Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் -...

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஒன்றிய பாராளுமன்றம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஒன்றிய பாராளுமன்றம்

குடியரசுத் தலைவர்

அறிமுகம்

  • இந்திய நாட்டின் உயர்ந்த அரசாங்க அமைப்பு மத்திய அரசு ஆகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் அமைந்துள்ளது
  • இந்திய அரசமைப்பின் பகுதி Vஇல் 52 முதல் 78 வரையிலான சட்டப்பிரிவுகள் மத்திய அரசின் நிர்வாகம் பற்றி குறிப்பிடுகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் மக்களாட்சி அடிப்படையிலான அரசாங்கத்தை நமக்கு வழங்குகிறது
  • இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத் தன்மையை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கு கூட்டாட்சி முறையிலான அரசை வழங்கியுள்ளனர்.
  • மத்திய அரசின் மூன்று அங்கங்களை கொண்டது. அதை நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை ஆகியவை ஆகும்.
  • மத்திய நிர்வாகம் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதம அமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை குழு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ஆகியோர் உள்ளடக்கியது ஆகும்.
  • மத்திய சட்டமன்றம் நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு அவைகளை கொண்டது. அவை மாநிலங்களவை (ராஜ்ய சபா) மற்றும் மக்களவை (லோக்சபா) ஆகியனவாகும். மத்திய நீதித்துறை உச்சநீதிமன்றத்தை கொண்டுள்ளது

இந்திய குடியரசுத் தலைவர்:

  • நமது அரசியலமைப்பு சட்டம் நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை நமக்கு அளித்துள்ளது. மத்திய அரசின் நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார் அவர் பெயரளவில் நிர்வாக அதிகாரம் பெற்றவர் ஆவார்
  • அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார். அவர் முப்படைகளின் தலைமை தளபதியாக செயல்படுகிறார். நீதித்துறையை அமைக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு 
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 53 ன் படி குடியரசுத் தலைவர் நேரடியாகவோ அல்லது அவருடைய சார்நிலை அலுவலர்கள் மூலமாகவோ மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை அரசியலமைப்பின்படி செயல்படுத்துகிறார்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்:

  • குடியரசு தலைவர் வேட்பாளருக்கான தகுதிகளை அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ளது.
  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது பூர்த்தி அடைந்தாக இருத்தல் வேண்டும்.
  • மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மக்களவை உறுப்பினராவதற்கான தகுதியினை பெற்றிருத்தல் வேண்டும்
  • அவரின் பெயரை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் குழுவிலுள்ள 10 வாக்காளர்கள் முன்மொழியவும், மேலும் 10 வாக்காளர்கள் வழி மொழியவும் வேண்டும்.
  • குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்கக் கூடாது. ஒருவேளை பதவி வகிக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவராக அவர் பதவி ஏற்கும் நாளில் அப்பதவி காலியானதாக கருதப்படும்.
  • புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் குடியரசு தலைவரின் இல்லம் ஆகும்.அவருடைய இல்லம் மற்றும் அலுவலகம் இரண்டும் ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ளன.
  • இருந்த போதிலும் அவருக்கு இருப்பிடத்துடன் கூடிய அலுவலகங்கள் மேலும் இரண்டு இடங்களில் உள்ளன. அங்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை சென்று தன்னுடைய அலுவலகப் பணிகளை மேற்கொள்கிறார். சிம்லாவில் உள்ள ரிட்ரீட் கட்டடம் (the retreat building) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஷ்டிரபதி நிலையமாகும்
  • இவைகளில் ஒன்று வடக்கில் மற்றொன்று தெற்கிலும் அமைந்துள்ளது. இது நாட்டின் ஒற்றுமையையும் மக்களின் பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் ஒற்றுமையையும் பறைசாற்றுகின்றது 

இந்திய தேசியத்தின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கிறார் அவர் இந்தியாவின் முதல் குடிமகன் ஆவார் மேலும் தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மையின் சின்னமாக அவர் திகழ்கிறார்

குடியரசுத் தலைவருக்கான வசதிகள் அல்லது சலுகைகள்

  • அவரது அதிகாரபூர்வ இல்லத்தினை (ராஷ்டிரபதி பவன்) வாடகை இன்றி பயன்படுத்த அவருக்கு உரிமையுண்டு.
  • நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து ஊதியம், படிகள், தனி உரிமைகளையும் அனுபவிக்க அவருக்கு அனுமதியுண்டு
  • குடியரசுத் தலைவருக்கு மேலும் சில சலுகைகளும் விதிவிலக்குகளும்   தரப்பட்டுள்ளன. அவர் தனது அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளினின்று தனிப்பட்ட விலக்கு பெறுகிறார். அவரது பதவிக் காலத்தின்போது அவருக்கு அனைத்து குற்றவியல் நடவடிக்கைகள் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

குடியரசு தலைவரின் தனிச் சலுகைகள்:

சட்டப்பிரிவு 361(1)ன் படி குடியரசுத் தலைவர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தைச் செய்ய வேண்டும் என எண்ணுவதிலும் செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

 

பதவிக்காலம் பதவிநீக்கம் பதவியை நிரப்புவது பற்றிய விதிமுறைகள்:

பதவிக்காலம்:

  • குடியரசுத் தலைவர் தனது அலுவலகத்தில் நுழைந்த தேதி முதல் ஐந்து வருட காலத்திற்கு குடியரசுத்தலைவராக பதவி வகிப்பார் என்று இந்திய அரசமைப்பு விதி 56 கூறுகிறது
  • எனினும் குடியரசுத் துணைத் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பதன் மூலம் எந்த நேரத்திலும் தனது பொறுப்பிலிருந்து விலக முடியும் நாடாளுமன்றத்தால் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும் இதை தவிர குற்றம் சாட்டப்படுவதன் மூலமும் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும்
  • குடியரசு தலைவராக இருப்பவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராவார்.
  • தமது பதவியை குடியரசுத் தலைவர் ஐந்து வருட காலத்திற்கு அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பதவி ஏற்கும் வரை பொறுப்பில் தொடரலாம்.

பதவி நீக்கம்:

  • அரசமைப்பின் 61வது உறுப்பு குடியரசு தலைவர் மீது குற்றம் சாட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு விரிவான நடைமுறைகளை தந்துள்ளது.
  • குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்வதற்கு முதலாவதாக நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் அதன் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பகுதியினரால் கையொப்பமிடப்பட்ட தீர்மானத்தின் மூலம் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 14 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வழங்குவதன் மூலம் அத்தகைய தீர்மானம் ஒரு சபையால் விவாதிக்கப்படும் போது அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும் அது மற்ற அவையால் பின்னர் விசாரணை செய்யப்பட வேண்டும்
  • விசாரணையின் பின் அதன் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் நாள் முதல் அந்த குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்படுவார்

 

பதவியை நிரப்புவது:

குடியரசுத் தலைவரின் பதவி கீழ்க்கண்ட வழிகளில் காலியாகலாம்

  1. ஐந்து ஆண்டுகளில் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில்
  2. அவரது பதவி விலகல் மூலம் 
  3. நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவதன் மூலம்
  4. அவரது மரணத்தின் மூலம்
  5. அவர் தகுதியை இறந்தால் அல்லது அவரது தேர்தல் செல்லாது என   அறிவிக்கப்பட்டால்
  • நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் அல்லது இறப்பு ஆகியவற்றில் குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது ஆறு மாதத்திற்குள் புதிய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தபட வேண்டும்.
  • இடைப்பட்ட காலத்தில் குடியரசுத் துணைத் தலைவர் குடியரசுத் தலைவராக செயல்படுவார். மேலும் பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் நோய் இயலாமை அல்லது வேறு காரணங்களால் தமது பதவிக்குரிய செயல்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டாலும் குடியரசுத்தலைவர் திரும்பவும் தன் பொறுப்பினை செயல்படுத்த முன் வரும் வரை குடியரசுத் துணைத் தலைவர் அவரது பணிகளை மேற்கொள்வார்.
  • குடியரசுத் துணைத் தலைவர் பதவி காலியாக இருந்தால், இந்திய தலைமை நீதிபதி அல்லது அவரது பதவியும் காலியாக இருந்தால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஜனாதிபதியாக செயல்படுகிறார் அல்லது ஜனாதிபதியின் செயல்பாடுகளை நிறைவேற்றுவார்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை பின்வரும் வகைகளின் கீழ் பரவலாக வகைப்படுத்தலாம்.

 

நிர்வாக அதிகாரங்கள்:

  • மத்திய அரசின் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களையும் இந்திய ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ளது.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 77ன் படி மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • எனவே அவர் வேண்டும் நிர்வாகத்தை இயக்க முக்கிய அலுவலகங்களுக்கு பல நியமனங்களைக் குடியரசுத் தலைவர் மேற்கொள்கிறார்.
  • பிரதம அமைச்சரையும், மற்ற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அவர் பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படி அமைச்சரவை உறுப்பினர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
  • பல்வேறு நியமனங்களை செய்வதற்கு அவர் பொறுப்பாகிறார். 

  இந்த நியமனங்களுள்

    • மாநிலங்களின் ஆளுநர்கள்
    • உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகள்
    • அட்டர்னி ஜெனரல்
    • கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்
    • தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள்
    • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்
    • பிற நாடுகளுக்கான தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள்
    • எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலைமைகள் குறித்து விசாரிக்க அவர் ஒரு ஆணையத்தை நியமிக்கிறார்
  • முப்படைகளின் தலைமை தளபதியான குடியரசுத் தலைவர், இராணுவப் படை, கப்பற்படை, விமானப்படை தளபதி ஆகியோரின் நியமனங்களும் அடங்கும்.

சட்டமன்ற அதிகாரங்கள்:

  • குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை இவர் உரையாற்றி துவக்கி வைக்கிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.
  • குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.
  • சபையில் நிலுவையில் உள்ள ஒரு மசோதா தொடர்பாக அவர் நாடாளுமன்ற சபைக்கு செய்திகளை அனுப்பலாம். பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே சட்டங்களாக மாறும்
  • அவரது ஒப்புதல் இல்லாமல் பண மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தை குடியரசுத்தலைவர் முடிவுக்குக் கொண்டு வரலாம்.
  • மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.
  • கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்
  • மேலும் ஆங்கிலோஇந்தியர் சமூகத்தைச் சேர்ந்த 2 நபர்களை மக்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

நிதித்துறை:

  • பண மசோதா குடியரசுத் தலைவரின் முன் சிபார்சுடன் தான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட முடியும். 
  • மத்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கை குடியரசுத் தலைவரின் அனுமதியோடு தான் மத்திய நிதி அமைச்சரால் மக்களவையில் சமர்ப்பிக்கப்படுகிறது. 
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதியினைக் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளது
  • அவரின் பரிந்துரை இன்றி எந்தவொரு மானியக் கோரிக்கையையும் கொண்டுவர முடியாது
  • இந்தியாவின் அவசர நிதியிலிருந்து அரசின் எதிர்பா ராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு
  • மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பங்கீடு குறித்து பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையத்தை குடியரசு தலைவரை   மாற்றி அமைக்கிறார்

நீதித்துறை:

  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது விதி நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது
  • நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தண்டனைகள், மத்திய சட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதால் வழங்கப்பட்ட தண்டனைகள், மரண தண்டனைகள்ஆகியன இவற்றுள் அடங்கும்
  • இவர் தன்னுடைய அதிகாரத்தைச் செயல்படுத்துவதில் (நாடாளுமன்றத்தால் அவருக்கு எதிராகஅரசியல் குற்றச்சாட்டு கொண்டு வரும் போது தவிர) எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

 

இராணுவ அதிகாரங்கள்

  • மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை விதி 53(2) குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது
  • அவர் சட்டத்தின் படி இராணுவத்தை வழிநடத்துகிறார். எனவே அவர் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என அறியப்படுகிறார்
  • இதன் மூலம் மற்ற நாடுகளின் மீது போர் அறிவிக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் அவர் அதிகாரம் பெற்றவர் ஆவார்

இராஜதந்திர அதிகாரங்கள்: 

  • வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களைக் குடியரசுத் தலைவர் நியமிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் இந்தியாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களையும் வரவேற்கிறார்
  • வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் குடியரசுத் தலைவரின் பெயராலேயே நடைபெறுகின்றன.

நெருக்கடி நிலைஅதிகாரங்கள்

  • நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
  • 352-வது விதிபோர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரத்தை வகுத்துள்ளது. இது தேசிய நெருக்கடி எனப்படுகிறது.
  • 356-வது விதிஒரு மாநில அரசாங்கம் செயல்படவில்லை எனில் அம்மாநிலத்தில் நெருக்கடி நிலையை அறிவித்து, அம்மாநில அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு வழங்குகிறது

360-வது விதிஇந்தியாவின் நிதி நிலையில் திருப்தியின்மை காணப்பட்டாலும், இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் ஏதாவது ஒரு காரணத்திற்காக அச்சுறுத்தல் ஏற்படும் பொழுதும் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையைஅறிவிக்கிறார்.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here