Tamil govt jobs   »   Vedic Culture Part 4 in Adda247...   »   Vedic Culture Part 4 in Adda247...

Vedic Culture Part 4 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி – 4 Adda247 தமிழில்

வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1,பகுதி – 2 மற்றும் பகுதி – 3 ண்டை இங்கு படியுங்கள்.

Vedic Culture Part 1

Vedic Culture Part 2

Vedic Culture Part 3

பெண்களின் நிலை

ரிக்வேதகால:

  • ரிக்வேதகால சமூகத்தில், பெண்கள் ஓரளவிற்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். 
  • மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார். 
  • பெண்கள் தனது கணவருடன் தமது வீட்டில் சடங்குகள் நடத்தினார். 
  • குழந்தைத் திருமணத்தையும், உடன்கட்டை ஏறுதலையும் அறிந்திருக்கவில்லை
  • கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளத் தடைகள் இல்லை. 
  • பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெறும் சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது
  • பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்தப் பங்கும் வகிக்கவில்லை.

TNUSRB CONSTABLE 2023

பின்வேதகாலம்:

  • பின்வேதகாலத்தில் சமூகத்தில் மட்டுமின்றி, குடும்பத்திலும் கூட பெண்களின் பங்கும் அவர்களுக்கான நிலையும் குறைந்துபோனது
  • பெண்கள் குடும்பத்தில் சடங்குகளை நடத்த முடியாத நிலை உருவானது. 
  • திருமணம் தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன. 
  • பலதார மணம் சாதாரணமாக நடைபெற்றது. 
  • கைம்பெண் மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை
  • பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. 
  • கலப்புத் திருமணம் நிராகரிக்கப்பட்டது.

Vedic Culture Part 4 in Adda247 Tamil | வேதகாலம் பகுதி - 4 Adda247 தமிழில்_3.1

பொருளாதார வாழ்க்கை

ரிக்வேதகால:

  • வேதகாலப் பொருளாதாரமானது கால்நடை மேய்ச்சலும் வேளாண்மையும் கலந்ததாகும். 
  • ரிக்வேதகால ஆரியர்களின் முதன்மைத் தொழில் கால்நடைகள் மேய்ப்பது
  • பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் இக்காலத்தைச் சேர்ந்ததாகும். 
  • சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஆரியர்கள் நிரந்தரமாகக் குடியேறியபின் அவர்கள் வேளாண்மை செய்யத் தொடங்கினார். 
  • யவா (பார்லி) அவர்களின் முதன்மை பயிராகும்
  • கோதுமை, பருத்தி ஆகியவை சிந்துவெளி மக்களால் பயிர் செய்யப்பட்ட போதிலும் ரிக் வேதத்தில் அவைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. 
  • ஒவ்வொரு வருடமும் இருபோகம் சாகுபடி செய்யப்பட்டது.

பின்வேதகாலம்:

  • பின்வேத காலத்தில் ஆரியர்கள் பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை மட்டுமல்லாமல் யானைகளையும் பழக்கப்படுத்தினர். 
  • தொடக்க வேத கால கைவினைஞர்களோடு நகை செய்வோர், சாயத்தொழில் செய்வோர், உலோகங்களை உருக்குவோர் போன்றோரும் சமூகத்தில் இடம் பெற்றிருந்தனர். 
  • இக்காலப் பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.
  • இரும்புக் கொழுமுனை கொண்ட கலப்பை மற்றும் இரும்புக் கோடாரி ஆகியவற்றின் உதவியோடு அதிக அளவிலான நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டது. 
  • நெல், கோதுமை, பார்லி ஆகியன செய்யப்பட்டன. 
  • பயிர் வேளாண்மை வளர்ச்சி பெற்றதால் நிலத்தின் மீது தனியுரிமை உருவானது. 
  • புதிய தொழில்களும், கலைகளும் வளர்ந்து உபரி உற்பத்தி ஏற்பட்டு வணிகத்துக்கு இட்டுச் சென்றன.
  • பண்டமாற்றுமுறை பரவலாகக் காணப்பட்டது. (ஒரு பொருளைக் கொடுத்து வேறொரு பொருளை வாங்குவது). 
  • அவர்கள் நிஷ்கா, சத்மனா என்னும் தங்க நாணயங்களையும், கிருஷ்ணாலா என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினர்.

இது பகுதி 4 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil