Categories: Tamil Current Affairs

Sylendra Babu appointed Tamil Nadu DGP | சைலேந்திர பாபு தமிழக டிஜிபி ஆக பதவி ஏற்றார்

Published by
Ashok kumar M

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.

தமிழக காவல்துறையின் 30-வது டிஜிபியாக டிஜிபி சைலேந்திர பாபு பொறுப்பேற்றுக் கொண்டார். ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்த அவர் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இவர் 1987ஆம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானார். முதன்முதலில் தருமபுரி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராகக் காவல் பணியைத் தொடங்கினார். பின்னர் கோபிச்செட்டிப்பாளையம், சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் அடையாறு துணை ஆணையராகப் பணியாற்றினார்.

2001ஆம் ஆண்டு டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார். 2006ஆம் ஆண்டு ஐஜியாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2008ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு கோவை நகரக் காவல் ஆணையராகச் செயல்பட்டார்.

2012ஆம் ஆண்டு ஏடிஜிபியாகப் பதவி உயர்வு பெற்ற நிலையில், கடலோரக் காவல் குழும ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார். பின்னர் ரயில்வே ஏடிஜிபியாக மாற்றப்பட்டார். 2019ஆம் ஆண்டு டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார். ரயில்வே டிஜிபியாகத் தொடர்ந்தார்.

இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து, 7 டிஜிபிக்கள் போட்டியில் இருந்த நிலையில், இறுதியாக யூபிஎஸ்சி அனுப்பிய பட்டியலில் முதலிடத்தில் இருந்த சைலேந்திர பாபுவை அடுத்த சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து அரசு உத்தரவிட்டது.

***************************************************************

Coupon code- ME77(77% OFFER) +DOUBLE VALIDITY

Practice Now

| Adda247App |

| Adda247TamilYoutube|

| Adda247 Tamil telegram group |

Ashok kumar M

Share
Published by
Ashok kumar M

சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024, விரிவான பாடத்திட்டம் & தேர்வு முறை

சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024: சென்னை உயர்நீதிமன்ற பாடத்திட்டம் 2024, சென்னை உயர்நீதிமன்றம் தேர்வாளர், ரீடர் சீனியர் மாநகர், ஜூனியர்…

1 hour ago

Adda’s One Liner Important Questions on TNPSC

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு…

4 hours ago

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024, 2329 தேர்வாளர், ஓட்டுநர் & பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்

சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024: சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு 2024 தேர்வாளர், வாசகர் மூத்த மாநகர், ஜூனியர்…

23 hours ago

TNPSC Group 1 Notification 2024, Last to Apply Online

TNPSC குரூப் 1 அறிவிப்பு 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு- I…

2 days ago

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள்:

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB,…

2 days ago

Top 30 Physics MCQs for Competitive Exams – 27 April 2024

பல்வேறு போட்டித் தேர்வுகளில் இயற்பியல் முக்கியப் பங்காற்றுகிறது, விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தயாரிப்பில் உதவ, நாங்கள் 30 கேள்விகளை (MCQs)  தொகுத்துள்ளோம்.…

2 days ago