Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 14 செப்டம்பர் 2023

செப்டம்பர் 14 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்:

  • நிபா வைரஸ்
  • பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்
  • ஆயுஷ்மான் பவ இயக்கம்

செப்டம்பர் 14ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) முதன் முதலில் நிபா வைரஸ் கண்டறியப்பட்ட நாடு

a) தென் ஆப்பிரிக்கா

b) தாய்லாந்து

c) இந்தோனேஷியா

d) மலேசியா

2) ஹிந்தி மொழியை  அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு

a)1947

b)1949

c)1950

d)1952

3) பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் அமைச்சகம்

a) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

b) வனத்துறை அமைச்சகம்

c) சுற்றுச்சூழல் அமைச்சகம்

d) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

4) இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

a) 2020

b) 2021

c) 2022

d) 2023

5) தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர்

a) குடியரசு தலைவர்

b) பிரதமர்

c) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

d) அமைச்சர்

6) ஆயுஷ்மான் பவ இயக்கத்தின் அமைச்சகம்

a) பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

b) வனத்துறை அமைச்சகம்

c) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

d) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

7) ஜி 20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ” வசுதைவ குடும்பகம் ” பெற பட்ட உபநிடம்

a) மகா உபநிடம்

b) முண்டக உபநிடம்

c) மாந்திரீக உபநிடம்

d) ஆத்ம உபநிடம்

8 இந்தியா உடன் “கட்டமைப்பு நிதி தொடர்பு திட்டம்” அறிமுகப்படுத்திய நாடு

a) இங்கிலாந்து

b) அமெரிக்கா

c) ரஷ்யா

d) ஜப்பான்

9) மேக் இன்  இந்தியா தொடங்கப்பட்ட ஆண்டு

a) 2014

b) 2016

c) 2018

d) 2019

10 இந்தியாவில் யானைகள் வழித்தடம் எண்ணிக்கை

a) 50

b) 100

c) 150

d) 200

 

விடைகள்

1) விடை d ) மலேசியா

1998-1999 ஆண்டுகளில் நிபா வைரஸ் முதன் முதலில் மலேஷியா நாட்டில் கண்டறியப்பட்டது. விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்டது .இது பாராமிக்ஸோவிரிடே(paramyxoviridae) குடும்பத்தை சார்ந்தது .இதற்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் இன்று அளவு கண்டிபிடிக்கப்படவில்லை

2) விடை b)1949

ஹிந்தி மொழியை  அலுவல் மொழியாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை 1949ம் ஆண்டு செப்டெம்பர் 14ம் நாள் ஏற்றுக்கொண்டது . இதனை நினைவூட்டி 14 செப்டம்பர் தினத்தை ஹிந்தி தினமாக மத்திய அரசு அறிவித்தது

3) விடை  a)பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பிரதம மந்திரி உஜ்வாலா திட்டதை மேலும் 3 ஆண்டுகளுக்கு  நீட்டிப்பு  செய்வதை மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது . மேலும் 75 லட்சம்  இணைப்புகள் ரூபாய் 1650 கோடியில் அளிக்க முடிவு செய்துள்ளது

திட்டம் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்
ஆண்டு 2016
அமைச்சகம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
நோக்கம் ஏழை பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு  இணைப்பு வழங்குவது

4) விடை b) 2021

திட்டம் இன்னுயிர் காப்போம் திட்டம்
ஆண்டு 2021
துறை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை
நோக்கம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைப்பது

5 )விடை b) பிரதமர்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 2005 ஆம் ஆண்டு 23 டிசம்பர் மாதத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது .இந்த ஆணையத்தின் தலைவர் இந்திய பிரதமர் ஆவார் . இந்த ஆணையத்தின் முக்கிய   நோக்கம்  இயற்கை பேரிடரில் உயிரிழப்பை தடுப்பது ஆகும் .

6)விடை  c) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இந்திய குடியரசு தலைவர் 2023ம் ஆண்டு 13 செப்டம்பர் ஆயுஷ்மான் பவ இயக்கம் குஜராத்தில் உள்ள காந்திநகரில் தொடங்கி வைத்தார் .

திட்டம் ஆயுஷ்மான் பவ இயக்கம்
ஆண்டு 2023
அமைச்சகம் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
நோக்கம் அனைத்து கிராமங்களுக்கும் மற்றும் நகரத்திற்கும் சுகாதார திட்டம் சென்று அடைய வேண்டும் .

7)விடை  a) மகா உபநிடம்

18 வது ஜி 20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் ” வசுதைவ குடும்பகம் ” மகா உபநிடத்தில் இருந்து பெறப்பட்டது. இதற்கு அர்த்தம் ஒரே உலகம் ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் ஆகும் .

8)விடை  a) இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 12வது பொருளாதார நிதிசார் கூட்டம் செப்டம்பர் 11ம் நாளில் நடைபெற்றது . இக்கூட்டத்தில்   முக்கிய  கட்டுமான திட்டங்களை முன்னெடுப்பதில் இந்தியாவின் நிதி ஆயோக் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் பெருநகராட்சி ஒருங்கிணைத்து செயல்படுவதற்காக கட்டமைப்பு நிதி தொடர்பு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளன .

9)விடை  a) 2014

புத்தாக்க ஊக்குவிப்பு ,திறன் மேம்பாடு, சிறந்த உற்பத்தி  உள்கட்டமைப்பு  மற்றும் அதிக முதலீடு பெறுதல் என நோக்கங்கள் கொண்ட மேக் இன்  இந்தியா திட்டத்தை  ரஷ்யாவும் இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என ரஷ்யா அதிபர் புடின் பாராட்டி உள்ளார்.

திட்டம் மேக் இன்  இந்தியா
ஆண்டு 2014
அமைச்சகம் வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம்
நோக்கம் உள்நாட்டில் தொழில்துறை உற்பத்தி ஊக்குவிப்பது

 

10) விடைc) 150

இந்தியாவில்  யானை வழித்தடங்கள் 88ல் இருந்து 150 வழித்தடங்களாக உயர்ந்து உள்ளன என மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் 2023 ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதில் அதிகபட்சமாக 26 வழித்தடங்கள் மேற்கு வங்கத்தில் உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

**************************************************************************

 

Madras High Court Batch | Online Live Classes by Adda 247
Madras High Court Batch | Online Live Classes by Adda 247
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil