தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- “கழை” பொருள்? முங்கில்.
- மலைபடுகடாம் – எவ்வகையான நூல்களுள் ஒன்று? பத்துப்பாட்டு.
- மலைபடுகடாம் நூலின் வேறுபெயர்? கூத்தராற்றுப்படை.
- மலைபடுகடாம் என்ற நூலின் ஆசிரியர்? பெருங்கௌசிகனார்.
- மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன்? நன்னன்.
- பரூஉக்குறை இலக்கணக் குறிப்பு? செய்யுளிசை அளபெடை,
- “அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது? வேற்றுமை உருபு.
- பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது? இலா.
- ‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ யாரிடம் யார் கூறியது? இறைவனிடம் குலசேகராழ்வார்.
- பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்பதன் பொருள்? வானத்தையும் பேரொலியையும்.
- குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தையும் அழைத்துப் பாடுகிறார். தொடரில் இருப்பது எவ்வகையான வழுவமைதி? பால் வழுவமைதி.
- ‘பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் தொடரில் இருப்பது எவ்வகையான வழுவனமதி? பால் வழுவமைதி, திணை வழுவமைதி,
- ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி? சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
- அருந்துணை பிரித்து எழுது? அருமை + துணை.
- “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருனை” என்று இவ்வடிகளில் எதைக் குறிப்பிடுகிறது? கல்வி
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |