Tamil govt jobs   »   Study Materials   »   Waterfalls in Tamil Nadu

Waterfalls in Tamil Nadu | தமிழ்நாட்டின் அருவிகள்

Waterfalls in Tamil Nadu : If you are a candidate preparing for TNPSC Exams and looking for TNPSC Study Materials, you will get all the information regarding the topics Waterfalls in Tamil Nadu, the List of Waterfalls in Tamil Nadu, important waterfalls such as Hogenakkal falls, Kutralam falls, highest waterfall in Tamil Nadu, etc. on this page.

Waterfalls in Tamil Nadu : அருவி என்பது, ஆறு போன்ற நீரோட்டம், சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில், மேல் மட்டத்திலிருந்து, கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும். சில அருவிகள் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உருவாகின்றன. இதனால், ஆற்றின் நீரோட்டப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுச் சடுதியான, கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமைகளில், அருவிகள் உருவாகாமல், நிலச்சரிவு, நிலவெடிப்பு, எரிமலைச் செயற்பாடுகள் போன்ற சடுதியான நிலவியல் விளைவுகள் ஏற்படுகின்றன. அருவிகள் செயற்கையாகவும் உருவாக்கப்படக் கூடும். பொதுவாக இவை பூங்காக்கள், நிலத்தோற்ற வடிவமைப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுவது உண்டு. Waterfalls in Tamil Nadu பற்றிய தகவல்களை, நாங்கள் உங்களுக்கு இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

List of Waterfalls in Tamil Nadu

அகஸ்தியர் அருவி, அம்பாசமுத்திரம்

அகஸ்தியர் அருவி திருநெல்வேலியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. அதோடு பாபநாசம் சிவபெருமான் கோயிலுக்கு மிக அருகில், 4 கி.மீ. தொலைவில் இருப்பதால், கோயிலிலிருந்து இந்த அருவியை நடந்தே சென்றடைய முடியும். இந்தப் பகுதியில் மூலிகைச் செடிகள் அதிகமாக காணப்படுவதால், அருவி நீருக்கு சரும வியாதிகளை போக்கும் சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.

பைக்காரா அருவி, ஊட்டி

இந்த அருவி ஊட்டியிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் சாலையில், பைக்காரா அணையின் அருகில் பைக்காரா அருவி அமைந்துள்ளது. ஊட்டியில் அமைந்துள்ள அருவிகளில் முக்கியமானதாக பைக்காரா அருவி விளங்குகிறது. அருவியின் கீழ்ப்பகுதி மோசமாக இருப்பதால், பெரும்பாலும் விபத்துகளை தவிர்க்க பருவ காலத்தில் மூடப்பட்டு இருக்கும். நீச்சல் அடிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் கீழே பாறைகள் கூராகவும், ஆழம் குறைவாகவும் இருக்கும். இந்த அருவி ஒரு சுற்றுலாத்தலமாக மிக பிரபலமானது.

ஆகாய கங்கை அருவி, நாமக்கல்

Waterfalls in Tamil Nadu | தமிழ்நாட்டின் அருவிகள்_3.1
ஆகாய கங்கை அருவி, நாமக்கல்

இந்த அருவி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிழத்குத் தொடர்ச்சி மலையின் கொல்லிமலைப் பகுதியில் உள்ளது. அய்யாறு என்ற ஆறே ஆகாய கங்கை அருவியாக விழுகிறது. இந்த அருவி, பார்ப்பதற்கு ஆகாயத்தில் இருந்து கங்கையானது, அருவியாகக் கொட்டுவது போல் காட்சி அளிக்கிறது. 300 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, காண்போரைத் திகைக்கச் செய்கிறது. இந்த அருவிக்கு அருகில் அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த இடம் மலைகளால் சூழப்பட்டுள்ள பள்ளத்தாக்குப் பகுதியாகும். இந்த அருவி அமைந்துள்ள காட்டுப்பகுதியில், கோரக்கர் மற்றும் கலாங்கி நாதர் சித்தர்களின் குகைகள் காணப்படுகின்றன.

Read More: List of World Heritage Sites in India | இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் பட்டியல்

கும்பக்கரை அருவி, தேனி

தேனி மாவட்டத்தின் ‘சின்னக் குற்றாலம்’ என அழைக்கப்படுவது கும்பக்கரை அருவி. இந்த இடம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மூலையார் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் பாம்பாறானது, மலையில் பயணித்து மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருத மரங்கள் அதிகமாக உள்ளது. மருத மரங்களின் வேர்களின் இடையே இந்த அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கை.

மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இவ்விடம் சரியான தேர்வாகும். ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிகமாக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும்.

Read More: Jallikattu in Tamilnadu | தமிழகத்தில் ஜல்லிக்கட்டு

ஒகேனக்கல் அருவி, தர்மபுரி

Waterfalls in Tamil Nadu | தமிழ்நாட்டின் அருவிகள்_4.1
ஒகேனக்கல் அருவி, தர்மபுரி

இந்தியாவின் சிறந்த அருவிகளில், ஒக்கேனக்கல் அருவி முக்கியமான ஒன்று. இந்த அருவி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில், காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. தர்மபுரியில் இருந்து 47 கி.மீ தூரத்தில் ஒகேனக்கல் அருவி அமைந்துள்ளது. இந்த ஒக்கேனக்கல் அருவிதான் ‘இந்தியாவின் நயாகரா’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு அருவியாக இல்லாமல், பல அருவிகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. இந்த அருவிப்பகுதியில் காணப்படும் கார்பனைட் பாறைகள் ஆசியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிக பழமையானவையாகவும் கருதப்படுகின்றன. ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலா செல்ல சிறந்த இடமாக விளங்குகிறது.

குரங்கு அருவி, கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை மலைப்பகுதியில் பொள்ளாச்சிக்கும், வால்பாறைக்கும் இடையில் ஆழியார் அணைக்கு அருகில் குரங்கு அருவி (Monkey Falls) அமைந்துள்ளது. இது கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் காலங்களில், இங்கு குளிக்க தடை விதிக்கப்படும். இவ்வருவி 60 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. இவ்வருவிக்கு மேலே வால்பாறை, டாப்ஹில்ஸ், கீழே ஆழியார் அணை ஆகிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன. பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை உள்ளதால், இவ்விடம் மலையேற்றத்திற்குச் சிறந்த இடமாகும்.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

கிளியூர் அருவி, ஏற்காடு

கிளியூர் அருவி ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு ஏரி நிரம்பி வழியும்போது, 300 அடி உயரத்தில் இருந்து கிள்ளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது. இந்த அருவிக்கு சுற்றுலா வர ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலங்களே மிகவும் ஏற்றவை. ஏனெனில் பருவமழையின் காரணமாக நல்ல நீர்வரத்து காணப்படுவதுடன், 300 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியின் அற்புத காட்சி கண்களுக்கு விருந்தாக அமையும். படகுச் சவாரி செய்யும் இடமாகவும், நீந்தும் இடமாகவும் இது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. மலையேற்றம் செய்யவும் சிறந்த இடமாக இது உள்ளது.

சுருளி அருவி, தேனி

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சுருளி அருவி அமைந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி கருவியாகும். 150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக இந்த அருவி விழுகிறது. மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி அருவி, முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது. இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாகும். சுருளி அருவியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சுருளி வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாடு சுற்றலாத்துறையின் சார்பில் இங்கு நடத்தப்படும் சாரல் திருவிழாவிற்கு மக்கள் அதிகமாக வருகை தருகின்றனர். தேனிக்கு வருபவர்கள் காண வேண்டிய முதன்மையான சுற்றுலாத் தலம் இந்த அருவிதான்.

திருப்பறப்பு அருவி, திருவட்டாறு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்விடம் குமரிக் குற்றாலம் என்றழைக்கப்படுகிறது. திருப்பரப்பு அருவி கன்னியாகுமரியிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், திருவட்டாறுக்கு அருகில் 10 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த அருவி வருடத்தில் 4 மாதங்கள் தவிற பிற மாதங்களில் வழிந்து ஓடுகின்றது. எனவே வளமை குறையாத இந்த அருவியை புகழ்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத் துறை ஒரு குழந்தைகள் நீச்சல்குளத்தையும், ஒப்பணை அறையையும் இங்கு உருவாக்கி இருக்கிறது. இந்த அருவிக்கு அருகில் மஹாதேவர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்று உள்ளது.

Read More: National Parks in Tamilnadu | தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்கா

சிறுவாணி அருவி மற்றும் அணை

உலகின் இரண்டாவது மிக சுவையான நீர், சிறுவாணி நீர். காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை நதிதான், சிறுவாணி ஆறு. இது பாலக்காடு வழியாக தமிழ்நாட்டுக்குள் பாய்கிறது. இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் ‘சிறுவாணி அணை’ கட்டப்பட்டுள்ளது. இந்த சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடங்களில் உள்ள பாறைகள் மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மை காரணமாகவே சிறுவாணி நீர் சுவையாக இருப்பதாக கூறப்படுகிறது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான், சிறுவாணி அருவியும் அமைந்திருக்கிறது. கோயம்புத்தூரின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும், கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகளை விருந்தளிப்பதாகவும் இருக்கிறது. இந்த சிறுவாணி அணை ‘கோவை குற்றாலம்’ எனவும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் சிறுவாணி அருவி அமைந்துள்ளது. அருவியை தாண்டி மலையின் மீது அமைந்திருக்கும் சிறுவாணி அணையை பார்வையிட, வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். சிறிது தூரத்தில் வெள்ளியங்கிரி மலையும், வன பத்ரகாளியம்மன் கோவிலும், தென் திருப்பதி கோவிலும் அமைந்துள்ளது.

குற்றால அருவி, திருநெல்வேலி

Waterfalls in Tamil Nadu | தமிழ்நாட்டின் அருவிகள்_5.1
குற்றால அருவி, திருநெல்வேலி

குற்றால அருவி தென் தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக் கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. 1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும்.

குட்லாடம்பட்டி அருவி, மதுரை

குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே, சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இது போன்ற நேரங்களில், சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை, தண்ணீர் வரத்து இருக்கும். 89 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதியில் அமைந்தள்ளது. இதன் மலையடிவாரத்தில் அமைந்தள்ள ரமணகிரி ஆசிரமம் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கிறது. இவ்விடத்தில் தியானப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

READ MORE: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

கேத்தரின் அருவி, நீலகிரி

இந்த இடம், நீலகிரி மாவட்டத்தில் குன்னூரின் அருகே உள்ளது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில், அரவேணுவில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. இது நீலகிரி மலைப் பகுதியின் இரண்டாவது மிகப் பெரிய அருவி ஆகும். பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே, 250 அடி உயரத்தில் அழகிய முகடுகளின் வழியே வழிந்து பாறைகளை நனைத்து பார்வையாளர்களின் மனதையும் நனைக்கிறது. இது நல்ல மலையேற்றத் தலமாவும் விளங்குகிறது. குன்னூரின் டால்பின் நோஸ் பார்வை இடத்திலிருந்து இந்த அருவியை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமூர்த்தி அருவி

திருமூர்த்தி அருவி கோயம்புத்தூரிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கி.மீ தூரத்திலும், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சேர்த்து ஒரே கோயிலாக எழுப்பப்பட்டுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகும். இந்த கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Adda247 Tamil
Adda247 Tamil Telegram

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group