Tamil govt jobs   »   Latest Post   »   Aadi 18 thirunal nalvalthukal 2023

Aadi 18 thirunal nalvalthukal 2023 | ஆடி 18 திருநாள் நல்வாழ்த்துக்கள் 2023

ஆடி 18 திருநாள் நல்வாழ்த்துக்கள் 2023: நல்ல மழை பெய்து பயிர்கள் செலுத்தி இருக்கும் மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் பெய்யும் பருவ மழையால் ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி வழியும்.  இதன் அடிப்படையிலேயே ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். ஆடி மாதத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம். இந்த கணக்கில்தான் தை  தேதி பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.  இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என கூறியுள்ளனர்.

ஆடி 18 திருநாள் நல்வாழ்த்துக்கள் 2023

aadi 18
aadi 18

ஆடி மாதத்தில் வரும் 18ஆம் நாள் அன்று பதினெட்டாம் பெருக்கு அல்லது ஆடி 18 என்கிற விழா கொண்டாடப்படுகிறது. நம் தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் இந்நாளில் பெண்கள் புது தாலி மாற்றிக் கொள்வது, ஆறுகளில் வழிபாடு செய்வது போன்ற விழாக்களை முன்னெடுப்பர். இதன் மூலம் மாங்கல்ய பலம், செல்வம் பெரும் என்பது ஐதீகம்.

வேறு பெயர்கள்

ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாகத் தமிழ் விழாக்கள் நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டும், கிழமைகளையும் கொண்டும் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

Aadi Peruku Special Tests by Adda247

பண்டிகை

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், திருச்சி திருவரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு படித்துறை மற்றும் மேலும் அங்குள்ள 3 படித்துறைகளில், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர். வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியன தயார் செய்து, படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

 

விழா நிகழ்வுகள்

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். கோயில்களில் சென்று வழிப்படவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil