Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் -...

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – அரசியலமைப்பு மூலாதாரம்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

அரசியலமைப்பு மூலாதாரம்

மூலாதாரம் பெறப்பட்ட அம்சங்கள்
1. இந்திய அரசு சட்டம் 1935 கூட்டரசு முறை, ஆளுநர் பதவி, நீதித்துறை, பொதுத்தேர்வு ஆணையங்கள், நெருக்கடிகால விதிகள், நிர்வாக விவரங்கள்
2. பிரிட்டன் நாடாளுமன்ற அரசு, ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி, நாடாளுமன்ற செயல்முறைகள். இடைக்கால தடையாணைகள்
3. அமெரிக்க

அரசமைப்பு

அடிப்படை உரிமைகள், நீதி சீராய்வு, குடியரசுத்தலைவர் மீதான பதவிநீக்க தீர்மானம், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத்தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை
4. அயர்லாந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
5. கனடா ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி, மத்திய அரசிடம் இதர அதிகாரங்கள், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு
6. ஆஸ்திரேலியா வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் ஈரவைகளின் கூட்டுக்கூட்டம் மற்றும் பொதுப் பட்டியல்.
7. ஜெர்மனி வெய்மர் அரசமைப்பு நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு
8. சோவியத் யூனியன் அடிப்படைக் கடமைகள், முகப்புரையில் (சமூக, பொருளாதார, அரசியல்) நீதியின் மாண்புகள், அடிப்படைக் கடமைகள். (42வது திருத்தத்தில் உறுதிபடுத்தப்பட்டது.)
9. பிரான்சு குடியரசு, முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
10. தென் ஆப்பிரிக்கா அரசமைப்புத் திருத்தம் செயல்முறை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு

 

முகவுரை:

அறிமுகம்:

முகவுரை (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்குறது

பண்புகள்:

  • இத அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது
  • இது பெரும் மதிப்புடன்அரசியலமைப்பின் திறவுகோல்என குறிப்பிடப்படுகிறது.
  • 1947ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜவகர்லால் நேருவின்குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது
  • முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி திருத்தப்பட்டது. அதன்படி, சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு போன்ற மூன்று புதிய சொற்கள் சோ;க்கப்பட்டன
  • இந்திய மக்களாகிய நாம்என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது
  • இதிலிருந்து, இந்திய மக்களே இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் என நாம் அறியலாம். இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயசார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது
  • இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
  • சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பதை பிரெஞ்சு புரட்சியில் இருந்து 1789 எடுக்கப்பட்டது.

முகவுரையின் நான்கு அம்சங்கள்:

  1. அரசியலமைப்பின் அதிகாரத்தின் ஆதாரங்கள்
  • குடிமக்களிடமிருந்து
  • முகவுரையின் முதல் மற்றும் கடைசி வரி இதை முடிக்கிறது.
  1. மாநிலத்திற்கான இலட்சியங்கள்
  • இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு
  • மேலும் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு
  1. குடிமக்களுக்கான இலட்சியங்கள்

நீதி, சுதந்திரம், சமத்துவம், இறையாண்மை மற்றும் தனிமனிதனின் கண்ணியம் போன்றவை

  1. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்

நவம்பர் 26, 1949

இத்தேதியின் முக்கியத்துவம்: இந்தியா தன்னை இறையாண்மை, ஜனநாயக, குடியரசு என்று அறிவித்தது.

முகப்புரையை பற்றிய கூற்றுகள்:

முகப்புரை என்பது அரசியலமைப்பின் அடையாள அட்டை A. பால்கிவாலா
அரசியலமைப்பின் ஆன்மா தாகூர்தாஸ் பர்க்காவா
நம் இறையாண்மை உடைய மக்களாட்சி குடியரசின் ஜாதகம் K.M மூன்ஷி
முகப்புரையே அரசியலமைப்பின் திறவுகோல் எர்னஸ்ட் பாக்கர்
எங்கள் நீண்ட நாள் சிந்தனையையும் கனவையும் உள்ளடக்கியது அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார்

 

முகவுரையின் முக்கிய வார்த்தைகள்:

  1. இறையாண்மை
  • இறையாண்மை என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கும் 
  • உள் மற்றும் வெளிப்புற விஷயங்களில் முடிவுகளை எடுப்பதற்கு இந்தியாவிற்கு உரிமை உண்டு மேலும் மற்ற நாடுகளால் இந்திய அரசாங்கத்திற்கு ஆணையிட முடியாது
  • இறையாண்மைஎன்ற சொல் இந்தியா வேறு எந்த நாட்டின் சார்புநிலையிலோ, ஆதிக்கத்தின் கீழோ இல்லை என்பதைக் குறிக்கிறது
  • அரசியலமைப்பின் அதிகாரங்கள் மக்களிடம் இருந்தே எடுக்கப்பட்டவை
  • முகவுரையின் முதல் மற்றும் கடைசி வரி இதை உறுதி செய்கிறது
  1. சமதர்மம்

சமதர்மம் என்பது சமுதாயத்தில் செல்வத்தை உருவாக்கி சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல், அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும்

  1. மதச்சார்பின்மை
  • மதச்சார்பின்மை இந்திய அரசியலமைப்பின் ஒரு அடிப்படை பகுதியாகும்.
  • அது அனைத்து மதங்களுக்கும் சமமான சுதந்திரம் மற்றும் மரியாதை அளிப்பது பற்றி எடுத்துரைக்கிறது.

 

  1. ஜனநாயகம்
  • உலகளாவிய வயது வந்தோர் உரிமை பின்பற்றி, இந்தியாவின் மக்கள் ஒருவருக்கு ஒரு வாக்கு என்னும் விதியின் படி வாக்களிக்கிறார்கள்.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 18 வயது நிரம்பியதும் வாக்களிக்க உரிமை உண்டு
  • அரசியல் ஜனநாயகம் மட்டுமல்லாமல் சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகத்தையும் தழுவிய பரந்த பொருளில்ஜனநாயகம்என்ற சொல் முகவுரையில் பயன்படுத்தப்படுகிறது
  1. குடியரசு
    • ஒரு குடியரசில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குடியரசு தலைவர்  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்படுவார்
  • முகவுரையில்குடியரசுஎன்ற சொல், இந்தியாவின் ஜனாதிபதி என்று அழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் குறிக்கிறது. அவர் ஐந்து ஆண்டுகளுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  1. நீதி
  • இது இந்திய மக்களுக்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை பாதுகாக்க முற்படுகிறது
  • சமூக நீதி என்பது சமுதாயத்தில் ஜாதி, மதம், நிறம், பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த குடிமகனுக்கும் எந்த பாகுபாடும் ஏற்படாமல் காப்பது.
  • சமுதாயத்தில் இருந்து அனைத்து விதமான சுரண்டல்களையும் அகற்ற இந்தியா முயல்கிறது
  • பொருளாதார நீதி என்பது வருமானம் செல்வம் மற்றும் பொருளாதார நிலை அடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாகுபாடு இல்லாமை ஆகும்
  • அரசியல் நீதி என்பது சமமான, சுதந்திரமான மற்றும் நியாயமான வாய்ப்புகளை மக்களுக்கு எந்த ஒரு பாகுபாடுமின்றி வழங்தல் ஆகும். அனைத்து மக்களுக்கும் சமமான அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு இது துணை நிற்கிறது
  1. சுதந்திரம்
  • சுதந்திரம்என்பது தனிநபர்களின் செயல்பாடுகளில் கட்டுப்பாடுகள் இல்லாமலும் அதே நேரத்தில் தனிப்பட்ட ஆளுமைகளின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதலும் ஆகும்
  • ஜனநாயக அமைப்பின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு முகவுரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ள சுதந்திரம் மிகவும் அவசியம்.
  • இருப்பினும், சுதந்திரம் என்பது ஒருவர் விரும்புவதைச் செய்வதற்குஉரிமம்என்று அர்த்தமல்ல, மேலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்குள் அதை அனுபவிக்க வேண்டும்.
  1. சமத்துவம்

இது சமுதாயத்தில் எந்த ஒரு பிரிவினருக்கும் சிறப்பு சலுகைகள் இல்லாமலும், தனிநபர்களுக்கு எந்த பாகுபாடுமின்றி பொதுவான வாய்ப்புகள் வழங்கப்படுவதும் ஆகும்

  1. சகோதரத்துவம்
  • இது நாட்டு மக்களிடையே உள்ள சகோதர உணர்வை குறிக்கிறது. மேலும் தேசிய ஒருங்கிணைப்பு உளவியல் மற்றும் பிராந்திய பரிமாணங்களை இது உள்ளடக்கியுள்ளது
  • மாநிலத்தின் ஒற்றுமையை தடுக்கும் சாதியம் ஆகியவற்றிற்கு இதில் இடமில்லை.
  • சகோதரத்துவம் என்னும் வார்த்தை டாக்டர் பி ஆர் அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டது.

முகவுரை திருத்தம்:

  • 1976, 42 வது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் சேர்க்கப்பட்டது.
  • 1960 பெருபாரி வழக்கில், உச்ச நீதிமன்றம் முகவுரை அரசியலமைப்பின் ஒரு அங்கம் இல்லை என்று தீர்ப்பளித்தது
  • 1973 கேசவனந்த பாரதி வழக்கில் முகவுரை திருத்தம் செய்யலாமா என்ற கேள்வி எழுந்தபோது, உச்ச நீதிமன்றம் முகவுரை திருத்தம் செய்ய முடியும் என்றும், திருத்தம் செய்யும் போது அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு பாதகம் இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் கூறியது.
  • இருப்பினும், முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி என்று உச்ச நீதிமன்றம் கருதியது. இது தொடர்பாக பெருபாரி வழக்கில் (1960) உச்ச நீதிமன்றம் தான் அளித்த கருத்து தவறானது என்றும், ‘அடிப்படை அம்சங்களுக்குஎந்தத் திருத்தமும் செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு முகவுரையைத் திருத்த முடியும் என்றும் கூறியது.

1995ஆம் ஆண்டில் மத்திய அரசின் எல்ஐசியின் வழக்கில் உச்ச நீதிமன்றம் முகவுரை, அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது என்று மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டது.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here