Tamil govt jobs   »   Tamil Current Affairs   »   Daily Current Affairs in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் | Daily Current Affairs in Tamil – 20 நவம்பர் 2021

Daily Current Affairs in Tamil- நடப்பு விவகாரங்கள், TNPSC குரூப் 1, TNPSC குரூப் 2/2A, TNPSC குரூப் 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IB அல்லது BIS தேர்வுகளுக்கான தலைப்புச் செய்திகளாக மாற்றிய முக்கியமான செய்திகளுடன் தினசரி பொது அறிவு (Daily Current Affairs or Today Current Affairs) புதுப்பிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. தினசரி பொது அறிவு புதுப்பிப்பு என்பது நாள் முழுவதும் நடைபெற்ற முக்கியமான செய்திகளின் முழுமையான தொகுப்பாகும். எனவே, நடப்பு விவகாரங்கள் (Daily Current Affairs ) பகுதியைத் தயாரிக்க உங்களுக்கு உதவ நவம்பர் 19 , 2021 யின் பொது அறிவு புதுப்பிப்பு இங்கே.மேலும் வாராந்திர நடப்பு விவகாரங்கள் ( Weekly Current Affairs), மாதாந்திர நடப்பு விவகாரங்கள் (Monthly current Affairs), TNPSC தேர்வுகளுக்கான தமிழில் PDF ஐ வழங்குகிறது இந்த பகுதியைப் படித்த பிறகு, நடப்பு விவகார வினாடி வினாவை (Daily Current Affairs Quiz) வெற்றிகரமாக முயற்சி செய்யலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

National Current Affairs in Tamil

  1. உத்தரபிரதேசத்தில் உள்ள மஹோபா மற்றும் ஜான்சி மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
PM Modi visits Mahoba and Jhansi district in Uttar Pradesh
PM Modi visits Mahoba and Jhansi district in Uttar Pradesh

உத்தரபிரதேசத்தின் மஹோபா மற்றும் ஜான்சி மாவட்டங்களில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மஹோபாவில், 3250 கோடி ரூபாய்க்கும் மேலான மொத்த செலவில், இப்பகுதியில் உள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது தொடர்பான பல திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்களில் அர்ஜுன் சஹாயக் திட்டம், ரடௌலி வெயர் திட்டம், பவோனி அணை திட்டம் மற்றும் மஜ்கான்-சில்லி ஸ்ப்ரின்க்லெர் திட்டம் ஆகியவை அடங்கும்.

பார்வையிடலுக்கான முக்கிய நோக்கம்:

  • ஜான்சியின் கரௌதாவில், 3000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 600 மெகாவாட் திறன் கொண்ட அல்ட்ராமெகா சூரிய மின் சக்தி பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • ஜான்சியில், முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட, அடல் ஏக்தா பூங்காவையும் அவர் திறந்து வைத்தார்.
  • ஜான்சி கோட்டையில், பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த ‘ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்’ நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்.

 

Download now: Monthly Current Affairs PDF in Tamil October 2021

Defence Current Affairs in Tamil

2. இலகுரக போர் ஹெலிகாப்டர்களை, இந்திய விமானப்படை தளபதியிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

PM Modi hands over Light Combat Helicopters to IAF chief
PM Modi hands over Light Combat Helicopters to IAF chief
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்நாட்டிலேயே தயாரித்த இலகுரக போர் ஹெலிகாப்டர்களை (LHC), இந்திய விமானப்படைத் தலைவர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரியிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.
  • பயனுள்ள போர்ப் பாத்திரங்களுக்கான, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ரகசியமான அம்சங்களை உள்ளடக்கிய இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், இந்தியாவின் தன்னம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருளுடன் 5,000 மீ உயரத்தில் தரையிறங்க மற்றும் புறப்படக்கூடிய ஒரே தாக்குதல் ஹெலிகாப்டர், LCH ஆகும்.
  • நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ ஆளில்லா விமானங்களையும், பிரதமர் இந்திய ராணுவத்துக்கு வழங்குவார்.
  • கடற்படைக்காக, இந்திய விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த்திற்கு உட்பட, DRDO வடிவமைத்த கடற்படை கப்பல்களுக்கான மேம்பட்ட மின்னணு போர் தொகுப்பை பிரதமர் மோடி ஒப்படைப்பார்.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தலைமையகம்: பெங்களூரு;
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனர்: வால்சந்த் ஹிராசந்த்;
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவப்பட்டது: 23 டிசம்பர் 1940, பெங்களூரு.

Agreements Current Affairs in Tamil

3. SIDBI மற்றும் Google நிறுவனம் MSMEகளை ஆதரிப்பதற்காக இணைந்துள்ளன.

SIDBI and Google tied-up to Support MSMEs
SIDBI and Google tied-up to Support MSMEs

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), கூகுள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (கிபில்) உடன் இணைந்து, மானியத்துடன் கூடிய வட்டி விகிதங்களில், ரூ. 1 கோடி வரை நிதி உதவியுடன் சமூக தாக்கக் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தியாவில் MSME துறைக்கு புத்துயிர் அளிப்பதற்காக கோவிட்-19 தொடர்பான நெருக்கடியின் பிரதிபலிப்பாக SIDBI இன், இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கூட்டாண்மையின் கீழ்

இந்த கூட்டு செயல்பாடு, கோவிட்-19 தொடர்பான நெருக்கடியின் மறுமலர்ச்சிக்காக, சிறு நிறுவனங்களுக்கு $15 மில்லியன் (சுமார் ரூ. 110 கோடி) கூட்டுத்தொகையைக் கொண்டுவருகிறது.
5 கோடி வரை வருவாய் கொண்ட MSMEகள், 25 லட்சம் முதல் 1 கோடி வரையிலான, SIDBI ஆல் செயல்படுத்தப்படும் கடனைப் பெறும்.
SIDBI மூலம் கடன்கள் வழங்கப்படும்.
பெண்களுக்குச் சொந்தமான வணிகம் மற்றும் கோவிட்-19 தடுப்பு உபகரணங்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள வணிகங்களுக்கு, பொருத்தமான வட்டி விகிதச் சலுகையுடன் முன்னுரிமை அளிக்கப்படும்.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • SIDBI நிறுவப்பட்டது: 2 ஏப்ரல் 1990;
  • SIDBI இன் தலைமையகம்: லக்னோ, உத்தரப் பிரதேசம்;
  • SIDBI இன் CMD: சிவசுப்ரமணியன் ராமன்.

Check Now : IBPS SO 2021 Notification Out, Check Eligibility, Exam Date, Exam Pattern and Syllabus

Sports Current Affairs in Tamil

4. BWF பிரகாஷ் படுகோனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறது.

BWF gives Prakash Padukone lifetime achievement award
BWF gives Prakash Padukone lifetime achievement award

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) குழுவின், 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, இந்திய பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • உலகின் நம்பர் 1 முன்னாள் வீரரான இவர், 2018 ஆம் ஆண்டில் இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் (BAI) வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுள்ளார். 1983 கோபன்ஹேகன் போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் படுகோன் ஆவார்.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின் தலைவர்: பௌல் எரிக் ஹோயர் லார்சென்;
  • பேட்மிண்டன் உலக கூட்டமைப்பின் தலைமையகம்: கோலாலம்பூர், மலேசியா;
  • பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு நிறுவப்பட்டது: 5 ஜூலை 1934.

Download Now: Weekly Current Affairs in Tamil 2nd Week of November 2021

Awards Current Affairs in Tamil

5. பெரில் தங்கா தனது நாவலுக்காக மணிப்பூர் மாநில விருதைப் பெற்றார்.

Beryl Thanga receives Manipur State Award for his novel
Beryl Thanga receives Manipur State Award for his novel
  • நாவலாசிரியர் பெரில் தங்கா, Ei Amadi Adungeigi Ithat’ என்ற நாவலுக்காக, 2020 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான 12வது மணிப்பூர் மாநில விருதினைப் பெற்றுள்ளார். மணிப்பூர் ஆளுநர் லா.கணேசன், 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது நாவலுக்காக, 65 வயதான எழுத்தாளருக்கு விருதை வழங்கினார்.
  • விருது பெற்றவர் (பெரில் தங்கா), அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற நபர்களின் குழுவால் 2020 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இந்திய அரசியலமைப்பின் கீழ் உள்ள 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் மணிப்பூரி மொழியும் ஒன்று என்று ஆளுநர் கூறினார். இந்தியாவில் பேசப்படும் திபெட்டோ-பர்மிய மொழிகளில், இது மிகவும் மேம்பட்டதாகக் கருதப்படுகிறது.

6. ஹேமா மாலினி, பிரசூன் ஜோஷி ஆகியோருக்கு IFFI இல், இந்த ஆண்டின் சிறந்த திரைப்பட ஆளுமைகள் விருது வழங்கப்பட உள்ளது.

Hema Malini, Prasoon Joshi to be awarded Film Personalities of the Year at IFFI
Hema Malini, Prasoon Joshi to be awarded Film Personalities of the Year at IFFI
  • நடிகரும், பாஜக தலைவருமான ஹேமா மாலினி, பாடலாசிரியரும், முன்னாள் CBFC தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகியோருக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழா 2021 இல், இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.
  • மாலினி மதுராவிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், மேலும் ஜோஷி 2017 ஆம் ஆண்டில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) தலைவராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.
  • ஜோஷி இதற்கு முன்பு, 2014 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, BJP கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட போது, அவருக்காக ஒரு பிரச்சாரப் பாடலை எழுதியுள்ளார்.

[sso_enhancement_lead_form_manual title=”ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF ஐ இங்கே பதிவிறக்கம் செய்யலாம் PART-20″ button=”Download Now” pdf=”/jobs/wp-content/uploads/2021/10/25161209/Formatted-TAMILNADU-STATE-GK-PART-20.pdf”]

Ranks and Reports Current Affairs in Tamil

7. WB அறிக்கை: உலகின் மிகப்பெரிய பணச்செலுத்தீட்டை பெரும் நாடாக இந்தியா ஆனது.

WB Report: India became World’s Largest Recipient of Remittances
WB Report: India became World’s Largest Recipient of Remittances
  • உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையான, ‘உலக வங்கியின் பணச்செலுத்தீடு விலைகள் உலகளாவிய தரவுத்தளம்’ இன் படி, 2021 இல் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்று, இந்தியா உலகின் மிகப்பெரிய பணச்செலுத்தீட்டை பெரும் நாடாக மாறியது. இந்த தொகையின் 20%க்கும் மேலான தொகைக்கு, அமெரிக்கா மிகப்பெரிய ஆதாரமாக இருந்தது.
  • இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • 2022 இல் இந்தியாவில், பணச்செலுத்தீடு 3% அதிகரித்து 89.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புகள்:

  • உலக வங்கி நிறுவப்பட்டது: ஜூலை 1944;
  • உலக வங்கியின் தலைமையகம்: வாஷிங்டன் DC, அமெரிக்கா;
  • உலக வங்கியின் தலைவர்: டேவிட் ராபர்ட் மல்பாஸ்.

Check Also: SBI PO Admit Card 2021 Out Download Link for Prelims Hall Ticket

Important Days Current Affairs in Tamil

8. உலக குழந்தைகள் தினம் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.

World Children’s Day is celebrated on 20 November
World Children’s Day is celebrated on 20 November
  • உலகளாவிய/உலக குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 20 அன்று சர்வதேச ஒற்றுமை, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
  • நவம்பர் 20, 1959 ஆம் ஆண்டு, ஐநா பொதுச் சபை குழந்தைகளின் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட தேதி என்பதால், இது ஒரு முக்கியமான தேதியாகும். 2021 ஆம் ஆண்டு, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் 32வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • உலகளாவிய/உலக குழந்தைகள் தினம் 2021 இன் கருப்பொருள்: ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறந்த எதிர்காலம்

இந்த நாளுக்கான வரலாறு:

உலக குழந்தைகள் தினம், முதன்முதலில் 1954 இல் உலகளாவிய குழந்தைகள் தினமாக நிறுவப்பட்டது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது. 1959 இல், ஐநா பொதுச் சபை குழந்தைகளின் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.

All Over Tamil Nadu Free Mock Test For TNEB ASSESSOR 2021 Examination – REGISTER NOW

Books and Authors Current Affairs in Tamil

9. ஸ்மிருதி இரானி தனது முதல் நாவலான ‘லால் சலாம்: எ நாவல்’ என்பதை இயற்றியுள்ளார்.

World Children’s Day is celebrated on 20 November
World Children’s Day is celebrated on 20 November

மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிருதி ஜூபின் இரானி, நவம்பர் 2021 இல், தனது முதல் நாவலான “லால் சலாம்: எ நாவல்” என்ற தலைப்பில் வெளியிட உள்ளார். இந்த நாவல், ஏப்ரல் 2010 ஆம் ஆண்டு, சத்தீஸ்கரின் தண்தேவாடாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலின் போது, 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம், தேசத்திற்கு தங்கள் வாழ்நாள் சேவையை வழங்கியவர்களுக்கான ஒரு பாராட்டுரையாகும்.

SBI PO Exam Analysis 2021 Shift 1, 20th November, Exam Review, Difficulty Level

10. ‘ஸ்ரீமத்ராமாயணம்’ எனும் புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

Vice President M. Venkaiah Naidu released the book ‘Srimadramayanam’
Vice President M. Venkaiah Naidu released the book ‘Srimadramayanam’

ஹைதராபாத்தில் ‘ஸ்ரீமத்ராமாயணம்’ புத்தகத்தை குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டார். இது சசிகிரணாச்சாரியாரால் எழுதப்பட்டது. இது ராமரின் தலைமை, நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றியது. பல்வேறு இந்திய மொழிகளின் இலக்கியப் படைப்புகள் மற்றும் கவிதைப் படைப்புகளை இளைஞர்களிடையே பிரபலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

*****************************************************

Coupon code- FEST75-75% OFFER

TNEB AE EEE LIVE CLASS BY ADDA247 FROM NOV 15 2021
TNEB AE EEE LIVE CLASS BY ADDA247 FROM NOV 15 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group