Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வரவு...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வரவு செலவு திட்டத்தின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

வரவு செலவு திட்டத்தின் வகைகள்

துணை வரவு செலவுத் திட்டம்: 

  • போர்க்காலம் மற்றும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் போது செலவுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போதுமானதாக இருப்பதில்லை. 
  • இந்த எதிர்பாராத சூழ்நிலையை சமாளிப்பதற்காக அரசினால் துணை வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும்.

நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவு திட்டம்: 

  • இந்திய அரசியலமைப்பு விதி 116ன்படி பட்ஜெட் வருட மத்தியில் சமர்ப்பிக்கப்படும். 
  • இதற்கு அரசியல் காரணம் இருக்கிறது. இருக்கக்கூடிய அரசானது தேர்தல் காரணமாக அந்த வருடம் முழுவதும் தொடர்ந்தோ, தொடராமலோ இருக்கலாம். இதனால் அந்த அரசு தாக்கல் செய்யும் வரவு செலவுத்திட்டம் நொண்டி வாத்து வரவு செலவுத்திட்டம் என அழைக்கப்படுகிறது. இது நிதிக்கு வாக்கெடுப்பு வரவு-செலவுத்திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. 
  • சிறப்பு நிகழ்வாக நிதிக்கு வாக்கெடுக்கும் வரவு செலவுத் திட்டமான அவசியமான இனங்களுக்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறும்வரை செலவு மேற்கொள்ள அனுமதி உள்ளது. 
  • வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் வரை தொகுப்பு நிதியிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள சட்டரீதியான அனுமதி உள்ளதை வாக்கெடுக்கும் வரவு செலவுத்திட்டம் என அழைக்கப்படுகிறது. இத்தகைய அனுமதி அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு மற்றும் வழங்கப்படுகிறது.

பூஜ்ய வரவு செலவுத் திட்டம்: 

  • இந்திய அரசு 1987- 88ல் பூஜ்ய வரவு செலவுதிட்டத்தை தாக்கல் செய்தது. 
  • இதில் ஒவ்வொரு செலவினமும் புதியதாகக் கருதப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடுகள் செய்யப்படும் இனமாக கருதப்பட்டு அரசு பட்ஜெட்டில் புதிதாக செலவு மதிப்பீட்டை கொண்டுள்ளது.
  • சமூகத்தின் முந்தைய முன்னுரிமைகளை சமூக பொருளாதார நோக்கங்களின் பார்வையில் மறுஆய்வு செய்யப்பட்டு நியாயப்படுத்தும்.   

செயல்திறன் வரவு செலவுத் திட்டம்: 

  • எந்த ஒரு வரவு செலவு திட்டத்தின் வெளியீட்டின் அடிப்படையில் வரவு செலவுத்திட்டம் அமைந்தால் அது செயல்திறன் வரவு செலவுத் திட்டம் என அழைக்கப்படுகிறது. 
  • இது உலகில் முதன் முதலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • சர் உப்பர் தலைமையில் அமெரிக்காவில் 1949-ல் நிர்வாக சீர்திருத்த குழு அமைக்கப்பட்டது. 
  • இந்த குழுவின் பரிந்துரையின்படி செயல்திறன் வரவு செலவுத்திட்டம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது. மக்களின் நலனுக்காக இந்த வரவு   செலவுத் திட்டத்தில் என்ன செய்தோம் எவ்வளவு செய்தோம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  • இந்தியாவில் செயல்திறன் வரவு செலவுத் திட்டத்தை சாதனைத் திட்டம் என அழைக்கப்படுகிறது.

சமநிலை மற்றும் சமனற்ற வரவு செலவுத் திட்டம்:

  • சமநிலை வரவு செலவுத் திட்டம்
  • ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாயும் திட்டமிடப்பட்டுள்ள செலவும் சமமாக இருந்தால் அது சமநிலை வரவு செலவுத்திட்டம் எனப்படும் 
  • அரசின் திட்டமிட்ட வருவாய் = அரசின் எதிர் நோக்கும் செலவுகள்
  • சம நிலையில்லா வரவு செலவுத் திட்டம்
    • அரசு எதிர்பார்க்கிற வருவாயும் திட்டமிடப்பட்டுள்ள செலவும் சமமாக இல்லாது இருந்தால் அது சமநிலையில்லா வரவு செலவுத் திட்டமாகும்.
  • சமநிலையற்ற வரவு செலவுத்திட்டம் இருவகைப்படும் 
  1. உபரி வரவு செலவுத் திட்டம்
  2. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்

உபரி வரவு செலவுத்திட்டம்

  • ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள செலவைவிட அதிகமாக இருந்தால் அது உபரி வரவு செலவுத்திட்டம் எனப்படும் 
  • உபரி வரவு செலவுத் திட்டம் = அரசு எதிர் பார்க்கிற வருவாய் > திட்டமி்டப்பட்டுள்ள செலவு 

பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்

  • ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கிற வருவாய் திட்டமிடப்பட்டுள்ள செலவை விட குறைவாக இருந்தால் அது பற்றாக்குறை வரவு செலவுத்திட்டம் எனப்படும்.
  • பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் = அரசு எதிர்பார்க்கிற வருவாய் < திட்டமி்டப்பட்டுள்ள செலவு

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here