Tamil govt jobs   »   Study Materials   »   List of Chief Ministers of Tamil...

List of Chief Ministers of Tamil Nadu | தமிழக முதலமைச்சர்கள்

List of Chief Ministers of Tamil Nadu: Get all information about the latest Tamil Nadu Chief Minister name list 2022, the current Chief Minister of Tamil Nadu, ex-cm of Tamilnadu, power of Chief Minister in tamil.

Fill the Form and Get All The Latest Job Alerts

List of Chief Ministers of Tamil Nadu : இந்தியக் குடியரசில் உள்ள மாநிலங்களின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களால், ஆளும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர், ஆளுநரால் முதலமைச்சர் பதவிக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார். மேலும் முதலமைச்சரால் பரிந்துரைக்கப்படுபவர்களை அமைச்சர்களாக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். முதலமைச்சரும், அவரின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவும், சட்டமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கூற கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.

Adda247 Tamil

Chief Minister An Overview

முதலமைச்சர் என்பவர், ஒரு மாநிலத்தின் ஆளுநர் சார்பாக நிர்வாகச் செயல் அலுவலராக பணியாற்றுகிறார். இந்திய அரசியலமைப்புக்கு இணங்க, மாநிலச் செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும், உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர். பாராளுமன்ற அரசாங்க முறை நிலவுவதால், இரண்டு வகையான தலைவர்களை நாம் காண்கின்றோம். இவ்வாறு, மாநில அளவில் முதலமைச்சரின் நிலை, மத்திய அரசின் பிரதம மந்திரியின் நிலையைப் போன்றது. முதலமைச்சருக்கு தேவையான ஆலோசனைகளை கூற, அமைச்சரவை உள்ளது. மேலும் சட்டமன்றத் தீர்மானங்களையும், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் நிறைவேற்ற, தலைமைச் செயலாளர் தலைமையில் இயங்கும் தலைமைச் செயலகத்தில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் உதவுகின்றனர். அரசியலமைப்பு சரத்து 163 இன் படி, 2 தன்விருப்ப அதிகாரங்களைத் தவிர, மற்ற அதிகாரங்களையும், பணிகளையும் ஆளுநர் செயல்படுத்துவதில், உதவியும் ஆலோசனையும் கூறுவதற்கு, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள ஒரு அமைச்சரவையை, ஒவ்வொரு மாநிலமும் பெற்றிருக்க வேண்டும்.

Emblem of Tamil Nadu

Qualifications to become a Chief Minister

  • இந்தியக் குடிமகனான இருக்க வேண்டும்.
  • 25 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
  • சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், முதலமைச்சராக பதவி ஏற்ற ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்திருக்கப் பட்டிருக்க வேண்டும்.

RRB NTPC CBT 2 தேர்வுப் பகுப்பாய்வு 14 ஜூன் 2022 ஷிப்ட் 1, பிரிவு வாரியான மதிப்பாய்வு & கேட்கப்பட்ட கேள்விகள்

Duties and Powers of a Chief Minister

மாநில நிருவாகத்தின் உண்மையான தலைவராக முதலமைச்சர் திகழ்கிறார். அவரின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உண்மையான நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துவது முதலமைச்சர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையாகும். ஆளுநரின் பெயரால் நிர்வாகத்தை முதலமைச்சர் மேற்கொள்கிறார். மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது.

  • அமைச்சரவையை அமைத்தல்.
  • அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது.
  • கடமை தவறும் போது, அமைச்சர்களைப் பதவி விலகக் கோருதல்.
  • ஆளுநர் அறிவிக்கையின் படி, துறைகளை அமைச்சர்களுக்கு மாற்றம் செய்தல்.
  • அமைச்சரவையின் தலைவராக இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது.
  • ஆளுநர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே தொடர்பாளராக செயல்படுதல்.
  • பதவிக் காலம் முடியும் முன்பே, சட்டப் பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது.

TN-School-Education-Fellow-Senior-Fellow-Notification PDF

Appointment and Term of a Chief Minister

மாநில முதலமைச்சர், ஆளுநரால் நியமிக்கபப்டுகிறார். சட்டப் பேரவையில் எந்தக் கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளதோ, அந்தக் கட்சியின் தலைவர் அல்லது அணியின் தலைவரை ஆளுநர், முதலமைச்சராக நியமிக்கிறார். எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை எனில், சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். ஆனால், ஆளுநர் குறிப்பிடும் கால அவகாசத்திற்குள், சட்டப் பேரவையில் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

முதலமைச்சரின் பதவிக் காலம் நிர்ணயிக்கப்பட்ட தனது சட்டப் பேரவையில், பெரும்பான்மையினர் தனக்கு ஆதரவு கொடுக்கும் வரையில் ஒருவர் பதவியில் இருக்கலாம். முதலமைச்சரின் பதவி விலகல் ஒட்டுமொத்த அமைச்சரவையின் விலகலாகும். பொதுவாக முதலமைச்சருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிக் காலம் 5 ஆண்டுகளாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, சட்டமன்றத்தின் ஆயுட்காலமான ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் முதலைமச்சரின் பதவிக் காலம் தானாகவே முடிவடைகிறது.

Read More Government of Tamil Nadu

Chief Minister of Tamil Nadu

  • தமிழக முதல்வர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியாவின் தமிழ்நாடு மாநில அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.
  • இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் ஒவ்வொரு பொது சட்டமன்ற தேர்தலுக்கு பின்போ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை கைமாறும்போதோ பதவியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட சட்டமன்ற உறுப்பினர், அல்லது சட்டமன்ற உறுப்பினராகும் தகுதி கொண்ட ஒருவர், தமிழத்தின் ஆளுநரால் தமிழகத்தின் முதல்வராக நியமிக்கப்படுவார்.
  • முதல்வரானவர் சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழக்கும் போது அல்லது அவரின் சட்டமன்றம் கலைக்கப்படும் போது பதவி இழப்பார். ஆண்டு நிதி அறிக்கையை கால எல்லைக்குள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றா விட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். சட்டமன்ற உறுப்பினராய் இல்லாதவர் முதல்வர் ஆனால், அவர் அடுத்த 6 மாதத்திற்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இல்லை எனில், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
    முதல்வர் இரண்டு ஆண்டுகளுக்கு மிகும் சிறை தண்டனை பெற்றால், பதவி விலக வேண்டும். தமிழக சட்டமன்ற தொகுதியான 234 தொகுதியில், 117க்கு குறையாத சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இல்லை எனில் அந்த கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் முதலமைச்சர் ஆக இருக்கமுடியும். மேலும் 117 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைவாக இருந்தால், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அக்கட்சிக்கு மற்றகட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் போனாலும், ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தலை சந்திக்க நேரிடும்.
  • தமிழக ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசின் பரிந்துரையின் பேரில், தமிழ்நாட்டில் வன்முறை செயல்கள், சட்டமன்றத்தில் சட்டமன்ற அமைச்சர்களிடையே ஏற்படும் அத்து மீறல்கள்களை மீறிய அசம்பாவித சம்பவங்கள், ஆளும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் நாட்டின் பிரதமர், முதலமைச்சர் பதவியில் உள்ளவர்களின் உடல்நல குறைவால் நீண்ட நாள் சிகிச்சையோ அல்லது துன்பியல் படுகொலையோ, இயற்கை மரணமோ ஏற்பட்டாலும், இந்திய அரசியலமைப்பு பிரிவு 356 ஐ பயன்படுத்தி, தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், நேரடியாக இந்திய ஜனாதிபதிக்கு (குடியரசு தலைவர்) தமிழக முதல்வரையும், அவரின் மந்திரிசபையையும் சேர்த்து பதவி நீக்கம் செய்து, ஆட்சியை கலைப்பதற்கு அதிகாரம் உண்டு. இந்த சட்டம், 1994க்கு பின், ஜனாதிபதியின் இந்த அதிகாரம் பயன்படுத்தபடுவது மிகவும் முக்கியமான கட்டமைப்புக்குள் வந்துள்ளது.
  • இவரே தமிழக அரசின் முழு தலைவர். இவரின் பரிந்துரைப்படியே ஆளுநர், மாநில அமைச்சரவையை நிர்மாணிப்பார். தமிழக அமைச்சரவை மாற்றங்களை முதல்வரின் பரிந்துரைப்படியே ஆளுநர் செய்ய முடியும். இவரே தமிழகத்தின் முதன்மை செயலாட்சியர் ஆவார்.
  • இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படமாட்டாது. தமிழகத்தில், 1967க்கு பின், முதல்வர் தான் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பார். மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசாணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்து நிர்வாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
  • இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது.
  • இவருக்கு துணை புரிய ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில், பல அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.

The Current Chief Minister of Tamil Nadu

The Current Chief Minister of Tamil Nadu
The Current Chief Minister of Tamil Nadu

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953) (மு.க. ஸ்டாலின்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மைந்தன் ஆவார்.

இவர் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஆகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.

ஸ்டாலின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார், 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார். ஆகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.

2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து மே 7-ஆம் நாளன்று மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

Click here for TRB Revised Result

List of Chief Ministers of Tamil Nadu

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல், அதன் முழுமையான நிலையில், தமிழ்நாட்டின் 1920 முதலான வரலாற்றில் இருந்த அரசுகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் பட்டியலாகும்.

BOB ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பு PDF

Madras Province

இந்திய அரசு சட்டம், 1919 இயற்றப்பட்டபின், தமிழகத்தில் 1920-ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப் பேரவை அமைக்கப்பட்டது. சட்டப் பேரவையின் ஆட்சிக் காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 132 உறுப்பினர்களில், 34 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

இந்திய அரசு சட்டம், 1935 இன் படி 215 உறுப்பினர்கள் அடங்கிய சட்டப் பேரவையும், 56 உறுப்பினர்களை கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. ஜுலை 1937 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தின் கீழ், முதல் சட்டப் பேரவை பதவியேற்றது.

. எண் பெயர்
(பிறப்புஇறப்பு)
அரசியல் கட்சி தொடக்க தேதி முடிவு தேதி
1 . சுப்பராயலு
(1855–1921)
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 17.12.1920 11.07.1921
2 பனகல் ராஜா
(1866–1928)
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 11.07.1921 11.09.1923
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 19.11.1923 03.12.1926
3 பி. சுப்பராயன்
(1889–1962)
சுயேட்சை 4.12.1926 27.10.1930
4 பி. முனுசுவாமி நாயுடு
(1885–1935)
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 27.10.1930 04.11.1932
5 ராமகிருஷ்ண ரங்காராவ்
(1901–1978)
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 5.11.1932 4.04.1936
6 பி. டி. இராஜன்
(1892–1974)
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 4.04.1936 24.08.1936
(5) ராமகிருஷ்ண ரங்காராவ்
(1901–1978)
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 24.08.1936 01.04.1937
7 கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு
(1875–1942)
சுயேட்சை 1.04.1937 14.07.1937
8 சி. இராஜகோபாலாச்சாரி
(1878–1972)
இந்திய தேசிய காங்கிரசு 14.07.1937 29.10.1939
ஆளுநர் ஆட்சி 29 அக்டோபர் 1939 30.04.1946 30.04.1946
9 . பிரகாசம்
(1872–1957)
இந்திய தேசிய காங்கிரசு 30.04.1946 23.03.1947
10 ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
(1895–1970)
இந்திய தேசிய காங்கிரசு 23.03.1947 6.04.1949
11 பூ. . குமாரசுவாமி ராஜா
(1898–1957)
இந்திய தேசிய காங்கிரசு 6.04.1949 10.04.1952

The Madras State

மெட்ராஸ் மாநிலம், தற்போதைய தமிழ்நாடு மாநிலத்திற்கு முந்தையது. இது இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய தமிழ் நாடு மற்றும் தற்போதைய ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் பகுதிகளும் இம்மாநிலத்தின் பகுதிகளாக இருந்தன. பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில், தேர்தல்கள் முதன் முறையாக 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, இங்கு மார்ச்சு 1, 1952-ல் சட்டப் பேரவை அமைக்கப்பட்டது.

. எண் பெயர்
(பிறப்புஇறப்பு)
அரசியல் கட்சி தொடக்க தேதி முடிவு தேதி
1 சி. இராஜகோபாலாச்சாரி
(1878–1972)
இந்திய தேசிய காங்கிரசு 10.04.1952 13.04.1954
2 காமராசர்
(1903–1975)
இந்திய தேசிய காங்கிரசு 13.04.1954 31.03.1957
  காமராசர்
(1903–1975)
இந்திய தேசிய காங்கிரசு 13.04.1957 01.03.1962
  காமராசர்
(1903–1975)
இந்திய தேசிய காங்கிரசு 15.03.1962 02.10.1963
3 எம். பக்தவத்சலம்
(1897–1987)
இந்திய தேசிய காங்கிரசு 02.10.1963 28.02.1967
4 சி. என். அண்ணாத்துரை
(1909–1969)
திராவிட முன்னேற்றக் கழகம் 06.03.1967 13.01.1969

Tamil Nadu

சென்னை மாகாணம் – 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழக சட்டபேரவை 14 மே 1986-ல் சட்ட மேலவையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் பாராளுமன்றத்தில் “தமிழக சட்ட மேலவை (நீக்க) சட்டம், 1986” எனும் பெயரிலான சட்ட மசோதா 1 நவம்பர் 1986 முதல் அமல்படுத்தப்படுமாறு தமிழக சட்ட மேலவை நீக்கப்பட்டது. தற்பொழுது தமிழக சட்ட அமைப்பு ஓரங்க அமைப்பாக (unicameral) 234 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையும், ஒரு நியமன உறுப்பினரையும் கொண்ட சட்டபேரவையாக உள்ளது.

. எண் பெயர்
(பிறப்புஇறப்பு)
அரசியல் கட்சி தொடக்க தேதி முடிவு தேதி
1 சி. என். அண்ணாத்துரை
(1909–1969)
திராவிட முன்னேற்றக் கழகம் 14.01.1969 03.02.1969
2 இரா. நெடுஞ்செழியன்
(1920–2000)
திராவிட முன்னேற்றக் கழகம் 04.02.1969 09.02.1969
3 மு. கருணாநிதி
(1924–2018)
திராவிட முன்னேற்றக் கழகம் 10.02.1969 05.01.1971
குடியரசுத் தலைவர் ஆட்சி 06.01.1971 14.03.1971
4 மு. கருணாநிதி
(1924–2018)
திராவிட முன்னேற்றக் கழகம் 15.03.1971 31.01.1976
5 குடியரசுத் தலைவர் ஆட்சி 01.02.1976 29.06.1977
6 எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 30.06.1977 17.02.1980
7 குடியரசுத் தலைவர் ஆட்சி 18.02.1980 08.06.1980
8 எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 09.06.1980 15.11.1984
9 இரா. நெடுஞ்செழியன்
(1920–2000)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16.11.1984 09.02.1985
9 எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10.02.1985 24.12.1987
10 இரா. நெடுஞ்செழியன்
(1920–2000)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 25.12.1987 06.01.1988
11 ஜானகி இராமச்சந்திரன்
(1923–1996)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 07.01.1988 30.01.1988
குடியரசுத் தலைவர் ஆட்சி 31.01.1988 26.01.1989
12 மு. கருணாநிதி
(1924–2018)
திராவிட முன்னேற்றக் கழகம் 27.01.1989 30.01.1991
குடியரசுத் தலைவர் ஆட்சி 31.01.1991 23.06.1991
13 ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 24.06.1991 12.05.1996
14 மு. கருணாநிதி
(1924–2018)
திராவிட முன்னேற்றக் கழகம் 13.05.1996 13.05.2001
15 ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 14.05.2001 21.09.2001
16 ஓ. பன்னீர்செல்வம்
(1951–)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 21.09.2001 01.03.2002
17 ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 02.03.2002 12.05.2006
18 மு. கருணாநிதி
(1924–2018)
திராவிட முன்னேற்றக் கழகம் 13.05.2006 15.05.2011
19 ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16.05.2011 27.09.2014
20 ஓ. பன்னீர்செல்வம்
(1951–)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 29.09.2014 22.05.2015
21 ஜெ. ஜெயலலிதா
(1948–2016)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 23.05.2015 05.12.2016
22 ஓ. பன்னீர்செல்வம்
(1951–)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 06.12.2016 15.02.2017
23 எடப்பாடி கே. பழனிச்சாமி
(1954–)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 16.02.2017 06.05.2021
24 மு. க. ஸ்டாலின்
(1953–)
திராவிட முன்னேற்றக் கழகம் 07.05.2021 தற்போது

Salary and Pension of Chief Ministers

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சரத்து 164 இன் படி, முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை, அந்தந்த மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுகிறது.

List of Chief Ministers of Tamil Nadu Conclusion

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Use Code: WIN15 (Flat 15% off + Double Validity on all)

List of Chief Ministers of Tamil Nadu | தமிழக முதலமைச்சர்கள்_5.1

 

***************************************************************************

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil