Tamil govt jobs   »   Latest Post   »   இந்தியா அரசியலமைப்பு - அடிப்படை உரிமை |...

Fundamental rights in Tamil | இந்தியா அரசியலமைப்பு – அடிப்படை உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி (III) 12ல் இருந்து 35 வரையுள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த அடிப்படை உரிமைகளை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகளின் தாக்கத்தால் உருவாக்கினார்கள்.

  • முதலில் இந்திய அரசியலமைப்பு ஏழு அடிப்படை உரிமைகளை வழங்கியது.
  • தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
  • இந்திய அரசியலமைப்பின் பகுதி (III) ‘இந்தியாவின் மகாசாசனம்’ என அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது.
  • இந்திய குடிமக்களுக்கு மட்டுமேயான சில அடிப்படை உரிமைகளும் உள்ளன.

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

I. சமத்துவ உரிமை

பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
பிரிவு 15- மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பிடம் இவற்றின் அடிப்படையில்
பாகுபடுத்துவதைத் தடைசெய்தல்.
பிரிவு 16 – பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பளித்தல்.
பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.
பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்களை நீக்குதல்.

II. சுதந்திர உரிமை
பிரிவு 19 – பேச்சுரிமை, கருத்து தெரிவிக்கும் உரிமை, அமைதியான முறையில்
கூட்டம் கூடுவதற்கு உரிமை, சங்கங்கள்,அமைப்புகள் தொடங்க உரிமை, இந்திய நாட்டிற்குள் விரும்பிய இடத்தில் வசிக்கும் மற்றும் தொழில் செய்யும் உரிமை.
பிரிவு 20 – குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமை மற்றும் தண்டனைகளிலிருந்து
பாதுகாப்பு பெறும் உரிமை.
பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு பெறும் உரிமை.
பிரிவு 21 A – தொடக்கக்கல்வி பெறும் உரிமை.
பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.

III. சுரண்டலுக்கெதிரான உரிமை
பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.

IV. சமயச்சார்பு உரிமை
பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.
பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில்நடைபெறும் வழிபாடு மற்றும்அறிவுரை நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமலிருக்க உரிமை.

V. கல்வி, கலாச்சார உரிமை
பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி, மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.

VI. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil