Tamil govt jobs   »   Study Materials   »   List of World Heritage Sites in...

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்

Table of Contents

List of World Heritage Sites in India : உலக பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம். இவை நமது கடந்த காலத்திலிருந்து நமக்கு மரபுவழி அளிக்கப்பட்டு, இன்று நாம் அவற்றுடன் வாழ்ந்த பின்னர், தொடர்ந்து வருங்காலத்தில் நமது சந்ததியினருக்கு அளிக்க வேண்டிய, மாற்றீடு செய்யப்பட முடியாத, சிறந்த வாழ்வையும், மன ஊக்கத்தையும் தரக்கூடிய, இயற்கை மற்றும் பண்பாட்டு மூலவளங்களாகும்.  1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை, இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது. இந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில், ஏழாவது இடத்தில் உள்ளது. 2018 வரை இந்தியாவில் உலகப் பாரம்பரியக் களங்களாக 37 இடங்கள் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யுனெஸ்கோ உலக பாரம்பரிய நெறிமுறையில் வரையறுக்கப்பட்டபடி பண்பாடு அல்லது இயற்கைச் சிறப்புமிக்க இடங்களாகும். List of World Heritage Sites in India பற்றிய தகவல்களை, நாங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

List of World Heritage Sites in India

ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை
ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை இந்தியாவின் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும். இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு கோட்டையாகும். பெரும் முகலாயப் பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்றவர்கள் இக்கோட்டையில் வாழ்ந்துள்ளார்கள். இங்குதான் மிகப்பெரிய நிதிக் கருவூலமும், நாணயத் தயாரிப்பிடமும் உள்ளது. இக் கோட்டை, “லா கிலா”, “ஆக்ராவின் செங்கோட்டை” போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

Adda247 Tamil
Adda247 Tamil Telegram

அஜந்தா குகைகள்

அஜந்தா குகைகள்
அஜந்தா குகைகள்

அஜந்தா குகைகள் என்பவை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும். மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் காணப்படும் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ள இடம் கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை. அஜந்தா குகைகள் பற்றி சீனப்பயணி யுவான் சுவாங் குறிப்பெழுதியிருக்கிறார்.

சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_6.1
சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள்

சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. இது புத்தரின் நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும். மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்கள் போன்ற அவர்களுக்குப் பின்வந்த அரசர்கள் மேலும் பல தூபிகளைக் கட்டினர். முதல் தூபிக்கு மெருகூட்டப்பட்டது. தூபியைச் சுற்றி நான்கு பக்கங்களில் தோரண வாயில்களை அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சத்தினர் அங்கு புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர்.

சம்பானேர் – பாவாகேத் தொல்லியல் பூங்கா

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_7.1
சம்பானேர் – பாவாகேத் தொல்லியல் பூங்கா

சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் அமைந்த வரலாற்றுப் புதையலாகும். சுமார் 800 மீட்டர் உயரம் கொண்ட பாவாகேத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகேத் என்றழைக்கப்படுகிறது. மலை அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவையாகும். சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம் சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484 ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார்.

Read More: List of Chief Ministers of Tamil Nadu | தமிழக முதலமைச்சர்கள்

சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்)

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_8.1
சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்)

சத்ரபதி சிவாஜி முனையம் என்பது மும்பையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ரயில் நிலையமாகும். இது யுனஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையம், மத்திய ரயில்வேயின் தலைமையிடமாகவும் செயல்படுகிறது. இது 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது இந்தியாவின் மிக பரபரப்பான ரயில் நிலையமாகும். முன்னர் விக்டோரியா முனையம் என்று அழைக்கப்பட்டது பின்னர் 1996 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரயில்நிலையம் பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ் என்ற ஆங்கில பொறியாளரால் வடிவமைக்கப்பட்டது.

கோவாவின் தேவாலயங்களும் மடங்களும்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_9.1
கோவாவின் தேவாலயங்களும் மடங்களும்

பழைய கோவா அல்லது வெல்கா கோவா, இந்திய மாநிலமான கோவாவின், வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகரத்தை 15 ஆம் நூற்றாண்டில் பிஜாப்பூர் சுல்தான்கள் கட்டினர். கோவாவைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் 3ம் நூற்றாண்டிலேயே காணப்படுகின்றன. மவுரியப் பேரரசின் ஒரு பாகமாக கோவா இருந்து வந்துள்ளது. தொடர்ந்து சாளுக்கியர்கள், டெல்லி சுல்தான்கள், விஜயநகர மன்னர்கள், போர்ச்சுகீசியர்கள் என பல தரப்பினரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. போர்ச்சுகீசியர்களின் ஆளுகையின் போது, பல தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பழைய கோவாவில் கட்டப்பட்ட தேவாலயங்கள் முக்கியமானவை. இந்த நகரத்தின் எச்சங்கள் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய கோவா தற்போதைய தலைநகரம் பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.

எலிபண்டா குகைகள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_10.1
எலிபண்டா குகைகள்

எலிபண்டா குகைகள், மும்பை கடற்கரைக்கு அப்பால், மும்பை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி தீவில் அமைந்துள்ளன. போர்த்துகீசியர்கள் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில், இக் குகைகளை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போர்த்துகீசியர்கள் பயன்படுத்தியதனால், பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.

இக் குகைகள் 9 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களின் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் இராஷ்டிரகூடர் மற்றும் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். இக்குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

READ MORE: Tamil Nadu High Court

எல்லோரா குகைகள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_11.1
எல்லோரா குகைகள்

எல்லோரா இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும். இது அவுரங்காபாத் நகரிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.

எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக் குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன. இக் குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும், 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டச் சின்னமாகும்.

ஃபத்தேப்பூர் சிக்ரி

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_12.1
ஃபத்தேப்பூர் சிக்ரி

ஃபத்தேப்பூர் சிக்ரி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம், முகலாயப் பேரரசர் அக்பரால் கிபி 1570 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1571 ஆம் ஆண்டு முதல், 1585 ஆம் ஆண்டு வரை பேரரசின் தலைநகரமாகச் செயற்பட்ட இது, பின்னர் கைவிடப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவரவில்லை. எஞ்சியிருக்கும் அரண்மனையும், மசூதியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதோடு, யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அழியாத சோழர் பெருங்கோயில்கள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_13.1
அழியாத சோழர் பெருங்கோயில்கள்

புகழ்மிகு சோழர் பெருங்கோயில்கள் என்பவை தென்னிந்தியாவில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களைக் குறிக்கும். அக்கோயில்களாவன: தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவற்றைக் குறிக்கும். இவை 1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.

ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_14.1
ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள்

ஹம்பி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்தில் உள்ளது. ஹம்பி, விசயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

மாமல்லபுர மரபுச்சின்னங்கள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_15.1
மாமல்லபுர மரபுச்சின்னங்கள்

மாமல்லபுர மரபுக்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கோரமண்டல் கரையில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை 1984 ல் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இவை மாமல்லன் என்றழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.

யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை.

  1. மாமல்லபுரம் இரதக் கோயில்கள்
  2. குகைக்கோயில்கள் அல்லது மண்டபங்கள்

(a) வராக குகைக்கோயில்

(b) கிருஷ்ண குகைக்கோயில்

(c) மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்

(d) மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்

3. அர்ச்சுனன் பாவசங்கீத்தனம் என்றழைக்கப்படும் மாமல்லபுர கங்கை மரபுவழி சின்னங்கள்.

4. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

பட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_16.1
பட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள்

பட்டடக்கல் என்பது, இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களுள் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது வட கர்நாடகத்தின் பாகல்கோட் மாவட்டத்திலுள்ள மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள கிபி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், இந்துக் கோயில் கட்டிடக்கலையின் வேசர பாணிக் கட்டிடங்களின் தொடக்ககால வடிவங்களாக அமைந்துள்ளன. 1987 ஆம் ஆண்டில் இந்நினைவுச் சின்னங்களின் தொகுதி, உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. இந் நகரத்தில் இந்தியக் கட்டிடக்கலைப் பாணிகளான நாகரப் பாணி, திராவிடப் பாணி என்பவற்றைச் சேர்ந்த கட்டிடங்களும் காணப்படுகின்றன.

பட்டடக்கல்லில் பல கன்னடக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை: ஒன்று விருபாட்சர் கோயில் வெற்றித் தூணில் கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எட்டாம் நூற்றாண்டு (733–745) இரண்டாம் விக்ரமாதித்தன் கல்வெட்டு. மற்றொன்று சங்கமேசுவரர் கோயிலில் உள்ளது. கிபி 1162 ஆம் ஆண்டில் கன்னடத்தில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டில் சங்கமேசுவரர் கோயிலைக் கட்டுவதற்கு சாளுக்கிய அரசன் விஜயாதித்தன் மானியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உமாயூனின் சமாதி

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_17.1
உமாயூனின் சமாதி

உமாயூனின் சமாதி இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில், உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர், மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும்.

இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட்களில் பேரரசரான ஷாஜகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும், பேரரசர் ஜஹந்தர் ஷா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களின் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது, முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_18.1
ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)

ஜந்தர் மந்தர், 1727 மற்றும் 1734 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இரண்டாம் ஜெய் சிங் என்னும் அரசரால், அவரது அப்போதைய தலை நகரான ஜெய்ப்பூர் நகரத்தில் கட்டமைக்கப்பட்ட வானவியற்கருவிகளின் தொகுப்பாகும். இது அப்போதைய முகலாய தலைநகரான தில்லியில் அவர் தமக்காக கட்டமைத்ததை ஒட்டி அமைக்கப்பட்டது. தில்லி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களையும் சேர்த்து, இதைப் போன்று மொத்தமாக ஐந்து இடங்களில் அவர் இத்தகைய கட்டமைப்புகளை நிறுவினார். இவை அனைத்திலும் ஜெய்ப்பூரில் உள்ள வான் ஆய்வுக்கூடமே மிகவும் பெரியதாகும்.

நேரத்தைக் கணக்கிடுவது, கிரகணங்களை முன்னறிவிப்பது, கதிரவனைச் சுற்றும் புவியின் பாதையில் விண்மீன்களின் இடத்தைத் தடமறிவது, கோள்களின் சாய்மானங்களை அறிவது மற்றும் கோள்களின் கோணவேற்றங்களை அறிவது மற்றும் அவை தொடர்பான இட அட்டவணைகள் போன்றவற்றிற்காக மாபெரும் வடிவவியற் கருவிகளை இந்த வான் ஆய்வுக்கூடம் கொண்டுள்ளது.

காசிரங்கா தேசியப் பூங்கா

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_19.1
காசிரங்கா தேசியப் பூங்கா

காசிரங்கா தேசியப் பூங்கா அல்லது காசிரங்கா வனவிலங்கு காப்பகம் இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கும் காசிரங்கா வனவிலங்கு சரணாலயம், இந்தியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகிலேயே இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கும் காசிரங்கா காடுகள், அஸ்ஸாமின் சுற்றுலாச் சிறப்புகளில் முன்னிலை வகிப்பவை. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில், மூன்றில் இரண்டு பங்கு இங்குள்ளன. இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.

கேவலாதேவ் தேசியப் பூங்கா

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_20.1
கேவலாதேவ் தேசியப் பூங்கா

கேவலாதேவ் தேசியப் பூங்கா (Keoladeo National Park, இது முன்பு பரத்பூர் பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில், பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். முன்பு பரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது, சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது. இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில், 350 க்கும் மேற்பட்ட பறவைகள் வசிப்பதாக அறியப்படுகிறது. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில், சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள், தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும். இது 1971 இல் பாதுகாக்கப்பட்ட உய்விடமாக அறிவிக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டில், இந்த பூங்கா யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_21.1
கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள்

கஜுராஹோ இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் தலைநகரம் போபாலிருந்து 326 கி.மீ தொலைவில் அமைந்த ஒரு சிறுநகரம் ஆகும். இது இந்தியாவின் தலைநகரான புதுதில்லியிலிருந்து ஏறத்தாழ 620 கி.மீ தென்கிழக்கில் சத்தர்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. மிகவும் புகழ்பெற்ற இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கஜுராஹோ, மிக அதிக அளவிலான மத்தியகால இந்து மற்றும் சமணக் கோவில்களைக் கொண்டிருக்கிறது. இவை அவற்றின் சிற்றின்பம் சார்ந்த சிற்பங்களுக்குப் பெயர்பெற்றது. கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இது இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கஜுராஹோ என்ற பெயர், பழங்காலத்தில் “கர்ஜுராவாஹகா”, இது சமசுக்கிருதச் சொல்லான கர்ஜூர் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது, அதற்குப் பேரீச்சம்பழம் என்று பொருள். சந்தேல இராஜபுத்திர மன்னர்கள் கஜுராஹோவில் பல இந்து கடவுள்களின் கோயில்களை கட்டினார்கள்.

Check Now: Tamil Nadu Lock down | தமிழ்நாட்டில் பொது முடக்கம்

மகாபோதி கோயில், புத்த கயா

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_22.1
மகாபோதி கோயில், புத்த கயா

மகாபோதி கோயில், புத்த கயா, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும். புத்த காயா, இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகே அதன் மேற்குப் புறத்தில், புனித போதி மரம் உள்ளது. பாளி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள புத்த சமயத்தவர்களுக்கான புனித யாத்திரைக்கான இடமாகவும் விளங்குகிறது. 2002 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் எனவும் அறிவிக்கப்பட்டது.

மானசு வனவிலங்கு காப்பகம்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_23.1
மானசு வனவிலங்கு காப்பகம்

மானசு தேசியப் பூங்கா அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம் அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானஸ் நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன. இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

இந்திய மலைப்பாதை தொடருந்துகள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_24.1
இந்திய மலைப்பாதை தொடருந்துகள்

இந்தியாவின் மலைப்பாதைத் தொடருந்துகள் என்பவை பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்ட ஐந்து தொடருந்துப் பாதைகளைக் குறிக்கும். இந்தியாவில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை இவை இயக்கப்படுகின்றன. 2005 முதல் இந்திய இரயில்வே இயக்கும் காஷ்மீர் ரயில்வேயும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மலைத் தொடருந்துகளில் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே [1881], கால்கா-ஷிம்லா இரயில்வே [1898], காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே [1924],மற்றும் காஷ்மீர் ரயில்வே [2005] ஆகிய நான்கும் வட இந்தியாவில் கரடுமுரடான இமயமலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மற்ற இரண்டும் தென்னிந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மலை இரயில் பாதை மற்றும் மகாராஷ்டிராவின் மாதெரன் மலை இரயில்பாதை ஆகியவையாகும். டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே, நீலகிரி மலை ரயில் மற்றும் கால்கா-ஷிம்லா இரயில்வே எனக்கூட்டாக “இந்தியாவின் மலைத் தொடருந்துகள்” என்ற பெயரில்யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவை உலக அளவில் அறிவிக்கப்பட்ட அகல மற்றும் குறுகிய இருபது தொடருந்துப் பாதைகளில் ஐந்தாகும்.

இந்த மலைப்பாதை தொடருந்துகள் இன்றும் நல்ல நிலையில் இயங்குவதுடன், அடிவாரத்தில் உள்ள முக்கிய இடங்களைத் தொடர்புப்படுத்துகின்றன. சிறந்த பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கின்றன.

நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_25.1
நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். சிறந்த இயற்கை அழகு நிறைந்த மலர்களை கொண்டுள்ள இந்த தேசியப் பூங்கா, மேற்கு இமயமலைப் பகுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த தேசியப் பூங்காவில் பல வகையான கருப்பு கரடிகள், பனி சிறுத்தைகள், பழுப்பு கரடிகள் மற்றும் நீல ஆடுகள் உட்பட பல அரிதான விலங்குகளை காணலாம்.

புகழ்பெற்ற நந்தா தேவி தேசிய பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவிற்கு அருகில் உள்ளது. இந்த தேசிய பூங்கா, நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Read More: National Parks in Tamilnadu | தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்கா

குதுப் மினார் வளாகம்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_26.1
குதுப் மினார் வளாகம்

குதுப் மினார் இந்தியாவின் தில்லியில், 72.5 மீட்டர்கள் (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். உலகிலேயே, செங்கல்லால் செய்த உயர்ந்த பள்ளி வாயில் தூபி இதுவே ஆகும். இந்தியாவின் முதல் இசுலாமிய அரசரான குதுப்த்தீன் ஐபக் ஆணையின் படி, இந்தத் தூபியின் கட்டிடப்பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது, 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பெற்றது. குதுப் மினார் என்பது இந்திய-இசுலாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு அதன் தொடக்க மற்றும் மிகவும் புகழ் பெற்ற எடுத்துக்காட்டுகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக குதுப் மினார் திகழ்கின்றது.

செங்கோட்டை வளாகம்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_27.1
செங்கோட்டை வளாகம்

டெல்லி கோட்டை, லால் குயிலாஹ் அல்லது லால் குயிலா எனறும் அழைக்கப்படுகிற இது இந்தியாவின் மதில் சுவர்களின் நகரமான பழைய தில்லியில் அமைந்துள்ளது, மேலும் இது 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது.

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கி, 1648 ஆம் ஆண்டு கட்டி முடித்தார். இந்த செங்கோட்டை உண்மையில், “குயிலா-ஐ-முபாரக்” (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரச குடும்பத்தினர் வசிப்பிடமாக இருந்தது. செங்கோட்டையின் தளவரைபடமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோட்டையானது, இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானாபாத்தின் முக்கிய மையமாக இருந்தது. பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் அமைப்பு மற்றும் அழகியல், முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துகின்றது.

பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_28.1
பீம்பேட்கா பாறை வாழிடங்கள்

பீம்பேட்கா பாறை வாழிடங்கள் என்பவை, இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தின் ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் மற்றும் உலகப் பாரம்பரியக் களமுமாகும்.

பீம்பேட்கா பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை அறிய இவ்வோவியங்கள் உதவுகின்றன.இந்த வாழிடங்களில் குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ எரக்டஸ் போன்ற உயர்நிலை குடியேற்றம் ஏற்பட்டதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பீம்பேட்கா பாறை முகாம்களில் ஏறத்தாழ 30,000 ஆண்டுகள் பழைமையான கற்கால(பாலியோலித்திக் காலம்) பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். மகாபாரத இதிகாசத்தில் வரும் வலிமை மிக்க வீரன், பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இப்பெயர் பெற்றுள்ளது என்பர்.

சுந்தர வனத் தேசியப் பூங்கா

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_29.1
சுந்தர வனத் தேசியப் பூங்கா

சுந்தரவனக் காடுகள் உலகத்தில் உவர்த்தன்மையுள்ள அலையாத்தி சதுப்புநில காடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுந்தரவனக் காடு என்பது வங்காள மொழியில் “அழகான அடர்ந்தகாடு” அல்லது “அழகான காடு” என்று பொருள்படும். சுந்தரவனக் காடுகளில் அதிக எண்ணிக்கையில் சந்தரி என்ற மரங்கள் காணப்படுவதால் இப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்த காடுகள் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் பரப்புக்கு இடைப்பட்ட பகுதியிலும், கங்கையின் அடியிலும் அமைந்துள்ளது, இது கழிமுகத்தின் கடல் நோக்கிய விளிம்பாக இருக்கும். இந்த காட்டின் சுற்றளவு 1௦,௦௦௦ கி.மீ ஆகும். 1997 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக மரபுரிமை எழுத்துப்பதிவில் இது இடம்பெற்றது, ஆனால் அந்த சமயத்தில் வங்காளதேசம் மற்றும் இந்திய பகுதியின் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை உண்டானது, அதை சுந்தரவனக் காடுகள் மற்றும் தேசிய சுந்தரவனப் பூங்கா என முறையே பிரித்து யுனெஸ்கோ உலக மரபுரிமை எழுத்துப்பதிவில் பட்டியலிடப்பட்டடுள்ளது.

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

கொனார்க் சூரியன் கோயில்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_30.1
கொனார்க் சூரியன் கோயில்

சூரியக் கோவில், கொனார்க் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் சிவப்பு மணற்பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டது. இது கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவ சூரியக் கோவில். இது கீழைக் கங்கர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது.

கொனார்க்கில் பிப்ரவரி மாதம் நடைபெறும் ‘மஹாசப்தமி விழா’ பிரசித்தம். சூரியபகவானை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். டிசம்பர் மாதத்தில் சூரியக்கோவில் முன் நடனத்திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.

ராணியின் குளம்

 

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_31.1
ராணியின் குளம்

இராணியின் படிக்கிணறு (the Queen’s Stepwell) (இராணி கி வாவ்) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு ஆகும். நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக 22 சூன் 2014 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று.

1050 இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது. கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது.

தாஜ் மகால்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_32.1
தாஜ் மகால்

தாஜ் மகால் இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக் கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது.

தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முந்தைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த டெல்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முந்தைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_33.1
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக் கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர் மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை, அரபிக் கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து, அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப் பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.

Read More: Finance Minister of Tamil Nadu | தமிழ்நாட்டின் நிதி அமைச்சர்

நாளந்தா பல்கலைக்கழகம்

List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்_34.1
நாளந்தா பல்கலைக்கழகம்

நாளந்தா பல்கலைக்கழகம்- நாளாந்தா என்பதற்கு அறிவை அளிப்பவர் என்று பொருள். இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது. பின்வந்த ஹர்ஷவர்தனரும் இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார். நாளந்தா நகரம் பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது மகாயான புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. 1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது.

இப் பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள்.

இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது. மகாயான பௌத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது. வட மொழியே இங்கு பயிற்று மொழியாக இருந்தது.

இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். யுவான் சுவாங் இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON nov 29 2021
TNPSC GROUP 4 LIVE CLASS BY ADDA247 TAMILNADU ON nov 29 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group