று – சார்ந்த நிலை கீழ்கண்ட தொடர்ச்சிகளால் வலுப்படுத்தப்படுகிறது அவை (தொடர்ச்சி)
  • உற்பத்தி தொடர்ச்சி 
  • தேவை தொடர்ச்சி
  • சேமிப்பு மற்றும் முதலீட்டு தொடர்ச்சி  
  1. உற்பத்தி தொடர்ச்சி:
  • இத்தொடர்ச்சி வேளாண்மையும் தொழிலும் உற்பத்தி இடு பொருட்களுக்காக ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதால் ஏற்படுகிறது அதாவது பருத்தி, சணல், கரும்பு போன்ற வேளாண் பொருட்களை வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு அளிப்பதன் வாயிலாகவும், ரசாயன உரங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்சாரம் போன்ற தொழிலின் உற்பத்தியை வேளாண்மைத் துறைக்கு அளிப்பதாலும் இதன் தொடர்ச்சி 50 ஆண்டுகள் வரை நீடிக்கிறது மேலும் இது வேளாண்மை துறை நவீனமாகுதலையும் பிரதிபலிக்கிறது.
  1. தேவை தொடர்ச்சி:
  • வருமானம் மற்றும் தொழில்மயமாகுதலின் விளைவானது உணவு மற்றும் விவசாயக் கச்சாப்பொருட்களின் தேவையை பாதிக்கிறது என்பது பொதுவாக உணரப்பட்டுள்ளது.
  1. சேமிப்பு மற்றும் முதலீட்டில் தொடர்ச்சி:
  • கிராம வருமானம் தொழிற்சாலையின் நுகர்வு பொருட்களாகிய ஆடைகள், காய்கறிகள், சர்க்கரை, சமையல் எண்ணெய், தொலைக்காட்சிப் பெட்டிகள், துணி துவைக்கும் இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் பாதிப்புகள் இணையாக குறிப்பிடத்தக்கது சமீபத்தில் நடத்திய ஆய்வு கிராமப்புற கடைவீதிகளில் நகர்வானது நகர்ப்புற அங்காடியை தாண்டி விடுகிறது என்று முடிவு செய்கிறது.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here