Traditional Dress of Tamil Nadu | தமிழர்களின் உடை

Published by
bsudharshana

Traditional Dress of Tamil Nadu: மனித நாகரிகத்தின் வளர்ச்சிநிலை உடையாகும். மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தும் பல காரணிகளுள் உடையும் ஒன்று. உடையின் முதன்மைச் செயற்பாடு, அதை அணிபவருக்கு உடல் வசதியைக் கொடுப்பது ஆகும். வெப்பமான காலநிலைகளில், சூரிய வெப்பத்திலிருந்தும், காற்றில் இருந்தும் உடலைப் பாதுகாக்க வேண்டும். குளிரான காலநிலைகளில், உடையின் வெப்பக் காப்பு இயல்பு முக்கியமானது. இதன் மூலம், உடல், வெப்பத்தைச் சூழலுக்கு இழப்பதை உடை தடுக்க முடியும். பருவகாலங்களையும், புவியியல் அமைவிடங்களையும் பொறுத்து, உடையின் தன்மைகள் மாறுகின்றன. சூடான பருவங்களிலும், வெப்பப் பகுதிகளிலும் மெல்லியனவும், குறைந்த அடுக்குகளைக் கொண்டனவுமான உடைகள் பயன்படுகின்றன. Traditional Dress of Tamil Nadu தொடர்பான தகவல்களை, நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Dress of Tamil Nadu

“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்பது பழமொழி. ஆடை மக்களை மவுசுக்குரியவர் களாக்குகிறது. நாகரிகத்தின் நல்லிணக்கமாக திகழ்கிறது. உலக நாகரிகத்தின் ஊற்றுக் கண்ணாய் விளங்கிய தமிழ்ச்சமூகம் உடையை மானம் காக்க உருவாக்கியது. நாளடைவில் உடையே நமது சமூகத்தின் கலாசார குறியீடாக மாறி விட்டது.

ஆதி காலத்தில் கடும் குளிர், வெப்பம், மழை போன்றவற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இலைகளையும், மிருகங் களின் தோல்களையுமே உடுத்தி வந்தது மனித சமுதாயம். அதன் வெளிப்பாடாகத்தான் தமிழ்க் கடவுளின் தந்தையும், எல்லோருக்கும் இறைவனுமான சிவபெருமான் புலித் தோலை இடுப்பில் கட்டி உள்ளார்.

தமிழரின் உடை நோக்கிய அழகியல், தத்துவம், நெசவுத் தொழில்நுட்பம், காலங்காலமாக உடுத்த உடைகள், இன்றைய உடைகள் ஆகியவை தமிழர் உடை என்ற கருத்தியலில் கருப்பொருள் ஆகின்றன. தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்து தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை.

நாகரிகம் வளர, வளர மனிதர்கள் தாங்கள் வாழும் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பருத்தி, கம்பளி, சணல் போன்றவற்றால் ஆடையை நெய்து அணிய தொடங்கினர்.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

Dress of Tamil Nadu History

  • தமிழகத்தை பொறுத்த வரை, பருத்தி மட்டுமே முதலில் ஆடை நெய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது. பால் நுரையை ஒத்த மென்மையான மஸ்லின் துணியும், சீனாவில் பிறந்த பட்டும் நம் பண்டைத் தமிழ் துறைமுகங்களுக்கும் கடல் வழியே இறக்குமதியாகின. பட்டு ஆடைகள் இறைவனும், செல்வந்தரும், அரச குலத்தோரும் அணியும் உயர்நிலை பெற்றன. சங்க காலம் வரை உடையைத் தைத்து அணியும் பழக்கம் நம்மிடையே இல்லை. சிற்றாடை, மேலாடை என பல வகை நீளங்களில், இடையிலும், மார்பிலும் கட்டிக் கொள்ளப்பட்டன.
  • பண்டைய கோவில் சிற்பங்கள், ஓவியங்கள் வெறும் கற்பனையல்ல. அவை மேலாடை அணியும் நாகரிகம் வந்த பின்னரே, முன்னைய நிலை இன்று ஆபாசமாகத் தோன்றுகின்றது. உயர்குடிப் பெண்கள் கச்சைக்கு மேலாகச் சட்டை அணிவதும், சில நூற்றண்டுகளின் முன் தோன்றிய வழக்கமே. மற்றைய பெண்களில் ஒரு பகுதியினர் மேல் சட்டையின்றி தாவணிச் சேலை உடுத்துவதும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் நெஞ்சோடு மட்டும் சேலை கட்டுவதும் வழக்கமாக தொடர்ந்தது. இப் போக்கை இன்றும் கிராமங்களில் காணலாம்.
  • இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது.
  • ஆண்கள் அணியும் சட்டையும் அரைக்கால் அல்லது முழுக்கால் சட்டையும் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களால் அறியப்படாதவையாகும். ஆங்கிலேயரும் நவாவுப் படையினர் எனப்படும் வடநாட்டு இஸ்லாமியர்களும் வந்த பின்னரே, உடம்பின் மேற்பகுதியில் ‘தைத்த சட்டை’ அணியும் வழக்கம் புகுந்தது.

Also Read: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

Dress Worn by the people of Tamil Nadu

பெரும்பாலான நகரவாழ் தமிழ் ஆண்கள் நீள்சல்லடம் மற்றும் மேற்சட்டை உடுத்தும் வழக்கம் உடையவர்கள். பெண்களும் அவ்வாறு உடுத்தும் வழக்கம் பரவி வந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள இளம்பெண்கள் சுடிதார், சல்வார்-கமீஸ் அல்லது பஞ்சாபி உடை எனப்படும் வட இந்திய உடை உடுத்துவதே அதிகம் எனலாம். திருமணமான பெண்கள் பொது இடங்களுக்குப் பெரும்பாலும் புடவை அணிவர். சிற்றூர்களில் வாழும் ஆண்கள் பெரும்பாலும் வேட்டியும், பெண்கள் பெரும்பாலும் புடவையும் அணிவர். வயது வந்த இளம்பெண்கள் ஏறத்தாழ 20 வயது வரை தாவணி அணியும் வழக்கமும் உண்டு. சிறுமிகள் பாவாடை-சட்டை அணிவதும் வழக்கம். வேட்டியும் புடவையும் தமிழ் நிலப்பகுதிகளில் பொது இடங்களில் ஏற்புடைய கண்ணியமான உடையாக விளங்குகிறது. ஆண்கள் அலுவல் அல்லாத நேரங்களில், இரவில், ஓய்வு நேரங்களில் லுங்கி அணிவதுண்டு.

Also Read: Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை

The Traditional Dress of Tamil Nadu

For Women

திருமணமான பெண்கள் புடவையும், சிறுமிகளுக்கு பாவாடை, சட்டையும், திருமணமாகாத வளர்ந்த பெண்கள் தாவணி போன்ற அழகிய உடைகள் வடிவமைக்கப்பட்டு அணிவது வழக்கமாக உள்ளது. வெப்ப மண்டலப் பகுதியான தமிழகத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த உடைகள் அழகும், அமைதியும் தரவல்லவை. அது மட்டுமல்லாமல், வடக்கில் இருந்து இங்கு வந்து ஆதிக்கம் செலுத்தும் சுடிதார், சல்வார் கமீஸ்களும், லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற மேற்கத்திய உடைகளும் இன்றைக்கு வழக்கத்தில் உள்ளன.

For Men

ஆண்கள் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு வேட்டியும், காற்சட்டையும் அணிவார்கள். அலுவலகங்களுக்கு செல்லும் ஆண்கள், முழுக்கைச் சட்டை மற்றும் காற்சட்டையை அணிவார்கள். ஆண்கள் அலுவல் அல்லாத நேரங்களில், இரவில், ஓய்வு எடுக்கும் நேரங்களில் லுங்கி அணிவதுண்டு.

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

bsudharshana

Adda’s One Liner Important Questions on TNPSC

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு…

3 hours ago

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…

22 hours ago

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

2 days ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

2 days ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago