Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - ஜிஎஸ்டியின்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – ஜிஎஸ்டியின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

GSTயின் மூன்று வகைகள்: CGST, SGST/UGST, IGST

    • CGST (மத்திய சரக்கு மற்றும் சேவை வரி) – CGST சட்டம் 2017 இன் கீழ் ஒரு மாநிலத்திற்குள் (உள்-மாநில) அனைத்து பொருட்களின் மீது மத்திய அரசால் விதிக்கப்பட்டு மற்றும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • SGST (மாநில சரக்கு மற்றும் சேவை வரி)SGST சட்டத்தின் கீழ் மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு ஜிஎஸ்டி சட்டம் 2017 நிறைவேற்றப்பட்டது.
  • UGST (யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி)UGST சட்டம் 2017 இன் கீழ் இந்தியாவில் ஐந்து யூனியன் பிரதேச நிர்வாகங்களால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. 
  • IGST (மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் சேவை வரி) – வரி விதிக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட வருவாய் IGST சட்டம் 2017. 
  • ஏற்றுமதிமீதான IGST: அனைத்து ஏற்றுமதிகளும் ஜிஎஸ்டியின் கீழ் மாநிலங்களுக்கு இடையேயான அளிப்பாக கருதப்படும். 
  • ஏற்றுமதி பூஜ்யம் தரம் மதிப்பிடப்பட்டுள்ளது ஆதலால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. 
  • ஏற்றுமதி மீது செலுத்தப்படும் அணைத்து உள்ளிட்டு வரிகளும் திருப்பி கொடுக்கப்படுகிறது.

CGST, SGST, IGST – களுக்கு இடையேயான வேறுபாடுகள்

வேறுபாடுகள் CGST SGST IGST
பொருள் மத்திய அரசால் சுமத்தப்படுகிறது. சேவை வரி மற்றும் உள்நாட்டு வரி போன்றவற்றிற்கு மாற்றாக உள்ளது மாநில அரசால் சுமத்தப்படுகிறது. விற்பனைவரி, ஆடம்பரவரி மற்றும் நுழைவு வரிகளுக்கு மாற்றாக உள்ளது மத்திய அரசால் சுமத்தப்படுகிறது IGST என்பது ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ஆகும் இது CGST, SGST இணைந்த முறை ஆகும்
வரி வசூலிப்பவர் மத்திய அரசு மாநில அரசு மத்திய அரசு
பொருந்துதல் மாநிலங்களுக்குள் நடைபெறும் அளிப்பு மாநிலங்களுக்கள் நடைபெறும் அளிப்பு மாநிலங்களுக்கு இடையேயான அளிப்பு
பதிவு செய்தல் விற்பனை 20 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் பதிவு செய்யத் தேவையில்லை (வடகிழக்கு மாநிலங்களுக்கு 10 லட்சம்) விற்பனை 20 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் பதிவு செய்யத் தேவையில்லை (வட கிழக்கு மாநிலங்களுக்கு 10 லட்சம்). பதிவு செய்தல் கட்டாயம்
தொகுப்பு வணிகர் 75 லட்சம் வரை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனடையலாம் வணிகர் 75 லட்சம் வரை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொகுப்பு திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான அளிப்புக்கு பொருந்தாது

 

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here