Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - இந்தியாவில்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – இந்தியாவில் வரிவிதிப்பு முறை

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

இந்தியாவில் வரிவிதிப்பு முறை

வரிவிதிப்பு:

  • வழக்கமாக அரசால் விதிக்கப்படும் வரியையே வரிவிதிப்பு என்னும் சொல்லால் குறிப்பிடுகிறோம். 
  • வரி விதிப்பு என்பது வருமானம் முதலீட்டால் பெறும் ஆதாயம் சொத்து போன்ற அனைத்து வகைக்கும் விதிக்கப்படும் வரியைக் குறிக்கும்.

வரிகள்:

  • வரி செலுத்துவோர் எவ்வித நேரடியான பலனையும் எதிர்பார்க்காமல் அரசுக்குக் கட்டாயமாகச் செலுத்துபவையே வரிகள் ஆகும்.  
  • பேராசிரியர் சேலிக்மனின் கூற்றுப்படி வரிகள் என்பவை ஒருவர் அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயப் பங்களிப்பாகும். இதில் பெறப்பட்ட சிறப்புச் சலுகைகள் குறிப்பிடப்படுவதில்லை. இப்பங்களிப்பின் மூலம் பொது நலத்திற்காக அரசு மேற்கொள்ளும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

வரி விதிப்புக்கு கோட்பாடு:

ஆடம் ஸ்மித்தின் நான்கு வகையான வரி விதிப்பு கோட்பாடுகள் இன்றைய காலக்கட்டத்திலும் வரிக் கட்டமைப்புக்கான அடிப்படையை உருவாக்குகின்றன

  1. சமத்துவ விதி
  2. உறுதிப்பாட்டு விதி
  3. வசதி விதி
  4. சிக்கன விதி

சமத்துவ விதி:

  • மக்கள் தத்தமது வசதிக்கேற்ற வகையில் செலுத்துவதற்காக அரசு வரி விதிக்கும் முறைகளுள் ஒன்று சமத்துவ விதியாகும். 
  • இதனால் அனைவரும் சமமாக வரி செலுத்த வேண்டும் என்பது பொருளன்று மாறாக மக்கள் மீது சுமத்தப்படும் வரியானது எளிமையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டும் என்பதையே இவ்விதியே விளக்குகிறது. 

உறுதிப்பாட்டு விதி:

வசூலிக்கப்படும் வரியின் மூலம் வரி செலுத்துவோர்க்கு ஓர் உறுதிப்பாட்டுத் தன்மையை இவ்விதி உருவாக்குகிறது பொருளாதார வளத்தை மேம்படுத்துகிறது ஏனெனில் இவ்விதியின் மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன

 வசதி விதி:

  • வரி செலுத்தவோர்க்கு அதிகபட்ச வசதிகளை வழங்கும் வகையில் வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. 
  • வரி செலுத்துவோர் தாம் செலுத்தும் வரியின் மூலம் குறைந்தபட்ச அளவிலேயே துன்பப்படுவர் என்பதை எப்போதும் கவனத்திற்க்கொள்ள வேண்டும். 

 

சிக்கன விதி:

  • வசூலிக்கப்படும் வரியிலிருந்து குறைந்த அளவிலேயே தொகை செலவழிக்கப்பட வேண்டும். 
  • வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசுக் கருவூலத்தின் இருப்பில் வைக்கப்பட வேண்டும்.

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here