இயற்பியலின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும்.அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இயற்பியல் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இயற்பியல் குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
இயற்பியல்
- திசைவேகம் அதிகமானால் விசையின் தாக்கம்? அதிகமாகும்.
- நிறை அதிகமானால் விசையின் தாக்கம்? அதிகமாகும்.
- விசையின் விளைவானது யாரைப் பொறுத்தது? திசைவேகத்தையும் + நிறையினையும்.
- ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தை யார் மூலம் அளவிடலாம்? நேர்க்கோட்டு உந்தத்தின் மூலம்
- இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன்? உந்தம் எனப்படும்.
- உந்தத்தின் திசையானது? பொருளின் திசைவேக திசையிலேயே அமையும்.
- உந்தம் ஒரு? வெக்டார் அளவாகும்.
- உந்தம் = நிறை x திசைவேகம் ( p=mv )
- விசையின் எண் மதிப்பு யாரைக்கொண்டு அளவிடலாம்? உந்தம்.
- உந்தத்தின் SI அலகு? கிகி மீ வி-1
- உந்தத்தின் CGS அலகு? கிசெமீ.வி-1
- ஓய்வில் உள்ள பொருளை இயக்குவதற்கு தேவை? விசை
- இயங்கிக் கொண்டிருக்கும் பொருளை நிறுத்த தேவை? விசை
- இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் திசையினை மாற்ற தேவை? விசை
- விசை ஒரு? வெக்டார் அளவாகும்.
- எதிர் எதிர் திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்படும் விசைகள்? மாறுபட்ட இணைவிசைகள்.
- விசை செயல்படும் திசை சார்ந்து விசையின் வகை? 2 வகை.
- ஒரே திசையில் ஒரு பொருள் மீது இணையாகச் செயல்படும், 2 சமமான விசைகள்? ஒத்த இணைவிசைகள்.
- ஒரு பொருள் மீது பல்வேறு விசைகள் செயல்படும்போது, அவற்றின் மொத்த விளைவை ஏற்படுத்தும் ஒரு தனித்த விசை? “தொகுபயன் விசை”.
- பொருள் சமநிலையில் உள்ளபோது, தொகுபயன் விசையின் மதிப்பு? சுழி
- சமன்செய்யப்பட்ட விசைகளில், தொகுபயன் விசையின் மதிப்பு? சுழி.
- நெம்புகோலின் மீது செயல்படும் விசை? சமன் செய்யப்படாத விசை
- தராசுத்தட்டுகளில் செயல்படும் விசை? சமன் செய்யப்படாத விசை
- எதிர் எதிர் திசையில் செயல்பட்டு, பொருட்களை சம நிலைக்கு கொண்டுவர உதவும் விசை? “எதிர் சமனி”
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil