Tamil govt jobs   »   Study Materials   »   List of Indian Space Centres

List of Indian Space Centres and Indian Space Agencies

Indian Space Centers

List of Indian Space Centers & Indian Space Agencies: The Space Research Centers in India, was built with the aim to achieve various space missions that are launched by India many times. The primary body of this field is The Department of Space. It is responsible for monitoring and regulating the Indian Space programs. A list of Indian Space Centers is one of the important GK topics for the Competitive exam. You will get all the information regarding the topics List of Indian Space Centers & Indian Space Agencies details on this page.

List of Indian Space Centers & Indian Space Agencies

List of Indian Space Centres & Indian Space Agencies : விண்வெளி ஆராய்ச்சி என்பது விண்வெளியில் மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆய்வு. விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இருந்து பிரபஞ்சம் வரை, விண்வெளி ஆராய்ச்சி என்பது ஒரு பரந்த ஆராய்ச்சித் துறையாகும். புவி அறிவியல், பொருளறிவியல், உயிரியல், மருத்துவம் மற்றும் இயற்பியல் அனைத்தும் விண்வெளி ஆராய்ச்சி சூழலுக்கு பொருந்தும். இந்த அறிவியல் ஆய்வுக்காக உருவாக்கப்படும் அமைப்புகள் விண்வெளி ஆராய்ச்சி மைய்யங்கள் எனப்படுகின்றன.  List of Indian Space Centres & Indian Space Agencies பற்றிய தகவல்களை, நாங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Indian Space Centers & Indian Space Agencies History

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி மையம் ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும், அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். 1961 ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அணுசக்தித் துறைக்கு (DAE) விண்வெளி ஆராய்ச்சிப் பொறுப்பைக் கொடுத்தார். 1962 ஆம் ஆண்டு விண்வெளித் திட்டங்களை ஏற்பாடு செய்வதற்காக விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு அமைக்கப்பட்டது. இது இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் கீழ், ஆலோசனை அமைப்பாக மாறியது, பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO ஆனது.

Department of Space

விண்வெளித் துறை, இந்திய விண்வெளித் திட்டத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான ஒரு இந்திய அரசாங்கத் துறையாகும். இது விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய பல நிறுவனங்களை நிர்வகிக்கிறது.

இந்திய விண்வெளி திட்டமானது நாட்டினுடைய சமூக-பொருளாதார நன்மைக்காக விண்வெளி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை செய்வதற்கும், பயன்பாட்டிற்கும் உந்துதலாக நோக்கம் கொண்டதாகும். இது இரண்டு பிரதான செயற்கைக்கோள் அமைப்புகளை கொண்டது. ஒன்று இன்சாட் இது தகவல் தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானிலை சேவைகள் ஆகியவற்றிற்கும் இந்திய தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள்கள் ஐ.ஆர்.எஸ் வளங்கள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஐ.ஆர்.எஸ் மற்றும் இன்சாட் வகுப்பு செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைக்க இரண்டு வாகனங்களை, பி. எஸ். எல். வி மற்றும் ஜி. எஸ். எல். வி ஆகியவற்றை இது உருவாக்கியுள்ளது.

List of Satellites launched by India

Indian Space Research Centers

இந்தியாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், இந்தியாவால் பலமுறை ஏவப்படும் பல்வேறு விண்வெளி பயணங்களை அடையும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. விண்வெளி துறையே இந்த துறையின் முதன்மை அமைப்பு ஆகும். இந்திய விண்வெளித் திட்டங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இத்தகைய விண்வெளி மைய்யங்களுடையதே ஆகும். பல்வேறு விண்வெளி நிறுவனங்கள், விண்வெளி மையங்களின் கீழ் செயல்படுகின்றன.

இந்தியாவில் உள்ள விண்வெளி மையங்கள் பின்வருமாறு:

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
  • தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (NARL)
  • இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL)
  • பாதுகாப்பு துறை விண்வெளி நிறுவனம் (DSA)
  • இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம் (IIST)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organization, ISRO, இஸ்ரோ) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி மையம் ஆகும். பெங்களூரில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். இது ஏறத்தாழ 41 பில்லியன் செலவில் செயலாற்றப்படுகிறது. இந்திய அரசின் விண்வெளித் துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவிற்கு கே. சிவன் தலைவராக உள்ளார்.

இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும், அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (NARL)

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம் (National Atmospheric Research Laboratory NARL) என்பது இந்திய விண்வெளித் துறையிலிருந்து நிதி ஆதாரம் பெற்று தனித்தியங்கக் கூடிய ஆராய்ச்சி நிறுவனமாகும்.தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம்’ வளிமண்டல அறிவியல் துறையிலுள்ள அடிப்படை மற்றும் இயற்பியல் பயன்முறை ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் 1992ல் ”தேசிய இடைவெளிமண்டல-வெம்மடுக்குமண்டல-அடிவளிமண்டல (National Mesosphere-Stratosphere-Troposphere (MST) Radar Facility (NMRF)) தொலைக் கண்டுணர்வசதி” எனத் தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டு காலங்களில் மேலும் பிற வசதிகளான லிடார் மின் காந்த கதிர்வீசல் அல்லது வெளிச்ச அலகு, காற்று விவர வரைவு (wind profiler), ஒளிச்சுழல் மழைமானி (Optical rain gauge), மழைத்துளி அளவறிவி, தானியங்கு வானிலை நிலையம், மேலும் இதுபோன்ற பல வசதிகளும் இணைக்கப்பட்டன. பின்னர் ”தேசிய இடைவெளிமண்டல-வெம்மடுக்குமண்டல-அடிவளிமண்டலத் தொலைக் கண்டுணர்வசதி” ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக விரிவுபடுத்தப்பட்டு 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள் ”தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகமாக” மறுபெயரிடப்பட்டது.

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (PRL)

இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (Physical Research Laboratory) இந்தியாவில் உள்ள வானம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியலில் ஆராய்ச்சி செய்யும் ஒர் ஆய்வகம். இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் 1947ல் விக்கிரம் சாராபாய் அவர்களால் தொடங்கப்பட்டது. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வானியல், வானியற்பியல், கோள் அறிவியல், புவி அறிவியல், கோட்பாட்டுவாத இயற்பியல் முதலிய துறைகளில் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பாதுகாப்பு துறை விண்வெளி நிறுவனம்

பாதுகாப்பு துறை விண்வெளி நிறுவனம் (DSA) என்பது, இந்திய ஆயுதப் படைகளின் முப்படை நிறுவனமாகும். இது கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம், இந்தியாவின் விண்வெளி-போர் மற்றும் செயற்கைக்கோள் நுண்ணறிவு சொத்துக்களை இயக்கும் பணியில் உள்ளது. DSA ஆனது ஆயுதப் படைகளின் மூன்று கிளைகளிலிருந்தும் பணியாளர்களை எடுக்கிறது. எதிர்காலத்தில் இந்த நிறுவனம், முழு அளவிலான முப்படை இராணுவ கட்டளையாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி தொழில்நுட்ப கழகம்

இந்திய விண்வெளித் தொழில்நுட்ப கல்லூரி (Indian Institute of Space Science and Technology) இந்திய விண்வெளித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகும். இது உலகில் முதன்முறையாக விண்வெளித்துறை சார்ந்த கல்விக்கென்று உருவாக்கப்பட்டுள்ள கல்லூரியாகும். இந்த கல்லூரி தொடங்க 26 ஏப்ரல், 2007 ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முன்னாள் விண்வெளித் துறை தலைவர் மாதவன் நாயர் இதனை 14 செப்டம்பர், 2007 அன்று தொடங்கி வைத்தார். தொடங்கி ஓராண்டுக்குள் இது நிகர் நிலைக்கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய விண்வெளித்துறையில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.

INS Vikrant in Tamil, Details, Features, Cost, Launch Date | INS விக்ராந்த் தமிழில்

Indian Space Research Agencies Map

Indian Space Research Agencies
Indian Space Research Agencies

Indian Space Research Agencies – List

 

அமைவிடம் விண்வெளி மைய்யங்கள் மற்றும் நிறுவனங்கள்
New Delhi
DOS branch secretariat
ISRO branch office
Delhi earth station
Dehradun
Indian Institute of Remote Sensing
Centre for Space Science and Technology Education in Asia-Pacific (CSSTEAP)
Byalalu
Indian Deep Space Network (IDSN)
Indian Space Science Data Centre (ISSDC)
Lucknow ISTRAC Ground Station
Kolkata Eastern RRCC
Aluva Ammonium Perchlorate Experimental Plant
Bhopal Master Control Facility-B (MCF)
Chandigarh Semi-Conductor Laboratory (SCL)
Shillong North Eastern Space Application Centre
Hyderabad NRSA or NRSC – National Remote Sensing Agency /Centre
Tirupati NMRF-National Atmospheric Research Laboratory
Sriharikota Satish Dhawan Space Centre (SDSC), SHAR
Port Blair Down Range Station
Mahendra Giri ISRO Propulsion Complex
Thiruvananthapuram
Vikram Sarabhai Space Centre
Liquid Propulsion Systems Centre
ISRO Inertial Systems Unit
Indian Institute of Space Science and Technology (IIST)
Hassan Master Control Facility
Bangalore Space Commission
Department of Space and ISRO Headquarters
Civil Engineering Programme Office
U R Rao Satellite Centre (URSC)
Laboratory for Electro-Optical Systems (LEOS)
Southern RRSC
Human Space Flight Centre (HSFC)
INSAT Program Office
NNRMS Secretariat- National Natural Resources Management System
Antrix Corporation
ISTRAC-ISRO Telemetry Tracking and Command Network
New Space India Limited (NSIL)
Liquid Propulsion Systems Centre
Mumbai ISRO Liaison office
Nagpur Central RRSC-Regional Remote Sensing Centre
Mount Abu Infrared Observatory
Ahmedabad
Space Application Centre (SAC)
Physical Research Laboratory (PRL)
Development & Educational Communication Unit (DECU)
Jodhpur Western RRSC – Regional Remote Sensing Centre
Udaipur Solar Observatory

***************************************************************************

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil