Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு –02 டிசம்பர் 2023

டிசம்பர் 02 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம்
  •  தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்
  • பேரிடர் மேலாண்மைக்கான உலக மாநாடு

டிசம்பர் 02ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

a)2005

b)2006

c)2007

d)2008

2) ISSF உலக கோப்பை போட்டியில் ஆடவருக்கான 25 மீட்டர் விரைவு சூழல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்

a)அனிஷ் பன்வலா

b)குர்பிரீத் சிங்

c)ஆதர்ஷ் சிங்

d)அங்கத் வீர் சிங் பஜ்வா

3) நாகலாந்து மாநிலமாக ஆக்கப்பட்ட நாள்

a)டிசம்பர் 01

b)டிசம்பர் 02

c)டிசம்பர் 03

d)டிசம்பர் 04

4) India’s Moment: Changing Power Equations Around the World என்ற புத்தகத்தை எழுதியவர் யார்

a)மோகன் குமார்

b)விக்ரம் கே. துரைசாமி

c)சேத்தன் பகத்

d)அருந்ததி ராய்

5) தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம்

a)டிசம்பர் 01

b)டிசம்பர் 02

c)டிசம்பர் 03

d)டிசம்பர் 04

6) பிரான்ஸ் நாட்டின் உயரிய  விருதான  செவாலியர் லெஜியன் டி’ஹானர்(‘Légion d’Honneur)  விருதினை வென்ற இஸ்ரோ விஞ்ஞானி

a)சோமநாத்

b)சிவன்

c)லலிதாம்பிகா

d)வீரமுத்துவேல்

7) 2023 ஆம் ஆண்டுக்கான ஸ்காட்ச் தங்க விருது வென்ற நிறுவனம்

a)பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

b)தேசிய அனல் மின் நிறுவனம்

c)எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம்

d)இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம்

8) 2023 ஆம் ஆண்டின்  பிரான்ஸ் நாட்டின்  இரண்டாவது உயர் குடிமையியல்  பட்டமான   (Knight of the Order of Arts and Letters)  யாருக்கு வழங்கப்படுகிறது

a)அர்ஷியா சத்தார்

b)சுதா மூர்த்தி

c)அனிதா நாயர்

d)நமிதா கோகலே

9 ) 2023 பேரிடர் மேலாண்மைக்கான உலக மாநாடு  நடைபெற்ற இடம்

a)ஹைதராபாத்

b)சென்னை

c)டேராடூன்

d)புது டெல்லி

10) சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்

a)டிசம்பர் 01

b)டிசம்பர் 02

c)டிசம்பர் 03

d)டிசம்பர் 04

விடைகள்

1)விடை d)2008

பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டம் என்பது  மலிவான விலையில் தரமான மருந்துகளை வழங்குவது ஆகும் . இந்திய அரசின் மருந்துகள் அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும்.இந்த  திட்டம் 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது . இந்த திட்டம் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மருந்தகங்கள்  என்ற மருந்து  விற்பனை நிலையங்கள் மூலம் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்க்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது .2016 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் நாள் தமிழ்நாட்டின் முதல் மக்கள் மருந்தகம் கோயம்புத்தூரில் திறக்கப்பட்டது.

சமீபத்தில் இந்திய பிரதமர் ஒடிஷா மாநிலத்தில் இருக்கும்  தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 10,000ஆவது மக்கள் மருந்தகத்தை  திறந்து  வைத்தார் .மேலும், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 என்பதிலிருந்து 25,000ஆக உயர்த்தும் திட்டத்தையும்  இந்திய பிரதமர் தொடங்கி வைத்தார்  மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன் வழங்குதல் முன்முயற்சியும் தொடங்கினார் .

2) விடை a)அனிஷ் பன்வலா

25 மீட்டர்  விரைவு சூழல் துப்பாக்கி சுடுதல்  பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றார். ISSF உலகக் கோப்பை வரலாற்றில் 25 மீட்டர்  விரைவு சூழல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். இந்த உலக கோப்பை போட்டி கத்தார் தலை நகரமான தோஹாவில் நடைபெற்றது.

3)  விடை a)டிசம்பர் 01

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 61-வது மாநில தினம் 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட்டது. டிசம்பர் 1, 1963 அன்று இந்திய ஒன்றியத்தின் 16 வது மாநிலமாக மாறிய இந்த மாநிலம்  நாகர் பழங்குடி மக்களின் வரலாற்று பயணத்தில் இந்த நாள் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வைக் குறிக்கிறது.

4) விடை a)மோகன் குமார்

பேராசிரியர் மோகன் குமார் எழுதிய India’s Moment: Changing Power Equations around the World என்ற புத்தகத்தை பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் கே.துரைசாமி வெளியிட்டார்.. காலப்போக்கில் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் நிலைப்பாடுகள் எவ்வாறு பரிணமித்துள்ளன என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

5) விடை b)டிசம்பர் 02

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம்நாள்  தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.2023 ஆம் ஆண்டின் தேசிய மாசு தடுப்பு தினத்தை இந்தியாவில் அனுசரிப்பதன் முக்கிய நோக்கம் தேவையற்ற தொழில்துறை பேரழிவுகளைத் தடுக்க தொழிற்சாலைகளை முறையில் பயன்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 2023 ஆம் ஆண்டின் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினத்தின் கருப்பொருள் “தூய்மையான மற்றும் ஆரோக்கியமான பூமிக்கான  நிலையான வளர்ச்சி” என்பதாகும். 1984 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 2 மற்றும் 3 நாளில் தீங்கு விளைவிக்கும் வாயுவான மெத்தில் ஐசோசயனேட்(MIC) வெளியிடப்பட்டதால்  போபாலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

6)விடை c)லலிதாம்பிகா

புகழ்பெற்ற விஞ்ஞானியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் முன்னாள் இயக்குநருமான லலிதாம்பிகா அவர்களுக்கு  பிரான்ஸ் நாட்டின் உயரிய  விருதான  செவாலியர் லெஜியன் டி’ஹானர்(‘Légion d’Honneur)  வழங்க பட உள்ளது ஏ.எஸ்.கிரண்குமார் ‘லெஜியன் டி’ஹானர்(‘Légion d’Honneur) விருது பெற்ற முதல் இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவருக்கு 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது .

7)விடை a)பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

2023  ஆண்டுக்கான மதிப்புமிக்க ஸ்காட்ச் தங்க விருது மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறையில் PGCI  செய்த சிறந்த பங்களிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

8)விடை  a)அர்ஷியா சத்தார்

பிரபல எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான அர்ஷியா சத்தாருக்கு பிரான்ஸ் நாட்டின்  இரண்டாவது உயர் குடிமையியல்  பட்டமான   (Knight of the Order of Arts and Letters)  வழங்கப்பட உள்ளது.

9)விடை c)டேராடூன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் பேரிடர் மேலாண்மை தொடர்பான 6-வது உலக மாநாடு அண்மையில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான முதல் உலக மாநாடு நடைபெற்றது. பேரிடர் மேலாண்மைக்கான உலக மாநாடு (WCDM) ) என்பது பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைப்பு சங்கத்தின் (DMICS) ஒரு தனித்துவமான முயற்சியாகும், இது உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஒரே மேடையில் கொண்டு வந்து பேரிடர் இடர் மேலாண்மையின் பல்வேறு சவாலான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கிறது. அபாயங்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்காக அறிவியல், கொள்கை மற்றும் நடைமுறைகளின் தொடர்புகளை ஊக்குவிப்பதும், அபாயங்களைக் குறைப்பதற்கும் பேரழிவுகளுக்கு மீள்திறனை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே பேரிடர் மேலாண்மைக்கான உலக மாநாட்டின் பணியாகும்.

10) விடை  b)டிசம்பர் 02

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம், உலக வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. அடிமைத்தனத்தின் கொடூரமான வரலாற்றையும் அதன் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான தாக்கங்களையும் நினைவுகூருவதற்கும் அங்கீகரிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட நாள் இது. இது டிசம்பர் 2, 1949 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது. இந்த நாள் அடிமைத்தனத்திற்கும் அதன் நவீன வடிவங்களுக்கும் எதிரான நீடித்த போராட்டத்தை நினைவூட்டுகிறது.

 

**************************************************************************

நடப்பு நிகழ்வு –02 டிசம்பர் 2023_3.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here