Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் -...

TNPSC இந்திய அரசியல் இலவச குறிப்புகள் – மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (1919)

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

மாண்டேகுசெம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (1919)

அறிமுகம்:

இந்த சட்டமே மாண்டேகுசெம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுகிறது அப்போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் செம்ஸ்போர்டு பிரபு ஆவார்

பின்னணி:

  • முதல் உலகப் போர் காலத்தில் நடைபெற்ற தன்னாட்சி இயக்கம் போன்ற அரசியல் நடவடிக்கைகளின் பலனாக ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது
  • 1917 ஆகஸ்ட் 20 ஆம் நாள் இந்தியாவிற்கான அயலுறவுச் செயலர்   மாண்டேகு, காமன்ஸ் சபையில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார்
  • இந்தியாவில் படிப்படியாக பொறுப்புள்ள அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவரது அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது
  • அதன் முதல் தவணையாக இங்கிலாந்து நாடாளுமன்றம் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியது.

இச்சட்டத்தின் முக்கிய கூறுகளாவன:

  • மாகாணங்களில் இரட்டையாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாண அதிகாரங்கள் யாவும்ஒதுக்கப்பட்ட துறைகள்எனவும்மாற்றப்பட்ட துறைகள்எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட துறைகளின்கீழ் காவல்துறை, சிறைச்சாலைகள், நிலவருவாய், நீர்பாசனம், வனங்கள் போன்ற துறைகளும், மாற்றப்பட்ட துறைகளின் கீழ், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள், பொது சுகாதாரம், துப்புரவு, வேளாண்மை மற்றும் தொழில்கள் போன்ற துறைகளும் இருந்தன. ஒதுக்கப்பட்ட துறைகள் ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் நிர்வாகத்தில் இயங்கின. மாற்றப்பட்ட துறைகளை ஆளுநரும் அவரது அமைச்சர்களும் நிர்வகித்தனர்.
  • மத்தியில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது. மாநிலங்களவை என்றும் சட்டப்பேரவை என்றும் இவை அழைக்கப்பட்டன. சட்டப்பேரவையில் இருந்த மொத்தம் 145 உறுப்பினர்களில் 105 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் எஞ்சிய 40 பேர் நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். மாநிலங்களைவையிலிருந்த அதிகபட்ச உறுப்பினர்களான 60 பேரில் 34 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எஞ்சிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவர்கள்.
  • இந்தியாவுக்கான அயலுறவுச்செயலர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான ஊதியம் இனி பிரிட்டிஷ் வருவாயிலிருந்தே அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • லண்டனில், இந்தியாவுக்கான உயர் ஆணையர் (தூதர்) ஒருவர் நியமிக்கப்பட்டார்.
  • இந்த சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு, மாகாணங்களில் கொண்டுவரப்பட்ட இரட்டையாட்சி முறையின்கீழ் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதேயாகும்.

இந்திய அரசு சட்டம் – 1935:

அறிமுகம்:

சைமன் குழு அளித்த அறிக்கை, வட்டமேசை மாநாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் 1933 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 1935 ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1919 ஆம் ஆண்டு சட்டத்தில் இந்த சட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது

இச்சட்டத்தின் சிறப்புக் கூறுகள் வருமாறு:

  1. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த மாகாணங்கள் மற்றும் சுதேச அரசுகள் அடங்கிய அனைத்திந்திய கூட்டாட்சி ஒன்று மத்தியில் உருவாக்க வழிவகை செய்யப்பட்டது. (சுதேச அரசுகள் இதற்கு உடன்பட மறுத்தமையால் கூட்டாட்சி உருவாக்கப்படவில்லை).
  2. மத்திய அரசின் அதிகாரங்கள் மூன்று பட்டியல்களாக பிரிக்கப்பட்டதுகூட்டாட்சிப் பட்டியல், மாகாண பட்டியல் மற்றும் பொது பட்டியல்.
  3. மத்தியில் இரட்டையாட்சி கொண்டு வரப்பட்டது. ஒதுக்கப்பட்ட துறைகள் தலைமை ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தன. மாற்றப்பட்ட துறைகள் அமைச்சரவையின் பொறுப்பில் விடப்பட்டன.
  4. மாகாணங்களில் இரட்டையாட்சி ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண நிர்வாகக்குழுவின் தலைவராக ஆளுநர் இருப்பார். அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் அவர் நிர்வாகத்தை நடத்துவார். எனவே மாகாண அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பில் விடப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட   மாகாண சட்டப்பேரவைக்கு அவர்கள் பொறுப்புள்ளவர்களாவர்.
  5. வங்காளம், சென்னை, பம்பாய், ஐக்கிய மாகாணம், பீகார் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
  6. சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், இந்திய கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் தனித்தொகுதி முறை விரிவுபடுத்தப்பட்டது.
  7. ஒரு தலைமை நீதிபதி, ஆறு நீதிபதிகள் கொண்ட கூட்டாட்சி நீதிமன்றம் டெல்லியில் நிறுவப்பட்டது.

முடிவுரை:

  • மாகாண சுயாட்சி பல இடங்களில் வெற்றிகரமாக செயல்படவில்லை 
  • அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆளுநர் கட்டாயமாக கேட்டு நடக்க வேண்டியதில்லை என்ற நிலையே இதற்குக் காரணம்
  • மாகாண அரசின் உண்மையான அதிகாரம் ஆளுநரிடமே இருந்தது. இத்தகைய குறைபாடுகள் இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி நடக்கவிருந்த மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் கலந்து கொள்வது என முடிவெடுத்தது. முந்தைய சட்டங்களைவிட இச்சட்டம் இந்தியர்களுக்கு முற்போக்கானதாக காணப்பட்டது.

1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி 1937 பிப்ரவரியில் மாகாண சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரஸ் இத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது. 1937 ஜூலை 7 ஆம் நாளன்று தலைமை ஆளுநர் லின்லித்கோ பிரபு அளித்த ஒத்துழைப்பை அடுத்து ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவைகளை அமைத்தது.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here