Tamil govt jobs   »   Study Materials   »   The Four-Day Work Week Model of...

The Four-Day Work Week Model of the Central Government | மத்திய அரசின் நான்கு நாள் வேலை திட்டம்

Four-Day Work Week Model : You can get information on the Four-Day Work Week Model that has gained importance amid the pandemic, the concept of Four-Day Work Week Model, Four-Day Work Week Model in India, the pros and cons of the Four-Day Work Week Model, etc. on this page.

Four-Day Work Week Model : இந்தியா விரைவில், வாரத்தில் 4 நாள் வேலை எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம், அதாவது தற்போதைய வாரத்திற்கு 5 நாள் வேலைக்கு பதிலாக, ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில், நான்கு நாட்கள் வேலை நாட்களாகவும், மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாகவும் இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் என்பதை தவிர, ஊழியரின் ஊதியம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் உட்பட, பல வேலைவாய்ப்பு மற்றும் பணி கலாச்சார அம்சங்களில் மாற்றங்கள் இருக்கலாம். Four-Day Work Week Model பற்றிய தகவல்களை, நாங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Four-Day Work Week Model Background

கொரோனா தொற்று இயல்பு வாழ்க்கையை தலைகீழாய் மாற்றி, வேலையில்லா திண்டாட்டத்தை உயர்த்தி வரும் நேரத்தில், உலகெங்கிலும் உள்ள முதலாளிகள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, செலவை குறைத்து உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு பணியிட மாதிரிகளை முயன்று வருகின்றனர்.

வீட்டில் இருந்து வேலை பார்த்து வருவது கூட தற்போது புதிய இயல்பு வாழ்க்கை என்று ஆகிவிட்ட நிலையில், சிலர் நான்கு நாள் வேலை வாரம் (Four-day work week) போன்ற தீவிரமான மற்றும் நீண்ட கால விருப்பங்களை பரிசீலித்து வருகின்றனர். பல உலகத் தலைவர்களும் தொழிற்சங்கங்களும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க நான்கு நாள் வேலை வாரத்தை முன்மொழிந்துள்ளன.

நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாற வேண்டும் என்று கூறி வரும் உலக தலைவர்களில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடெர்ன் மற்றும் ரஷ்ய பிரதமர் ட்மிட்ரி மெத்வதேவ் ஆகியோரும் அடங்குவர். சுருக்கப்பட்ட பணி அட்டவணைகள் பல ஆய்வுகளுக்கு உட்பட்டவை, அவை உற்பத்தித் திறன் மற்றும் வேலை வாழ்க்கை சமநிலை இரண்டும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read more: Waterfalls in Tamil Nadu

What does the Four-Day Work Week Model Mean?

ஐந்து நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளை, நான்கு நாளில் செய்து முடிக்க வேண்டும் என்பது இந்த நான்கு நாள் வேலை வாரம் என்பதற்கான அர்த்தம் அல்ல. அதற்கு பதிலாக, வேலை நாட்களும், வேலை நேரங்களும் (முழு நேர ஊழியர்களுக்கு) குறைக்கப்படும் என்பது ஆகும். மிகவும் வளர்ச்சி அடைந்த வடிவத்தில், ஒவ்வொரு வாரமும் குறைவான நேரம் அவர் வேலை செய்தாலும், அவருக்கு அதே அளவு சம்பளம் வழங்கப்படும். கூகிள் இணை நிறுவனர் லாரி பேஜ் உட்பட, பல உயர் அதிகாரிகள் உலகளவில் இந்த நான்கு நாள் வேலை வாரத்திற்கு ஆதரவாக உள்ளனர்.

Read more: வெற்றி தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் நவம்பர் 2021

Is the Four-Day Work Week Model a New Concept?

வேலை வாரத்தை குறைப்பது என்பது ஒரு புது கருத்து அல்ல. ஆனால் 40 மணி நேரம், ஐந்து நாள் வேலை என்பது சமீபத்திய கருத்து. இது 1930 களின் பெரும் மந்தநிலைக்கு முந்தையது, வாரத்தில் வேலை நேரங்களைக் குறைப்பதன் மூலம், ஆயிரக்கணக்கான வேலைகளை பாதுகாக்கும் ஒரு வழியாகும். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், இதே போன்ற சூழ்நிலையை நாம் மீண்டும் எதிர்கொள்கிறோம்.

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உற்பத்தித் திறன் அதிகரித்ததால் மொத்த வேலை நேரங்கள் படிப்படியாக குறையும் என்று அறிஞர்கள் கணித்துள்ளனர். 1928 ஆம் ஆண்டில், பொருளாதார வல்லுநர் ஜான் மேனார்ட் கெய்ன்ஸ், வேலை வாரத்தை ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் 15 மணி நேரமாகக் குறைக்க முடியும் என்று கூறினார்.

1920 மற்றும் 30 காலகட்டங்களில், ஹென்றி ஃபோர்ட் போன்ற தொழிலதிபர்கள் வேலை நேரத்தை குறைத்தனர். அப்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 முதல் 16 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை என்பது செயல்திறனை அதிகப்படுத்தியது என்பதை கண்டறிந்தனர். மேலும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச நேரம் என்பது, நிறைய பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் காரணமாக இருந்தது என்றும் அவர் அறிந்தார். 1926 ஆம் ஆண்டில், வேர்ல்ட்ஸ் ஒர்க் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஃபோர்டு, “வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தையில் ஓய்வு என்பது ஒரு இன்றியமையாத மூலப்பொருள், ஏனெனில் உழைக்கும் மக்களுக்கு ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட நுகர்வோர் தயாரிப்புகளுக்கான பயன்பாடுகளைக் கண்டுபிடிக்க போதுமான இலவச நேரம் தேவை.” என்று கூறியிருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 இல் உலகளாவிய நிதி நெருக்கடியின் மத்தியில், ஜெர்மனி ‘குசர்பீட்’ என்ற குறுகிய கால வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது பணியாளர்களை பணிநீக்கம் செய்வதற்குப் பதிலாக அவர்களின் வேலை நேரங்களைக் குறைத்தது. இதன் கீழ், தொழிலாளர்கள் வேலை செய்யாத மணிநேரங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 60 சதவீதத்தைப் பெற்றனர், அதே நேரத்தில் அவர்கள் வேலை செய்த மணிநேரங்களுக்கு முழு ஊதியத்தையும் பெற்றனர்.

மிக சமீபத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜப்பானில் உள்ள தனது அலுவலகங்களில் நான்கு நாள் வேலை வாரம் மாதிரியை சோதனை செய்து பார்த்தது. அதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக மட்டுமல்லாமல் கணிசமாக அதிக உற்பத்தி திறனையும் அளித்துள்ளனர் என்று கண்டறிந்தது. ‘ஒர்க்-லைஃப் சாய்ஸ் சேலஞ்ச் சம்மர் 2019’ இன் ஒரு பகுதியாக, அந்த நிறுவனத்தின் 2,300 பணியாளர்களுக்கு சம்பளத்தைக் குறைக்காமல் தொடர்ச்சியாக ஐந்து வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டது. அதிகரித்த உற்பத்தித் திறனைத் தவிர, ஊழியர்கள் 25 சதவீதம் குறைவான நேரத்தை எடுத்துக் கொண்டதாகவும், மின்சார பயன்பாடும் 23 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த பணியாளர்களில் குறைந்தது 92 சதவீதம் பேர், குறுகிய வாரத்தை வரவேற்றனர் என்று கூறியது.

READ MORE: வெற்றி தமிழ்நாடு மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF தமிழில் நவம்பர் 2021

Adda247 Tamil

Four-Day Work Week Model in India

பணி மற்றும் தொழில் நிறுவனங்களில் வார வேலை நாள்கள் மற்றும் ஊதிய முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தை வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்தொடர்பு, பணி நிரந்தரம், சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் போன்றவற்றில் நான்கு முக்கியம்சங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் நிதியாண்டு முதல், நான்கு வேலை நாள்களைக் கொண்ட வாரங்களாக மாற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த புதிய முக்கியம்சங்களின் அடிப்படையில், தொழில் கலாசாரம், ஊதியம், வேலை செய்யும் நேரம், வார பணிநாள்கள் என பலவும் மாறும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், மத்திய அரசு வரும் நிதியாண்டில் கொண்டு வரவிருக்கும் புதிய மாற்றங்கள் தொடர்பான கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டன. தற்போது, மாநிலங்கள், இந்த புதிய கொள்கைகளை பரிசீலித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே எஞ்சி உள்ளது.

PTI அறிக்கையின் படி, நாடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில், நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை பெறலாம், அதில் வாரத்திற்கு நான்கு நாள் வேலை திட்டம் என்பதும் ஒரு பகுதியாகும். முன்மொழியப்பட்ட புதிய தொழிலாளர் குறியீடுகளில் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளும் அடங்கும்.

Apply Online: SSC CGL 2021-22 Notification Out, Exam Date, Online Form, Selection Process

What may be the Consequences of the 4-Day Work Week Model?

தொழிலாளர் கொள்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வர மோடி அரசு பரிசீலனைகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனங்களுக்கு ஐந்து அல்லது ஆறு வேலை நாட்களுக்குப் பதிலாக, நான்கு வேலை நாட்கள் என்கிற புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அறிக்கைகளின்படி, ஒரு வாரத்திற்கான வேலை நேர வரம்பான 48 மணிநேரம் மாற்றப்படாது.

ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், வாரத்திற்கு 6 வேலை நாட்கள் இருக்கும். ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேர வேலையைத் தேர்வுசெய்தால், அது நான்கு நாள் வேலை மற்றும் மூன்று விடுமுறைகளைக் குறிக்கிறது.

இது தவிர, மத்திய அரசின் இந்த புதிய கொள்கைகள், நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ஊழியர்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம், வாரத்தில் நான்கு நாள்கள் பணியாற்ற வேண்டியது வரும். இதன் மூலம், 48 மணி நேர பணியைக் கொண்ட ஒரு வாரம் என்பது நடைமுறைப்படுத்த முடியும்.

ஆனால், இந்த புதிய நடைமுறை, அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் பின்பற்றப்பட்டால், அதில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், அது தொழிலாளர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தில் சரிவு மற்றும், தொழிலாளர்கள், நிறுவனங்கள் செலுத்தும் வருங்கால வைப்புநிதியின் சுமை அதிகரிப்பு போன்றதாகும்.

அதாவது, தகவல்கள் கூறுவது என்னவென்றால், அதிக பிஎஃப் கட்ட வேண்டியதாக இருக்கும். அதனால், ஊதியம் குறையும் என்பதாகும்.

Read More: List of Indian Space Centres & Indian Space Agencies 

Coupon code- WIN10-10% OFFER + double validity

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group