Categories: Latest Post

Aadi 18 thirunal nalvalthukal 2022| ஆடி 18 திருநாள் நல்வாழ்த்துக்கள் 2022

Published by
Gomathi Rajeshkumar

ஆடி 18 திருநாள் நல்வாழ்த்துக்கள் 2022: நல்ல மழை பெய்து பயிர்கள் செலுத்தி இருக்கும் மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் பெய்யும் பருவ மழையால் ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வழியும்.  இதன் அடிப்படையிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். ஆடி மாதத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம்.. இந்த கணக்கில்தான் தை  தேதி பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.  இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என கூறியுள்ளனர்.

Fill the Form and Get All The Latest Job Alerts

ஆடி 18 திருநாள் நல்வாழ்த்துக்கள் 2022

ஆடி மாதத்தில் வரும் 18ஆம் நாள் அன்று பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடி 18 என்கிற விழா கொண்டாடப்படுகிறது. நம் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் இந்நாளில் பெண்கள் புது தாலி மாற்றிக் கொள்வது, ஆறுகளில் வழிபாடு செய்வது போன்ற விழாக்களை முன்னெடுப்பர். இதன் மூலம் மாங்கல்ய பலம், செல்வம் பெரும் என்பது ஐதீகம்.

வேறு பெயர்கள்

ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாகத் தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

பண்டிகை

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு படித்துறை மற்றும் மேலும் அங்குள்ள 3 படித்துறைகளில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியன தயார் செய்து, படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

விழா நிகழ்வுகள்

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

TNPSC Field Surveyor & Draftsman Notification 2022

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code:AUG15(15% off on all)

TNUSRB PC 2022 test series

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in

Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

Gomathi Rajeshkumar

Share
Published by
Gomathi Rajeshkumar

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும் தேர்வு முறை

TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024: தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் TNPSC குரூப் 4 பாடத்திட்டம் 2024 மற்றும்…

10 hours ago

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள்

TNPSC குரூப் 1 சம்பள விவரங்கள் 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள குரூப் I சேவைகளில்…

12 hours ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

12 hours ago

SSC CHSL அறிவிப்பு 2024 வெளியீடு – 3712 காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

SSC CHSL அறிவிப்பு 2024: பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை (CHSL) தேர்வு என்பது அரசு துறைகள்…

13 hours ago

TNPSC குரூப் 1 வயது வரம்பு & தகுதி அனைத்து பதவிகளுக்கும்

TNPSC குரூப் 1 வயது வரம்பு TNPSC Group 1 Age Limit: TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. TNPSC…

14 hours ago

TNPSC Free Notes Chemistry – Elements and Compounds Ores

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

15 hours ago