Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - இந்திய...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – இந்திய ரிசர்வ் வங்கி

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

இந்திய ரிசர்வ் வங்கி

  • இந்தியாவின் மைய வங்கி இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது.
  • இது பணவியல் கொள்கை மூலம், பண அளிப்பினை மேலாண்மை செய்கிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934ன் படி, ஏப்ரல் 1-ஆம் தேதி 1935 முதல் ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கியது. 
  • ஜனவரி 1, 1949 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.
  • ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னராக சர் ஆஸ்போர்ன் ஸ்மித் இருந்தார்.

நிர்வாகம்:

  • மைய வங்கி மற்ற இந்திய வங்கிகளின் நெறியாளர் ஆகும்.
  • இது கடைசி நிலைக் கடன் வழங்குபவர் என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஒரு ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள் மற்றும் மைய அரசால் நியமிக்கப்படும் மைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இதன் உறுப்பினர்கள் ஆவர்.

பணிகள்: 

  • பண அதிகார அமைப்பு: 

இது இந்தியாவில் பண அளிப்பினை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலவாணி பரிவர்த்தனை விகிதத்தினை நிலைப்படுத்துதல், சாதகமான செலுத்து நிலையைப் பேணுதல், நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் வங்கியமைப்பை உறுதியாக்குதல் ஆகியவற்றை செய்கிறது. 

  • காகிதப்பண வெளியீடு: 
      • இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ஒரு ரூபாய் காகிதப்பணத்தைத் தவிர அனைத்து வகையான பணத்தை வெளியிடுவதில் முற்றுரிமை பெற்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியாகும். 
      • மேலும், பண மற்றும் கடன் அளவுகளை இது மேலாண்மை செய்கிறது. 
      • புழக்கத்தில் உள்ள போலியான பணத்தினை கட்டுப்படுத்தும் பொறுப்பும் மைய வங்கிக்கு உண்டு.
  • வங்கி உரிமங்கள் வழங்குபவர்: 

வங்கிகள் முறைப்படுத்துதல் சட்டம், பிரிவு 22 ன் படி ஒவ்வொரு வணிக வங்கியும் இந்தியாவில் வங்கித்தொழில் செய்ய மைய வங்கியிடம் உரிமம் பெற வேண்டியது அவசியம் ஆகும்

  • அரசுக்கான வங்கி: 
    • இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான வங்கி ஆகும். 
    • அரசுகளுக்கு குறுகியகால கடன்களை தருகிறது. 
    • இது அரசு கடன்கள், அரசு கடன் தொடாபான சேவைகள், அரசு கடன் பத்திரங்கள்களை உருவாக்கி விற்பனை செய்வது ஆகிய பணிகளைச் செய்கின்றது. 
    • அரசுக்கு வங்கி மற்றும் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. 
  • வங்கிகளின் வங்கி: 
  • இந்திய ரிசர்வ்வங்கி அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியாகும். 
  • இது வங்கிகளுக்கு வேண்டிய கடன்களை அளிக்கிறது. அவைகளின் வைப்புக்களை ஏற்கிறது. மாற்றுச் சீட்டுக்களை மறு தள்ளுபடி செய்கிறது. 
  • கடைசிநிலைக்கடன் ஈவோன்: 

வணிக வங்கிகளுக்கு தீர்க்க இயலாத நிதிச் சிக்கல்கள் ஏற்படும் பொழுது, நிதிக்கான மற்ற ஆதாரங்கள் இல்லாத சூழ்நிலையில் அச்சிக்கலிருந்து மீள்வதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈட்டுக்கடனை அளித்து உதவுகிறது. 

  • தீர்வாக செயல்படுகின்றது: 
      • வங்கிகளுக்கிடையே நடக்கும் பரிவர்த்தனைகளை தனது 14 தீர்க்கங்களைக் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி சமன் செய்கின்றது. 
      • பரிவர்த்தனைக் கருவிகளை பரிமாறிக் கொள்ள உதவுப்பதுடன், பரிவர்த்தனை தொடர்பான அறிவுறுத்தல்களையும் வழங்குகிறது. 
  • அந்நிய செலாவணி பாதுகாவலன்: 
      • இது அந்நிய செலாவணி இருப்புக்களை பாதுகாக்கும் பணியினை செய்கிறது. 
      • 1999 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act – FEMA) சட்டத்தின்படி இது அந்நிய செலாவணி மேலாண்மையும் நிர்வகிப்பினையும் மேற்கொள்கிறது. 
      • அந்நிய பணத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் பரிமாற்ற விகிதத்தை நிலைப்படுத்துவதற்காக வெளிநாட்டு பணங்களை அவ்வப்பொழுது வாங்கி விற்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
  • பொருளாதாரத்தை நெறிப்படுத்துகிறது: 

பணவியல் கொள்கையை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தை நெறிப்படுத்த தேசிய வருவாய், வேலைவாய்ப்பு செலவு, சேமிப்பு, முதலீடு போன்று முக்கிய குறியீடுகளை தொடர்ந்து கண்காணிகிறது. 

  • அரசு கடன் பத்திரங்களை நிர்வகிக்கிறது: 

குறிப்பிட்ட சதவிகிதத்திலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை அரசின் கடன்பத்திரங்களாக கொண்டுள்ள நிறுவனங்களை இந்திய ரிசர்வ் வங்கி கண்காணித்து நிர்வகிக்கின்றது. 

  • செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதில் நெறியாளாராகவும், மேலாளராகவும் செயல்படுகிறது: 

2007-ஆம் ஆண்டு செலுத்துதல் மற்றும் தீர்வுச் சட்டத்தின் (The Payment and Settlement System Act, 2007 – FSS Act) கீழ் ரிசர்வ் வங்கி பாதுகாப்பான மற்றும் திறமையான செலுத்துதல் மற்றும் தீர்வுகளை மேற்பார்வையிடுவதன் மூலம் மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. 

  • மேம்பாட்டு பணி: 
      • இந்திய ரிசர்வ் வங்கி சிறந்த வங்கி அமைப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதன் மூலம் சிறந்த உற்பத்தித் திறன் கொண்ட துறைகளுக்கு கடன்கள் வழங்கப்படுவதை உறுதி செய்கின்றது. 
      • இது மேலும், நாட்டின் நிதிக்கட்டமைப்பினை ஏற்படுத்தும் நிறுவனங்களையும் அமைக்கின்றது. 
      • மேலும், நாட்டில் நிதிச் சேவைகள் மற்றும் நிதிக் கல்வியறிவு ஆகியவற்றை விரிவாக்கும் பணியினையும் செய்கின்றது. இதற்கான கல்வி, ஆய்வு நிறுவனங்களையும் நடத்துகின்றது. 
  • பணவியல் மற்றும் இதர தகவல்களை வெளியிடுகிறது: 
      • புள்ளிவிவரங்களை திரட்டி, வரிசைப்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியீடு (Reserve Bank of India Bulletin) மூலம் மாத காலாண்டு, ஆண்டு விவரங்களை வெளியிடுகிறது. 
      • பணம், வங்கி மற்றும் முக்கிய பொருளாதாரப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. மேலும், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளை திறனாய்கிறது. 
  • பரிவர்த்தனை மேலாளர் மற்றும் நெறியாளார்: 
      • சர்வதேச பண நிதியத்தின் (International Manetary Furd) இந்திய உறுப்பினர் பிரதிநிதியாக இந்திய ரிசர்வ் வங்கி விளங்குகிறது. 
      • அந்நிய செலாவணி விற்பனையாளர்களான வணிக வங்கிகளை நெறிப்படுத்தும் செயலையும் இந்திய ரிசர்வ் வங்கி செய்கிறது. 
  • வங்கி குறைதீர்ப்பாய திட்டம்: 
    • இந்திய ரிசர்வ் வங்கி 1995 ல் வங்கி குறைதீர்ப்பாயத்தினை (Banking ombudsman) அறிமுகப்படுத்தியது. 
    • இத்திட்டத்தின்கீழ், வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு வரும் அனைத்து புகார்கள் மற்றும் மேல்முறையீடுகளை வங்கி குறைதீர்ப்பாயம் களைகின்றது. 
    • இணையவழியில் வரும் புகார்கள் உட்பட அனைத்து வழிகளில் வரும் புகார்களையும் இந்த குறை தீர்ப்பாயம் கணக்கில் எடுத்துக் கொள்கின்றது. 

  • இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியம்: 

வங்கிகளின் திறனை அளவிடும் விதமாக, உலகளவில் ஏற்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் மதிப்பீடுகள் அடிப்படையில் இந்திய வங்கி நெறிமுறை மற்றும் மதிப்பீடுகள் வாரியத்ததை (Banking Codes and standards Board of India – BCSBI) அமைத்துள்ளது.

 

**************************************************************************

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - இந்திய ரிசர்வ் வங்கி_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here