Tamil govt jobs   »   Tamil Current Affairs   »   Daily Current Affairs in Tamil

Daily Current Affairs in Tamil | தினசரி நடப்பு நிகழ்வுகள் – 4 செப்டம்பர் 2021

Daily Current Affairs in Tamil- நடப்பு விவகாரங்கள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IB அல்லது BIS தேர்வுகளுக்கான தலைப்புச் செய்திகளாக மாற்றிய முக்கியமான செய்திகளுடன் தினசரி பொது அறிவு (Daily Current Affairs or Today Current Affairs) புதுப்பிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. தினசரி பொது அறிவு புதுப்பிப்பு என்பது நாள் முழுவதும் நடைபெற்ற முக்கியமான செய்திகளின் முழுமையான தொகுப்பாகும். எனவே, நடப்பு விவகாரங்கள் (Daily Current Affairs ) பகுதியைத் தயாரிக்க உங்களுக்கு உதவ செப்டம்பர்  4, 2021 யின் பொது அறிவு புதுப்பிப்பு இங்கே.மேலும் வாராந்திர நடப்பு விவகாரங்கள் ( Weekly Current Affairs), மாதாந்திர நடப்பு விவகாரங்கள் (Monthly current Affairs), TNPSC தேர்வுகளுக்கான தமிழில் PDF ஐ வழங்குகிறது இந்த பகுதியைப் படித்த பிறகு, நடப்பு விவகார வினாடி வினாவை (Daily Current Affairs Quiz) வெற்றிகரமாக முயற்சி செய்யலாம்.

Read More : Daily Current Affairs In Tamil 3 September 2021

National Current Affairs in Tamil

  1. IMF இந்தியாவின் சிறப்பு வரைதல் உரிமைகளுக்கான (SDR) ஒதுக்கீட்டை அதிகரிக்கிறது.
IMF increases India’s quota of Special Drawing Rights (SDR)
IMF increases India’s quota of Special Drawing Rights (SDR)
  • அனைத்துலக நாணய நிதியம் (IMF), இந்தியாவுக்கு 12.57 பில்லியன் (சுமார் 17.86 பில்லியன் USD க்கு சமம்) சிறப்பு வரைவு உரிமைகளை(SDR) ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மொத்த SDR வைத்திருத்தல், 13.66 பில்லியனாக உயர்ந்துள்ளது (சுமார் 19.41 பில்லியன் USD க்கு சமம்).
  • SDR இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்புக்களின் (FER) ஒரு உட்கூறாகும். எனவே அந்நிய செலாவணி இருப்பு (FER) இப்போது அதிகரித்துள்ளது. IMF அதன் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் மொத்தமாக SDR 456 பில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது, அதில் இந்தியா SDR 12.57 ஐ பெற்றுள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • IMF இன் தலைமையகம்: வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா;
  • IMF இன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர்: கிறிஸ்டலினா ஜார்ஜீவா;
  • IMF இன் தலைமை பொருளாதார நிபுணர்: கீதா கோபிநாத்.

 

State Current Affairs in Tamil

2. மகாராஷ்டிரா, புனேவில் ராஜீவ் காந்தியின் பெயரில், அறிவியல் நகரத்தை அமைக்க உள்ளது.

Maharashtra to set up science city named after Rajiv Gandhi in Pune
Maharashtra to set up science city named after Rajiv Gandhi in Pune
  • மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பதற்காக, மகாராஷ்டிரா அரசு புனே அருகே உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் என்ற இடத்தில், உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நகரத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • ‘பாரத ரத்னா ராஜீவ் காந்தி அறிவியல் கண்டுபிடிப்பு நகரம்’ என்ற பெயர்கொண்ட அறிவியல் மையம், PCMC பகுதியில் எட்டு ஏக்கர் வளாகத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். PCMC பகுதியில் அறிவியல் நகரத்தை உருவாக்க ரூ. 191 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • மகாராஷ்டிரா ஆளுநர்: பகத் சிங் கோஷ்யாரி;
  • மகாராஷ்டிரா தலைநகர்: மும்பை;
  • மகாராஷ்டிரா முதல்வர்: உத்தவ் தாக்கரே.

Read Also :Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil August 2021

Banking Current Affairs in Tamil

3. HDFC லைஃப், எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸை ₹ 6,687 கோடிக்கு வாங்குகிறது.

HDFC Life to acquire Exide Life Insurance for ₹6,687 crore
HDFC Life to acquire Exide Life Insurance for ₹6,687 crore
  • HDFC லைஃப், எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை, ஒரு பங்கு மற்றும் ரொக்க ஒப்பந்தத்தில் ரூ. 6887 கோடிக்கு வாங்குவதாக அறிவித்துள்ளது. ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, எக்ஸைட் லைஃப், HDFC லைஃப் உடன் இணைக்கப்படும்.
  • எக்ஸைட் லைஃப் என்பது பேட்டரி தயாரிப்பாளர் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸிற்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனம் ஆகும். இந்த கையகப்படுத்தல், ஆயுள் காப்பீட்டு துறையில், முதல் மற்றும் மிகப்பெரிய கையகப்படுத்தல்களில் ஒன்றாகும்.

ஒப்பந்தம் பற்றி:

  • மொத்த ஒப்பந்த மதிப்பான ரூ. 6,887 கோடியிலிருந்து, HDFC லைஃப் ரூ. 725 கோடியை ரொக்கமாகவும், மீதி தொகையை பங்குகளின் வடிவத்திலும் கொடுக்கும்.
  • HDFC லைஃப் நிறுவனம், ரூ. 10 முக மதிப்புடைய 87.02 மில்லியன் முதலீட்டு பங்குகளை, பங்கிற்கு ரூ. 685 என்ற விலையில், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கும்.
  • கையகப்படுத்தலுக்குப் பிறகு, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் 4.1 சதவிகித பங்குகளை, இணைந்த HDFC லைஃபிலும், அடமானக் கடன் வழங்கும் HDFC லிமிடெட், 47.9 சதவிகிதத்தை வைத்திருக்கும். தற்போது, ​​HDFC லிமிடெட், HDFC லைஃப் நிறுவனத்தில், 49.9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • HDFC லைஃப் தலைமையகம்: மும்பை;
  • HDFC லைஃப் CEO: விபா படல்கர்;
  • HDFC லைஃப் நிறுவப்பட்டது: 2000.

 

Appointments Current Affairs in Tamil

4. வர்திகா சுக்லா, இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முதல் பெண் CMD ஆக நியமிக்கப்பட்டார்.

Vartika Shukla becomes first woman CMD of Engineers India Ltd
Vartika Shukla becomes first woman CMD of Engineers India Ltd
  • வர்திகா சுக்லா, பொதுத்துறை நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்டின் முதல் பெண் தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.
  • எரிபொருட்கள், நிலக்கரி வளிமமாக்கம், குப்பையிலிருந்து எரிபொருள் மற்றும் ஹைட்ரஜன் ஆற்றல் உள்ளிட்ட நிறுவனத்தின் புதுமையான ஆற்றல் திட்டங்களுக்கு, அவர் தலைமை தாங்கினார்.

வர்த்திகா சுக்லாவை பற்றி:

  •  கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ரசாயனப்         பொறியியலில் பட்டதாரியான சுக்லா, 1988 இல் EIL இல் சேர்ந்தார்.
  • இவர் சுத்திகரிப்பு, எரிவாயு பதப்படுத்துதல், பெட்ரோலிய வேதிமங்கள் மற்றும் உரங்கள் ஆகியவற்றில் வடிவமைப்பு, பொறியியல் மற்றும் செயல்படுத்தல் உள்ளிட்ட விரிவான ஆலோசனை அனுபவம் பெற்றவர்.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவப்பட்டது: 1965.

 

Read Also : Monthly Current Affairs PDF in Tamil August 2021

Summits and Conferences Current Affairs in Tamil

5. 2021 ஆம் ஆண்டின், 6 வது கிழக்கு பொருளாதார மன்றத்தில், பிரதமர் மோடி காணொளியில் உரையாற்றினார்.

PM Modi Virtually Addresses 6th Eastern Economic Forum 2021
PM Modi Virtually Addresses 6th Eastern Economic Forum 2021
  • ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 6 வது கிழக்கு பொருளாதார மன்றத்தின் (EEF) பொது அமர்வில், பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகராக உரையாற்றினார்.
  • முன்னணி இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை உள்ளடக்கிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமையிலான இந்திய தூதுக்குழு, ரஷ்யாவில் நடைபெறும் EEF 2021 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது.
  • EEF இன் இன்னொரு பகுதியாக, எரிசக்தி துறையில் இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய ரஷ்ய எரிசக்தி அமைச்சர் நிகோலே சுல்கினோவையும், எரிவாயு துறையில் உள்ள இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை விவாதிக்க ரஷ்யாவின் தொலை கிழக்கு மற்றும் ஆர்க்டிக் அபிவிருத்தி அமைச்சர் அலெக்ஸி செகுன்கோவுடனும், இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் சந்திப்பு மேற்கொள்வார். இந்தியா-ரஷ்யா வணிக உரையாடலுக்கு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை அமைச்சர் இணைத் தலைவராக இருப்பார்.

 

6. சர்வதேச காலநிலை உச்சி மாநாடு 2020-21 ஐ இந்தியா நடத்துகிறது.

India to host conference on International Climate Summit 2020-21
India to host conference on International Climate Summit 2020-21
  • இந்தியா, சுத்தமான ஆற்றலுக்கு மாறுவதற்கான ஒரு உரையாடலை உருவாக்க, சர்வதேச காலநிலை உச்சி மாநாடு (ICS) 2020-21 இன், ஒரு முக்கிய மாநாட்டை நடத்த உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், தொழில் தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள், காலநிலை உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறார்கள்.
  • CSIR, தேசிய இரசாயன ஆய்வகத்தின் இயக்குனர், டாக்டர் ஆஷிஷ் லேலே, பருவநிலை மாற்றத்தின் எதிர்கால தணிப்பு உத்திகளுக்கான மாநாட்டின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்த உத்திகளை பின்பற்ற வேண்டிய அவசியம், வழக்கமான எரிபொருட்களை சார்ந்திருப்பதால் எழுந்தன.

Sports Current Affairs in Tamil

7. டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: மணீஷ் நர்வால் 50 மீ கலப்பு கைத்துப்பாக்கிச் சூட்டில் தங்கம் வென்றார்.

Tokyo Paralympics: Manish Narwal wins gold in 50m Mixed Pistol
Tokyo Paralympics: Manish Narwal wins gold in 50m Mixed Pistol
  • அசாகா துப்பாக்கிச் சூட்டு எல்லையில் நடந்த P4 – கலப்பு 50 மீ கைத்துப்பாக்கிச் சூடு SH 1 இறுதி போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங்கராஜ் அதானா முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.
  • 19 வயதான மணீஷ், 218.2 புள்ளிகள் குவித்து தங்கத்தை வென்று, பாராலிம்பிக் சாதனையை படைத்தார். சிங்கராஜ் 216.7 புள்ளிகளுடன் டோக்கியோ பாராலிம்பிக்கில் தனது இரண்டாவது பதக்கத்தை வென்றார். ரஷ்ய பாராலிம்பிக் கமிட்டியின் (RPC) செர்ஜி மாலிஷேவ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உள்ளது. இது இப்போது, மூன்று தங்கம், ஏழு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • இது பாரா விளையாட்டுக்களின் ஒரே பதிப்பில், இந்தியா வென்ற பதக்கங்களின் சிறந்த எண்ணிக்கையாகும். இது ரியோ 2016 இல் நான்கு பதக்கங்களையும், 1984 பாராலிம்பிக்கில் நான்கு பதக்கங்களையும் வென்றிருந்தது.

 

Read Also : Monthly Current Affairs Quiz PDF in Tamil August 2021 Important Q&A

 

8. பாராலிம்பிக்ஸ் 2020: வில்வித்தைக்காரர் ஹர்விந்தர் சிங், ஆண்களுக்கான தனிநபர் ரீகர்வ் போட்டியில், வெண்கலம் வென்றார்.

Paralympics 2020: Archer Harvinder Singh Clinches Bronze in Men’s Individual Recurve
Paralympics 2020: Archer Harvinder Singh Clinches Bronze in Men’s Individual Recurve
  • பாராலிம்பிக்ஸ் 2020 இல், இந்தியாவின் வில்வித்தைக்காரர் ஹர்விந்தர் சிங், ஆண்களுக்கான தனிநபர் ரீகர்வ் ஓபனில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 31 வயதுடைய இவர், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வில்வித்தைக்காரர் ஆவார்.
  • இந்த வெற்றியின் மூலம், டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியாவின் பதக்கம் 13 [2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம்] ஐ எட்டியுள்ளது.
  • ஹர்விந்தர் 6-5 என்ற கணக்கில், தென் கொரியாவின் கிம் மின் சூவை தோற்கடித்து, அந்நாளுக்கான இந்தியாவின் மூன்றாவது பதக்கத்தை வென்று, டோக்கியோ 2020 இல் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை 13 ஆக உயர்த்தினார். முன்னதாக, அரையிறுதி சுற்றில், அமெரிக்காவின் கெவின் மாதர் 6-4 என்ற கணக்கில் ஹர்விந்தரை தோற்கடித்தார்.

Ranks and Reports Current Affairs in Tamil

9. 2022 ஆம் ஆண்டின், டைம்ஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.

University of Oxford tops Times World University Rankings 2022
University of Oxford tops Times World University Rankings 2022
  • டைம்ஸ் உயர் கல்வி (THE) உலக பல்கலைக்கழக தரவரிசைகள் 2022 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்திலும், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.
  • இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு, 301-350 இடங்களுக்கு இடையில் உள்ளது. தற்செயலாக, முதல் 350 தரவரிசைகளில் உள்ள ஒரே இந்திய பல்கலைக்கழகம் இதுவாகும்.
  • டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசைகள் 2022, 99 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து 1,662 பல்கலைக்கழகங்களை பதிவு செய்துள்ளது. இந்த தரவரிசைப்படுத்தல், 13 சமநிலைப்பட்ட செயல்திறன் குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது.
  • மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள், முதல் 400 தரவரிசைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன:
  1. IISc பெங்களூர்- 301-350
  2. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT), ரோபர்- 351-400
  3. IIT இந்தூர்- 401-500
  • உலகின் முதல் ஐந்து பல்கலைக்கழகங்கள்:
  1. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து
  2. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அமெரிக்கா
  3. ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
  4. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
  5. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து

 

10. இந்தியா உலகின் 3 வது பெரிய யுனிகார்ன் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது.

India becomes 3rd largest Unicorn ecosystem in the world
India becomes 3rd largest Unicorn ecosystem in the world
  • ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம், ஹுருன் இந்தியா வருங்கால யுனிகார்ன் பட்டியல் 2021 ஐ வெளியிட்டுள்ளது, அதன்படி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய யுனிகார்ன் / ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பாகும்.
  • அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. பட்டியலின் படி, இந்தியாவிற்கு 51 யுனிகார்ன்கள் உள்ளன. அமெரிக்காவிற்கு 396 மற்றும் சீனாவிற்கு 277 யுனிகார்ன்கள் உள்ளன.
  • ஜிலிங்கோ, 310 அமெரிக்க டாலர் நிதியுதவளுடன், இந்தியாவின் தரவரிசையில் உள்ள முதல் யுனிகார்ன் ஆகும். ஜிலிங்கோவின் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
  • ஒரு நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட யுனிகார்ன்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பெங்களூரு இந்தியாவின் முதல் நகரமாக உள்ளது. பெங்களூருவில் 31 யுனிகார்ன்களும், அதை தொடர்ந்து மும்பையில் 12 யுனிகார்ன்களும் உள்ளன.

Miscellaneous Current Affairs in Tamil

11. கனேடிய நகரமான பர்னபியில், செப்டம்பர் 5, கௌரி லங்கேஷ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Canadian City Burnaby to Observe September 5 As Gauri Lankesh Day
Canadian City Burnaby to Observe September 5 As Gauri Lankesh Day
  • கனேடிய நகரமான பர்னபி, செப்டம்பர் 5 ஆம் தேதியை “கௌரி லங்கேஷ் தினம்” என்று இறந்த பத்திரிகையாளருக்கு, அவரது நினைவு தினத்தையொட்டி அறிவித்தது.
  • பர்னபி மேயர் அலுவலகத்திலிருந்து, மைக் ஹர்லீ வெளியிட்ட அறிவிப்பில், கௌரி லங்கேஷ் ஒரு தைரியமான இந்திய பத்திரிகையாளர், அவர் உண்மை மற்றும் நீதிக்காக எழுந்து நின்று, மூடநம்பிக்கைகளை எதிர்த்து, மேலும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என்று இருந்தது.
  • “கௌரி லங்கேஷ் பத்ரிகே” என்ற பத்திரிக்கையை வெளியிட்ட பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ், அவரின் இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டால், செப்டம்பர் 5, 2017 அன்று மாலை, பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே, இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

 

*****************************************************

Coupon code- HAPPY-75% OFFER

 

ADDA247 TAMIL TIIC BATCH STARTS ON SEP 9 2021
ADDA247 TAMIL TIIC BATCH STARTS ON SEP 9 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group