Tamil govt jobs   »   RRB Group D 2021 Application Modification...   »   RRB Group D 2021 Application Modification...

RRB Group D 2021 Application Modification Link | RRB குரூப் D 2021 விண்ணப்ப திருத்தல் இணைப்பு

RRB Group D 2021 Application Modification Link: RRB குரூப் D 2021 இன் பல ஆன்லைன் விண்ணப்பங்கள், RRB அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன. RRB சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் RRB குரூப் D விண்ணப்ப திருத்தல் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. 2021 டிசம்பர் 15 முதல் 2021 டிசம்பர் 26 வரை விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்ய, விண்ணப்பதாரர்களுக்கு RRB குரூப் D திருத்த இணைப்பு செயல்படுத்தப்பட்டு, விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஏற்றுக்கொல்லப்படும் என்று தெரிவித்துள்ளது. RRB குரூப் D திருத்த இணைப்பு, RRC யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான @rrbcdg.gov.in இல் செயல்படுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் RRB Group D 2021 Application Modification Link குறித்தான முழுமையான அறிவிப்பைப் படிக்க, கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொத்தானைக் கிளிக் செய்யலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

RRB Group D 2021 Application Modification Link Overview 

RRB Group D 2021 Application Modification Link | RRB குரூப் D 2021 விண்ணப்ப திருத்தல் இணைப்பு_3.1
RRB Group D 2021 Application Modification Link Notification

RRB குரூப் D விண்ணப்ப திருத்தல் இணைப்புக்கான அறிவிப்பு, ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் கையொப்பங்களைப் பதிவேற்றும் போது, சில பிழைகளைச் செய்ததால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவ்வாறு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, RRB குரூப் D விண்ணப்ப திருத்த இணைப்பு செயல்படுத்தப்படும். அவர்கள் இப்போது திருத்தங்களைச் செய்யலாம் மற்றும் அவர்களின் பதிவை திருத்தலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்பு, விண்ணப்ப நிலையைச் சரிபார்க்க முயலும்போது, விண்ணப்பங்கள் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பத்தின் நிலையைப் பார்க்க முடியும், மற்றவர்களுக்கு பிழைச் சுட்டும் செய்தி தான் வரும்.

S.No. Name of the RRC Region RRC RRB Modification Link
1 Central Railway (Mumbai)
2 East Central Railway (Hajipur)
3 East Coast Railway (Bhubaneswar)
4 Eastern Railway (Kolkata)
5 North Central Railway (Allahabad)
6 North Eastern Railway (Gorakhpur)
7 Northeast Frontier Railway (Guwahati)
8 Northern Railway (New Delhi)
9 North Western Railway(Jaipur)
10 Southern Railway(Chennai)
11 South Western Railway(Hubli)
12 South Central Railway(Secundrabad)
13 South East Central Railway(Bilaspur)
14 South Eastern Railway (Kolkata)
15 West Central Railway(Jabalpur)
16 Western Railway(Mumbai)

Official Notification regarding RRB Group D Application Modification Link 

RRB Group D 2021 Application Modification Link Activation Date | விண்ணப்ப திருத்தல் இணைப்பு செயல்படுத்தப்படும் தேதி

RRB வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, RRB குரூப் D விண்ணப்ப திருத்தல் இணைப்பு, 15 டிசம்பர் 2021 முதல் 26 டிசம்பர் 2021 வரை அனைத்து RRB பிராந்திய அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் செயல்படுத்தப்படும். இந்த இணைப்பின் மூலம், விண்ணப்பதாரர்கள் தங்களின் RRB குரூப் D ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள், தவறான புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்கள் காரணமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், திருத்தங்களைச் செய்யலாம். RRB குரூப் D விண்ணப்ப திருத்தல் இணைப்பு செயல்படுத்தப்பட்டவுடன், அதனை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்யவும்.

Read More: RRB Group D 2021 Exam Dates Out

RRB Group D 2021 Application Status |விண்ணப்ப நிலை

விண்ணப்ப திருத்தலுக்கு, உங்கள் பிராந்திய இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது மேலே உள்ள நேரடி இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.
பதிவு எண், பிறந்த தேதி போன்ற சான்றுகளை உள்ளிடவும்.
பின்னர் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உங்கள் RRB Group D விண்ணப்ப நிலை திரையில் காட்டப்படும்.

MOCK TEST DISCUSSION BATCH RRB NTPC CBT 2
MOCK TEST DISCUSSION BATCH RRB NTPC CBT 2

RRB Group D 2021 Application Modification – Photograph & Signature Upload | புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம்

RRB குரூப் D விண்ணப்பப் படிவங்களில் திருத்தங்களைச் செய்யும்போது, ​​விண்ணப்பதாரர்கள் புகைப்படங்கள் மற்றும் கையொப்பங்களைப் பதிவேற்றும்போது, பின்வரும் விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

RRB Group D Photo Upload | புகைப்படப் பதிவேற்றம்

விண்ணப்பதாரர்கள் புகைப்பட பதிவேற்றம் எனும் தாவலைக் கிளிக் செய்து, பின்வரும் விவரக்குறிப்புகளுடன் வண்ண புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும்.

  • 100 DPI தெளிவுத்திறனுடன் ஸ்கேன் செய்யப்பட்ட JPG/JPEG வடிவத்தில் 35mm X 45mm அல்லது 320 x 240 பிக்சல்கள் அளவுள்ள வெள்ளை/வெளிர் வண்ணப் பின்னணியுடன் கூடிய வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படமாக இருக்க வேண்டும்.
  • புகைப்படத்தின் அளவு 20-50KB வரை இருக்க வேண்டும்.
    வண்ணப் புகைப்படம் 01.01.2019 அன்று அல்லது அதற்குப் பிறகு தொழில்முறை ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • மொபைல் மற்றும் சுயமாக இயற்றப்பட்ட உருவப்படங்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
  • புகைப்படத்தில் தொப்பி மற்றும் சன்கிளாஸ் அணியாமல், விண்ணப்பதாரரின் முன் பார்வை தெளிவாக இருக்க வேண்டும்.
  • கேமராவை நேரடியாகப் பார்க்கும் முழு முகக் காட்சியுடன், புகைப்படத்தின் பகுதியில் குறைந்தது 50% முகம் இருக்க வேண்டும்.
  • முகத்தின் முக்கிய அம்சங்கள் தலை முடி, துணி அல்லது நிழலால் மறைக்கப்பட்டிருக்க கூடாது.
  • நெற்றி, கண்கள், மூக்கு மற்றும் கன்னம் தெளிவாகத் தெரிய வேண்டும்.
  • விண்ணப்பதாரர் கண்ணாடி அணிந்திருந்தால், புகைப்படத்தில் எந்த கண்ணிலும் பிரதிபலிப்புகள் இருக்கக்கூடாது மற்றும் கண்கள் தெளிவாக தெரிய வேண்டும்.
  • CBT, PET, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய நாட்களில் விண்ணப்பதாரரின் தோற்றத்துடன் புகைப்படம் பொருந்த வேண்டும். கண்ணாடிகளை அணிந்து, மீசை மற்றும் தாடியை வைத்து அல்லது ஷேவ் செய்து அல்லது ஒரு குறிப்பிட்ட சிகை அலங்காரத்துடன் புகைப்படம் எடுத்த விண்ணப்பதாரர்கள் இதை கருத்தில் கொள்ளவேண்டும்.
  • CBT, PET, DV மற்றும் மருத்துவப் பரீட்சையின் போது, வேறு ஏதேனும் தனித்துவமான அம்சங்கள் கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரர் ஆட்சேர்ப்புச் செயல்பாட்டிலிருந்து நிராகரிக்கப்படுவார்.
  • PwBD விண்ணப்பதாரர்கள், ஊனமுற்றோர் சான்றிதழில் பயன்படுத்தப்படும் முழு உடல் கொண்ட புகைப்படத்தை அல்லாமல், மேற்கூறிய விவரக்குறிப்புகளின்படி பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படங்களை மட்டுமே பதிவேற்ற வேண்டும்.
  • ஆட்சேர்ப்புச் செயல்பாட்டின் போது, மேலும் பயன்படுத்த அதே புகைப்படத்தின் குறைந்தது 12 (பன்னிரெண்டு) நகல்களை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்குமாரு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More: RRB NTPC Result 2021 CEN 01/2019 For CBT 1 Release Date Out

RRB Group D Signature Upload | கையொப்ப பதிவேற்றம்

விண்ணப்பதாரர்கள் கையொப்ப பதிவேற்றம் எனும் தாவலைக் கிளிக் செய்து, பின்வரும் விவரக்குறிப்புகளுடன் கையொப்பத்தைப் பதிவேற்ற வேண்டும்.

  • விண்ணப்பதாரர் 50 மிமீ x 20 மிமீ அளவிலான ஒரு கோட்டிற்குள், கருப்பு மை பேனாவில், வெள்ளைத் தாளில் கையொப்பமிட வேண்டும்.
  • கையொப்பம் பெரிய எழுத்து அல்லது இயைபற்ற எழுத்துக்களில் இல்லாமல், ஓடும் போக்குடையதாக இருக்க வேண்டும்.
  • படம் 100 DPI தெளிவுத்திறனுடன் ஸ்கேன் செய்யப்பட்டு JPG/JPEG வடிவத்தில் இருக்க வேண்டும்.
  • அதன் பரிமாணம் 50 மிமீ x 20 மிமீ அல்லது 140 x 60 பிக்சல்களாக இருக்க வேண்டும்.
  • கோப்பின் அளவு 10KB-40KB இடையே இருக்க வேண்டும்.

குறிப்புகள்:

  1. கையொப்பம் விண்ணப்பதாரரின் கையொப்பமாக இருக்க வேண்டும், வேறு எந்த நபரின் கையெழுத்தும் அல்ல.
  2. பதிவின் போது பெறப்பட்ட விண்ணப்பதாரர்களின் கையொப்பம், CBT/PET/ஆவண சரிபார்ப்பு/மருத்துவ ஆய்வு ஆகியவற்றின் போது பதிவேற்றப்பட்ட கையொப்பத்துடன் பொருந்த வேண்டும்.
  3. கையொப்பம் பொருந்தாதது கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரர் தகுதி நீக்கம் செய்யப்படுவார், சட்டப்பூர்வ வழக்கு தொடரப்படும் மற்றும் விண்ணப்பதாரர் RRB கள் அல்லது RRCகளால் நடத்தப்படும் அனைத்து ரயில்வே ஆட்சேர்ப்புகளிலும் பங்குபெறுவதில் இருந்து, வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்படுவார்.

RRB Group D 2021 Application Modification FAQs

Q1. When will RRB Group D Application Modification link be activated?

Ans. RRB Group D application modification link will be activated from 15th to 26th December 2021.

Q2. What is the purpose of the RRB Group D Application Modification link?

Ans. RRB Group D application modification link has been activated for the candidates whose applications were rejected due to an error in signature and photograph.

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DREAM(75% Offer)

RRB NTPC CBT 2 REVISION BATCH
RRB NTPC CBT 2 REVISION BATCH

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. When will RRB Group D Application Modification link be activated?

Ans. RRB Group D application modification link will be activated from 15th to 26th December 2021.

Q2. What is the purpose of the RRB Group D Application Modification link?

Ans. RRB Group D application modification link has been activated for the candidates whose applications were rejected due to an error in signature and photograph.