Tamil govt jobs   »   Study Materials   »   List of Hydro Power Projects in...

List of Hydro Power Projects in India | இந்திய நீர் மின் திட்டங்கள்

List of Hydro Power Projects in India: If you are a candidate preparing for TNPSC Exams and looking for TNPSC Study Materials, you will get all the information regarding the topic Hydroelectric Power, List of Hydro Power Projects in India, India’s renewable energy target,  Hydroelectric Power, not an alternative to Green energy, etc. on this page.

List of Hydro Power Projects in India: நீர் மின் ஆற்றல் என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களில் ஒன்றாகும். மின்சாரத்தை உருவாக்க, பூமியின் நீர் சுழற்சியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாகும். நமது நாடு அபரிமிதமான நீர்மின் ஆற்றலைக் கொண்டுள்ளது. நீர்மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 197 நீர் மின் நிலையங்கள் உள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தியாவில் மின்சாரம் வளர்ச்சியை கண்டது. 1897 இல், டார்ஜிலிங்கில் சித்ராபோங் நீர்மின் நிலையம் என்று ஒரு நீர்மின் நிலையம் தொடங்கப்பட்டது. 1902 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் சிவனசமுத்திரத்தில் ஒரு நீர் மின் நிலையம் தொடங்கப்பட்டது. List of Hydro Power Projects in India தொடர்பான அனைத்து விவரங்களும், இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

Fill the Form and Get All The Latest Job Alerts

Hydroelectric Power

நீரின் இயக்க ஆற்றலைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமே நீர் மின் ஆற்றல் எனப்படும். அதாவது, புவியீர்ப்பு விசையால் இயற்கையாக பாயும் நீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலைக் குறிக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் முறைகளில், நீர்மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. நீர்மின் உற்பத்தி மற்ற புதைபடிவ எரிபொருள் மின் உற்பத்தி போல் அல்லாது, எவ்வித தீய திட கழிவுகளையோ, கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பைங்குடில் வளிமங்களையோ வெளியிடாமல் இருப்பதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் முறைகளில், நீர்மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. உலக அளவில், 2005 ஆம் ஆண்டில் நீர்மின்சாரம் மூலம், சுமார் 816 GW (கிகா வாட் மின்திறன்) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது உலக மின் உற்பத்தியில் சுமார் 20% என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், நீர்மின் ஆற்றலின் பங்கு 88% என்றும் மதிப்பிடப்படுகிறது.

Read More: Jallikattu in Tamilnadu | தமிழகத்தில் ஜல்லிக்கட்டு

List of Hydro Power Projects in India

இந்திய நாட்டில் மின்சக்தி ஆனது, நீர் மின்சக்தியிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அனல் மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியவற்றின் மூலம் பெருமளவில் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

டாடா நீர் மின் திட்டம்

இவை மும்பை பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. லொனவாலா, நிலமுலா, ஆந்திரப்பள்ளத்தாக்கு ஆகிய மூன்று இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து மும்பை, தானா, கல்யாண், பூனா ஆகிய இடங்கள் நீர்மின்சக்தி பெறுகின்றன.

பைகாரா நீர் மின் திட்டம்

தமிழ் நாட்டின் பைகாரா நீர் மின் திட்டம் நீலகிரியில் உள்ள பைகாரா ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டத்தினால் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின்சக்தி பெறுகின்றன.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

மேட்டூர் நீர் மின் திட்டம்

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் நீர் மின் திட்டம் ஒரு பெரிய திட்டமாகும். இது நீர் பாசனம், நீர் மின் உற்பத்தி ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட முதல் திட்டமாகும். இத்திட்டத்திலிருந்து சேலம், திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின்சக்தி பெறுகின்றன. ஈரோட்டில் பைகாரா நீர்மின்சக்தியும் மேட்டூர் நீர்மின்சக்தியும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

பாபநாசம் நீர் மின் திட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள பாபநாசம் நீர் மின் திட்டம் 1944-ல் முடிவடைந்தது. இத்திட்டத்தினால் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மின்சக்தி பெறுகின்றன. இவை தவிர தமிழ் நாட்டில் பெரியாறு நீர் மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம், மோயார் நீர்மின்திட்டம் ஆகிய நீர் மின் திட்டங்கள் உள்ளன.

சிவனசமுத்திர நீர் மின் திட்டம்

கர்நாடக மாநிலத்தில் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இது ஆசியாவிலேயே முதன் முதலில் அமைக்கப்பட்ட நீர் மின் நிலையம் ஆகும். இதிலிருந்து மைசூர், பெங்களூரு ஆகிய இடங்கள் மின் சக்தியைப் பெறுகின்றன.

Read More: List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்

ஷராவதி நீர் மின் திட்டம்

இது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது. இத்திட்டம் ஷாராவதி ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டம் முதலில் ஜோக் மின்சக்தி திட்டம் என்றும் பின்னர் மகாத்மா காந்தி நீர் மின் சக்தி திட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சியான ஜோக் நீர் வீழ்ச்சி இந்த ஆற்றில் தான் அமைந்துள்ளது.

பள்ளிவாசல் நீர் மின் திட்டம்

இது கேரளாவில் அமைக்கப்பட்ட முதல் நீர் மின் திட்டமாகும். 1940-ல் இத்திட்டம் முடிக்கப்பட்டது. இதைத் தவிர கேரளாவில் செங்குளம், பெரிங்குல் குது, சபரிகிரி, இடிக்கி, குட்டியாடி நீர் மின் திட்டங்கள் உள்ளன.

மண்டி நீர் மின் திட்டம்

இமாச்சலப்பிரதேசத்தில் சிம்லாவுக்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டத்திலிருந்து பஞ்சாப், டெல்லி, கிழக்கு உத்திரப்பிரதேசத்தின் சில பகுதிகள் இம்மின்சக்தியைப் பெறுகின்றன.

இவை தவிர இந்தியாவில் பக்ரா, கங்குவால், கோட்லா, காந்தி சாகர், இராணா பிரதாப் சாகர், ஜவகர் சாகர், ரீஹண்டு, ஓப்ரா உகை, கொய்னா, மச்கண்ட், மேல் சிலீனா, ஹிராகுட், பாலிமேலா, சிப்ளிமா, பெய்ராசியுல், சலால், பியாஸ், மானேரி-பாலி இராம கங்கா, ஸ்ரீ சைலம், கீழ் சிலீரு, காளி நதி,லோக்டாக் போன்ற பல நீர் மின் திட்டங்கள் உள்ளன.

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

India’s renewable energy target of 450 GW by 2030

இந்தியாவிலுள்ள மொத்த அணைக்கட்டுகளின் எண்ணிக்கை 4,407 ஆகும். சீனா (23,841), அமெரிக்கா (9,263) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இந்தியா அணைக்கட்டுகள் அதிகமுள்ள மூன்றாவது நாடாகும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் நீர்மின் திறன் 146 ஜிகாவாட் ஆகும். இதில் 78% அல்லது 112 கிகாவாட் இமயமலை மாநிலங்களில் அமைந்துள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் 450 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட மின் நிலையங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கில் நீர்மின் நிலையங்கள் 31%, சூரிய சக்தி மற்றும் காற்றாலை 69% உட்பட இதுவரை 146 ஜிகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.

Adda247 Tamil

Hydroelectric Power, not an alternative to Green energy

பல்வேறு ஆய்வுகளின் படி அணைக்கட்டுகளின் கீழுள்ள அழுகும் தாவரங்கள் மீத்தேன் வாயுவை உமிழ்கின்றன. மேலும், நீர்த்தேக்கங்களில் பாயும் ஆறுகள் கணிசமான அளவு கரிமப் பொருட்களையும், வண்டலில் இருந்து வழங்குகின்றன. ஆனால் விவசாய நடவடிக்கைகளில் இருந்து, நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள், உரங்கள் மற்றும் மனித கழிவுகள், ஆல்கா வளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் நுண்ணுயிரிகளை உடைத்து, மீத்தேனாக மாற்றுவதற்கு அதிக பொருட்களை வழங்குகிறது. இயற்கையான ஏரிகளின் நீர்மட்டத்தை விடவும் அணைக்கட்டுகளின் நீர் மட்டம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். நீர் மட்டம் குறையும்போது அடியிலிருக்கும் மீத்தேன் வாயு வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும்.

புவி வெப்பமயமாதலின் முதல் காரணம் கரியமில வாயு. இரண்டாவது மீத்தேன் வெளியேற்றம். ஆனால், கரியமில வாயுவைவிடவும் மீத்தேன் வெப்ப விளைவு 28 – 34 மடங்கு அதிகம். அணைக்கட்டுகளிலிருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றம் முன்பு கணித்ததைவிடவும் 29% அதிகமாகும்.

Read More: List of Indian Space Centres & Indian Space Agencies

*****************************************************

Coupon code- WIN15-15% OFFER

List of Hydro Power Projects in India | இந்திய நீர் மின் திட்டங்கள்_4.1
TNPSC GROUP-4 and VAO Complete Preparation Batch | Tamil Live Classes

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group