Tamil govt jobs   »   Latest Post   »   Adda's One Liner Important Questions on...

Adda’s One Liner Important Questions on TNPSC & TNUSRB

இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.

இந்திய அரசு அமைப்பு

  • மக்களவையின் தலைவர்? அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்
  •  எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்? நீதித்துறை
  • இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது? விதி  32
  • சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது? அரசியல் சமத்துவம்
  • நீதி மறுபரிசீலணை என்பது? சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது
  • இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது? அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
  • எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?  42வது அரசியலமைப்பு திருத்தம்
  • 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப் பட்டபின், சொத்துரிமையானது? அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
  • எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது? கேரளா
  • எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது? விதி 370
  • இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்? சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
  • சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்?  மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓரவை
  • இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்ட பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர் வாளர் குழுவால்
  • அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? மாண்டேஸ்கு
  • அரசியல் அறிவியலின் தந்தை எனப்படுபவர்? அரிஸ்டாட்டில்

**************************************************************************

Tamilnadu mega pack
Tamilnadu mega pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here