Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - மத்திய...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் வருவாய் பகிர்வு

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 

மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் வருவாய் பகிர்வு

மைய அரசின் வருவாய் மூலங்கள்:

  • தொழில் நிறுவனங்கள் மீதான வரி.
  • பணம் நாணயங்கள் மற்றும் அந்நியச் செலவாணி.
  • சுங்க வரி ஏற்றுமதி வரி உட்பட.
  • புகையிலை மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய பொருட்களுக்கான கலால் வரி.
  • வேளாண்மை நிலங்கள் தவிர்த்த பண்ணை வரி.
  • நீதிமன்றங்கள் விதிக்காக மத்திய பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்.
  • அயல்நாட்டு கடன்கள்.
  • இந்தியா அரசால் அல்லது மாநிலங்களால் அமைக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள்.
  • தபால் துறையின் சேமிப்பு வங்கி.
  • தொலை தொடர்பு துறையின் வருவாய்கள்.
  • மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள்.
  • மத்திய அரசின் பொதுக்கடன்.
  • இரயில்வே.
  • மாற்றுச் சீட்டுகள் காசோலைகள் மற்றும் உறுதிமொழி பத்திரங்கள் மீதான வில்லைக் கட்டணம்.
  • இந்திய ரிசர்வ் வங்கி.
  • வருமான வரி (வேளாண் வருவாய் தவிர்த்து).
  • சொத்துக்களின் மூலதன மதிப்பில் விதிக்கப்படும் வரி (தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் விவசாய நிலம் தவிர).
  • பங்குச் சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி.
  • செய்தித்தாள் மீதான வரி (அதில் வெளியிடும் விளம்பரம் உட்பட).
  • இரயில் கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி.

மாநில வளங்கள்:

  • தலை வரி.
  • வேளாண் நிலங்கள் மீதான வரி.
  • மது மற்றும் போதைப் பொருட்கள் மீதான கலால் வரி.
  • பண்ணை வரி (விவசாய நிலங்கள்).
  • நீதிமன்றங்கள் விதிக்காக மாநில பட்டியலில் உள்ள இதர கட்டணங்கள்.
  • நில வருவாய்.
  • மத்தியப் பட்டியலில் இல்லாத ஆவணங்களுக்கான வில்லைக் கட்டணம்.
  • வேளாண் வருமான வரி.
  • நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி.
  • கனிம வளங்கள் எடுப்பதற்கான உரிம வரி.
  • மின்சார நுகர்வு மற்றும் விற்பனைக்கான வரி.
  • உள்ளுர் பகுதியில் நுகர்வு மற்றும் விற்பனை பொருட்களுக்கான நுழைவு வரி.
  • செய்தித்தாள் தவிர்த்த இதர பொருட்கள் மீதான விற்பனை வரி.
  • செய்தித்தாள் தவிர்த்த இதர விளம்பரங்கள் மீதான வரி.
  • சாலை மற்றும் நீர்வழி மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பயணிகள் மீதான வரி.
  • வாகன வரி.
  • 17 விலங்குகள் மற்றும் படகுகள் மீதான வரி.
  • வியாபாரம் மற்றும் தொழிலாளர்கள் மீதான தொழில் வரி.
  • பொழுதுபோக்குகள் மற்றும் சூதாட்டங்கள் மீதான வரி.
  • சாலை சுங்க கட்டணம்.

மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் (சரத்து 269-ன் படி):

  • விவசாய நிலம் தவிர்த்த இதர சொத்துகள் மீதான வரி.
  • பண்ணை வரி (வேளாண்மை நிலம் தவிர்த்த).
  • இரயில்வே கட்டணங்கள் மற்றும் சரக்கு கட்டணங்கள்.
  • பங்குச் சந்தை மற்றும் எதிர்கால சந்தை பரிவர்த்தனைகளில் முத்திரை வரிகளை தவிர வேறு வரி.
  • செய்திதாள் மீதான வரி (அதில் வெளியிடும் விளம்பரம் உட்பட).  
  • இரயில் கடல் வழி மற்றும் ஆகாய மார்க்கமாக செல்லும் பயணிகள் மற்றும் சரக்குகள் மீதான வரி.
  • மாநிலங்களுக்கிடையேயான பண்டங்கள் விற்பனை மற்றும் வாங்குதல் மீதான வரி (செய்தித்தாள் தவிர).

மத்திய அரசால் விதிக்கப்பட்டு, ஆனால் மாநில அரசு வசூலிப்பது மற்றும் பயன்படுத்துவது (ஷரத்து 268):

  • வில்லைகட்டணம் மற்றும் சுங்கவரி மருத்துவ மற்றும் கழிவறை மீதான வரி (மத்திய பட்டியலில் குறிப்பிட்டுள்ளது) இந்திய அரசு விதிக்கும்.
  • ஆனால்,
  • யூனியன் பிரதேசங்களில் இந்திய அரசே வசூலிக்கும்.
  • மற்ற வகையில் மாநிலங்களே அவைகளை விதிக்கும்.

மத்திய அரசால் விதிக்கப்பட்டடு வசூலிக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரிகள் (சரத்து 270 மற்றும் 272 -ன் படி):

  • வேளாண்மை வருவாய் தவிர்த்த இதர வருமான வரி வருவாய்.
  • இந்திய அரசின் மத்தியப் பட்டியலில் உள்ள மத்திய கலால் வரி (மருத்துவம் மற்றும் கழிவறை மீதான வரி தவிர்த்த).
  • வருமான வரியில் நிறுவனங்கள் மீதான வரி உள்ளடக்கப்படவில்லை.
  • வருமான வரி மாநகராட்சி வரியை உள்ளடக்கியது அல்ல நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வருமான வரி மத்திய மற்றும் மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

 

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here