Tamil govt jobs   »   Tamil Nadu Lock down   »   Tamil Nadu Lock down

Tamil Nadu Lock down | தமிழ்நாட்டில் பொது முடக்கம்

Tamil Nadu Lock down: 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது வரை இரண்டு ஆண்டுகளில் சிறிய இடைவேளை விட்டு விட்டு பொது முடக்கம் அமலில் இருந்தது. இப்போது ஓமிக்ரான் வகை வைரஸ் பரவுதால் மீண்டும் தமிழ்நாட்டில் பொது முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.

Fill the Form and Get All The Latest Job Alerts

Tamil Nadu Lock down : Overview |தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் : கண்ணோட்டம் 

இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயின் முதல் வழக்கு 7 மார்ச் 2020 அன்று பதிவாகியது. 13 மே 2021 அன்று மிகப்பெரிய அளவில் பாதிப்பு (30,987 வழக்குகள்) பதிவாகியுள்ளது, மேலும் இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இப்போது நான்காவது அதிக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து 37 மாவட்டங்களும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன, தலைநகர் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

Tamil Nadu Lock down in 2020 |2020ல் தமிழ்நாட்டின் பொதுமுடக்கம்

தொடர்பு-தடமறிதல், சோதனை மற்றும் கண்காணிப்பு மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் பரவுதல்  குறித்து மாநில அரசு பதிலளித்துள்ளது. மாநிலத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அங்கீகரித்த 85 ஆய்வகங்கள் சோதனைகளை நடத்தும் திறன் கொண்டவை. மாநிலம் 25 முதல் பொது முடக்கம் அமலுக்கு வந்தது . மே 4 முதல் மார்ச் ஒரு அளவிற்கு தளர்த்தப்பட்டது. ஜூன் 1 முதல் குறிப்பிடத்தக்க தளர்வுகளுடன் பொது முடக்கம் மேலும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. சென்னை மற்றும் அதன் மூன்று அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30 வரை கடுமையான பொது முடக்கத்தை மாநிலம் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அதன் உச்சபட்ச எண்ணிக்கையை ஜூலை 31 அன்று 57,968 ஆக எட்டியது மற்றும் சரிவைக் காட்டத் தொடங்கியது. ஆகஸ்ட் 1 அன்று 2,51,738 வழக்குகளுடன் மாநிலத்தில் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைத் தாண்டியது. சென்னையில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் 2 ஆம் தேதி 1 லட்சத்தைத் தாண்டியது. ஆகஸ்ட் 3 அன்று, 109 இறப்புகளைப் பதிவுசெய்த பிறகு, தமிழ்நாட்டில் ஒரே நாளில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 100 ஐத் தாண்டியது.

பின்னர் செப்டம்பர் மாதம் முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினார்.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாடுகள்:

  1. இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அரசு தேர்வுகள், பள்ளிகள் நடைபெறவில்லை.
  2. முககவசம் கட்டாயமாக்கப்பட்டது, அணியாத நபர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.
  3. தனிமனித இடைவேளை குறித்தும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் மற்றும் நோய் பரவல் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
  4. தடுப்பூசிகள் முகாம்கள் அமைத்து மக்களுக்கு செலுத்தப்பட்டது.
  5. வீடுகளுக்கே நேரடியாக பழங்கள் மற்றும் காய்கறிகள் வண்டிகளில் வாரம் இரண்டுமுறை விற்பனைக்கு வந்தது.
  6. தேவையான அரசு அலுவலுக்கன்கள் மட்டுமே செயல்பட்டது.
  7. தேவையற்ற மக்கள் பயணத்தை தடைசெய்ய இ -பாஸ் முறை அமலுக்கு வந்தது. மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
  8. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் கல்வி முறை நடைமுறை படுத்தப்பட்டது.
  9. ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

Tamil Nadu Lock down in 2021 |2021ல் தமிழ்நாட்டின் பொதுமுடக்கம்

மீண்டும் கொரோனா தொற்று 2021 பெப்ரவரி யில் தொடங்கி மார்ச் 31 மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகமானது. இதனை தொடர்ந்து மாநில அரசு மீண்டும் பொது முடக்கம் குறித்து அறிவித்தது. இந்த முறை பிறழ்வு ஏற்பட்ட வைரஸ் காரணமாக உயிர் சேதங்கள் நாடு முழுவதிலும் அதிக அளவில் இருந்தன. நம் இந்திய மக்களை பல நாடுகள் கொரோனா அச்சம் காரணமாக தடைசெய்தது. இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்த அரசு அறிவுறுத்தியது. சென்ற ஆண்டுகளில் நடைமுறைகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அரசாங்கம் அறிவித்த கட்டுப்பாடுகள்:

  1. மேலே குறிப்புட்டுள்ள அறிவிப்புகள் தவிர கடைகளில் குளிர்சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது.
  2. உணவகங்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.
  3. மத வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் இறப்புக்கு முதலில் குடும்ப நபர்கள் மட்டும் பின்னர் 50 நபர்கள் வரை அனுமதிக்கப்பட்டனர்.
  4. இ-பாஸ் முறை அமலில் இருந்தது, தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
  5. பயணம் செய்த நபர்கள் 15 நாட்கள் தனிமை படுத்தப்பட்டனர்.
  6. ஒரு நபர் பாதிக்கப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டனர்.
  7. ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு தேர்வுகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.

ஜூலை மாதம் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பியது.

READ MORE: Tamil Nadu High Court

Tamil Nadu Lock down : Conclusion |தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் : முடிவுரை

இப்போது டிசம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து வந்த நபரிடமிருந்து ஓமிக்ரான் என்ற கொரோனா பிறழ்வு வைரஸ் இந்தியர்களுக்கு ஏற்பட்டது . தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகரிக்கிறது. அதன் காரணமாக மீண்டும் 15 நாட்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடும் கட்டுப்பாடுகள் இன்றி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Weekly Current Affairs One-Liners | 18th to 24th of October 2021 Weekly Current Affairs In Tamil 1st Week Of October 2021
November month current affairs Q&A pdf Weekly Current Affairs in Tamil 2nd Week of October 2021
Monthly Current Affairs PDF in Tamil October 2021 Tamilnadu Monthly Current Affairs PDF in Tamil October 2021 2021

Coupon code- WIN10-10% OFFER

 

TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247
TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group