Tamil Grammar Study Material For TN TRB | தமிழ் இலக்கணம்

Published by
bsudharshana

தமிழ் இலக்கணம் : தமிழ் மொழி  ‘இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,’  என மூன்று பிரிவுகளை உடையது. இவையே ‘முத்தமிழ்’ என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். தமிழ் இலக்கணம் பற்றி விரிவாக பின்வருமாறு காணலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

தமிழ் இலக்கணம் முன்னோட்டம்

பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

  • எழுத்து
  • சொல்
  • பொருள்
  • யாப்பு
  • அணி

இதை பற்றி விரிவாக பின்வருமாறு காணலாம்.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]

எழுத்து

முதலெழுத்து

“எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப”

தொல்காப்பியம்

“உயிரும் உடம்புமாம் முப்பது முதலே”

நன்னூல்

  • ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
  • உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
  • மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
  • உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.

 

சார்பெழுத்துகள்

“உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள

ப ஃகிய இஉ ஐஔ மஃகான்

தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்”

நன்னூல்

இதனையும் பார்க்க: சார்பெழுத்து

  • உயிர்மெய் எழுத்து
  • ஆய்த எழுத்து
  • உயிரளபெடை
  • ஒற்றளபெடை
  • குற்றியலுகரம்
  • குற்றியலிகரம்
  • ஐகாரக் குறுக்கம்
  • ஔகாரக் குறுக்கம்
  • மகரக்குறுக்கம்
  • ஆய்தக்குறுக்கம்

எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.

தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும் ஆகும். அதில் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளைப் பற்றியும் கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

[sso_enhancement_lead_form_manual title=” மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் முக்கியமான கேள்வி மற்றும் பதில்கள் October 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/11/09155742/Formatted-Vetri-monthly-Current-affairs-quiz-pdf-in-tamil-October-2021.pdf”]

எழுத்து குறித்த இலக்கணச் செய்தி

  • எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
  • வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும்.

 

வஞ்சியுரிச்சீர்

  • நேர் இறுதி ஐந்து எழுத்து
  • நிரை இறுதி ஆறு எழுத்து
  • சிறுமை மூன்று எழுத்து
  • பெருமை ஆறு எழுத்து
  • 4 முதல் 6 எழுத்து வரை – குறளடி
  • 7 முதல் 9 எழுத்து வரை – சிந்தடி
  • 10 முதல் 14 எழுத்து வரை – அளவடி
  • 15 முதல் 17 எழுத்து வரை – நெடிலடி
  • 18 முதல் 20 எழுத்து வரை – கழி நெடிலடி

மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.

ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.

Read more: தமிழ்நாட்டின் புவியியல்

சொல்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

எ.கா: வீடு, கண், போ,

 

சொல்லின் வகைகள்

  • பெயர்ச்சொல்
  • வினைச்சொல்
  • இடைச்சொல்
  • உரிச்சொல்

 

பொருள்

பொருள் இரண்டு வகைப்படும். அவை,

  • அகப்பொருள்
  • புறப்பொருள்

தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

[sso_enhancement_lead_form_manual title=”வாராந்திர நடப்பு நிகழ்வுகள் October 2nd Week 2021″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/18150252/Weekly-Current-Affairs-PDF-in-Tamil-2nd-Week-of-October-2021.pdf”]

யாப்பு

யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.

 

யாப்பின் உறுப்புகள்

யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை

  • எழுத்து
  • அசை
  • சீர்
  • தளை
  • அடி
  • தொடை

உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும்.

Read more: Powers of The President of India

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா

 

அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

  • தன்மையணி
  • உவமையணி
  • உருவக அணி
  • பின்வருநிலையணி
  • தற்குறிப்பேற்ற அணி
  • வஞ்சப் புகழ்ச்சியணி
  • வேற்றுமை அணி
  • இல்பொருள் உவமையணி
  • எடுத்துக்காட்டு உவமையணி
  • இரட்டுறமொழிதலணி

 

தமிழ் இலக்கணம் முடிவுரை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இக்கட்டுரை TRB, TNPSC GROUP 2 & 2A, GROUP 1, க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

Coupon code- NOV75-75% OFFER

TNPSC Group – 4 Batch Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

bsudharshana

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர் மாநகர்…

6 hours ago

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

1 day ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

1 day ago

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – உள்ளாட்சி நிதி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago

TNPSC Indian National Movement (INM) Free Notes – Political Association Before Congress- 2

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

1 day ago