Table of Contents
இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு- நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு” என்பது பாரதியின் கூற்று.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்ற நாடு. வேற்றுமையில் ஒற்றுமை என்பது வேறுபாடுகளைக் கொண்ட தனி நபர்களிடையே இருக்கும் சில ஒருமைப்பாட்டைக் குறிக்கும் கருத்து. இந்த வேறுபாடுகள் கலாச்சாரம், மொழி, சித்தாந்தம், மதம், பிரிவு, வர்க்கம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் இருக்கலாம்.
கடுமையான பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்பட்டு வருகின்றன. இந்த இணைவுதான் இந்தியாவை கலாச்சாரத்தின் தனித்துவமான இடமாக மாற்றியுள்ளது. எனவே, இந்தியா என்பது ஒரு ஒருங்கிணைந்த கலாச்சார முழுமையின் கட்டமைப்பிற்குள் பன்முக கலாச்சார சூழ்நிலைகளின் பிரதிநிதித்துவம் ஆகும்.
வேற்றுமையில் ஒற்றுமை
ஒரு நாட்டில் பல்வேறு வகையான மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் மொழி, சமயம், கலாச்சாரம், இனம் என வேறுபட்டவர்களாக காணப்படுகின்றனர். இருந்தாலும் இந்த மக்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும். இந்தியர்கள் என்ற ஒரு உணர்வு இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கின்றது எனலாம். இந்த கட்டுரையில், அவர்களது வேற்றுமைகளில் அவர்களது ஒற்றுமை பற்றி காண்போம்.
வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவம்
வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது:
தேசிய ஒருங்கிணைப்பு: வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் வெவ்வேறு கருத்துக்கள் கொண்ட மக்களைப் பிரிப்பது மிகவும் எளிமையான பணியாகும். தேசிய ஒருமைப்பாடு இருத்தல் வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமையைப் பேண உதவுகிறது.
முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி: வேற்றுமையில் ஒற்றுமை என்பது நாட்டின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது, ஏனெனில் ஒற்றுமையான நாடு எப்போதும் வளர்ச்சிப் பாதையில் செல்லும்.
உலகளாவிய அங்கீகாரம்: பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு, ஆனால் இன்னும் அது ஒன்றுபட்டுள்ளது, தேசத்திற்கு மதிப்பை சேர்ப்பது மட்டுமல்லாமல், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அமைதியான சகவாழ்வு: உள் பூசல்களின் தோற்றத்திற்கு பன்முகத்தன்மையும் காரணமாக இருக்கலாம், ஆனால் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்களுடன் அமைதியான சகவாழ்வைப் பேணுவதில் வேற்றுமையில் ஒற்றுமை பெரும் பங்கு வகிக்கிறது.
Fill the Form and Get All The Latest Job Alerts
பன்முகத்தன்மையின் கூறுகள்
- உலகில் இந்தியா ஏழாவது மிகப்பெரிய பரந்து விரிந்த பழமையான நாடாகும். இந்த நாடு 29 மாநிலங்களையும் 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இன்று இந்தியாவின் மக்கள் தொகை 1.38 பில்லியனாக காணப்படுகிறது.
- வேறுபட்ட காலநிலை கூறுகள், வெவ்வேறு புவியியல் அம்சங்கள், வேறுபட்ட மொழிகளை பேசும் மக்கள், வெவ்வேறுபட்ட கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள், வேறுபட்ட வள வாய்ப்புகள் உடைய மாநிலங்கள் இங்கு காணப்படுகின்றன.
- அதை போலவே, பல்வேறு மதப்பிரிவுகளை பின்பற்றும் மனிதர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். இவ்வாறு பல வேற்றுமைக் கூறுகள் இந்தியாவில் காணப்படுகின்றன.
இன வேறுபாடுகள்
- இந்தியா கி.மு 5 ஆம் நூற்றாண்டிலேயே, பல இனங்களையும், அதிக மக்கள் தொகையையும் பெற்றிருந்தது என்று வரலாற்றின் தந்தை “கெரடோரஸ்” தெரிவிக்கின்றார்.
- இங்கு காஷ்மீர், பஞ்சாப், இராஜபுதனம்(பிரித்தானிய இந்தியாவில் இராஜபுதனத்தின் நிலப்பரப்புகள், தற்கால இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் மற்றும் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளையும் மற்றும் பாகிஸ்தானின் தெற்கு பகுதியான சிந்துவையும் கொண்டிருந்தது.) ஆகிய பகுதிகளில் இந்தோ- ஆரிய இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
- தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள், சோட்டா நாக்பூர் பகுதிகளில் திராவிட இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
- அசாம், நேபாள எல்லை பகுதிகளில் மங்கோலிய இனத்தவர்களும், ஜக்கிய மாநிலங்களான பீகார் பகுதிகளில் வாழும் ஆரிய திராவிட இன மக்களும், வங்காளம், ஒடிசா பகுதியில் வாழும் மங்கோல திராவிட இனம், மராட்டிய பகுதியில் வாழும் துருக்கிய இனம் என்று பலவகையான இனங்களை சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் வாழ்கின்றனர்.
- இந்தியாவைப் பல “இனங்களின் அருங்காட்சியகம்“ என்று டாக்டர் வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் குறிப்பிட்டார்.
மொழி வேறுபாடுகள்
- மொழி என்பது, ஒரு மனிதன் தனது உள்ளத்து உணர்வுகளைப் பிறருக்கு உணர்த்த உபயோகிக்கும் மிகச்சிறந்த ஒரு கருவியாகும். இதனையே language is the vehicle of communication என்று அபெர் க்ரோம்பி குறிப்பிடுகிறார்.
- இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அதில் 780 மொழிகள் பேசப்படுகின்றதாக கூறப்படுகிறது. 22 மொழிகள் மாத்திரமே அதிகாரபூர்வ மொழிகளாக இந்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மத வேறுபாடுகள்
- இந்தியா அதிக மத நம்பிக்கை நிறைந்த நாடாக காணப்படுகின்றது. ஆன்மீகத்தை அதிகம் மதிக்கும் மக்கள் கூட்டமாக இந்தியர்கள் பார்க்கப்படுகின்றனர். இந்து மதம், பௌத்த மதம் என்பன இங்கு தான் தோன்றின. இங்கு 80 சதவீதமானவர்கள் இந்து சமயத்தை பின்பற்றுகின்றனர். இந்து மதத்தின் அதிகளவான சாயலை இந்தியா முழுவதும் காணமுடியும்.
- இந்து மதத்திற்கு அடுத்த படியாக இஸ்லாம் மதம், கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், பௌத்த மதம், சமண மதம் எனப்படுகின்ற மதங்கள் காணப்படுகின்றன.
- இந்து மதம் சார்ந்த புனித தலங்கள் அதிகமாக இந்தியாவில் காணப்படுகின்றன. இருப்பினும் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் இங்கு ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
ஒற்றுமையின் கூறுகள்
அரசியல் ஒற்றுமை
- அரசியல் மற்றும் பண்பாட்டு ஒற்றுமை இந்திய தேசத்தை வலிமைமிக்க தேசமாக்கியது என்று ஜவஹர்லால் நேரு அவர்கள், தான் எழுதிய ‘Discovery of India’ என்ற நூலில் கூறியுள்ளார்.
மத ஒற்றுமை
- சமயங்களின் அடிப்படையில் கொண்டாப்படும் திருவிழாக்கள் மக்களை இந்தியர்களாக ஒன்றிணைக்கின்றன.
- வட இந்தியர்கள் தெற்கே உள்ள இராமேஸ்வரத்திற்குப் புனிதப்பயணம் மேற்கொள்வதும், தென் இந்தியர்கள் வடக்கே உள்ள காசிக்கு புனிதப்பயணம் மேற்கொள்வதும், நமது நாட்டின் சமய மற்றும் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
ஒற்றுமையின் காரணிகள்
- ஒரே சீரான நிர்வாகமொழி
- போக்குவரத்தும், செய்தித் தொடர்பும்
- வரலாறும் நாட்டுப்பற்றும்
- பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பேணிக்காத்தல்
- தேசியச் சின்னங்கள்
- தேசியத் திருவிழாக்கள்
தேசத்தின் அடிப்படையில் இந்தியர்கள்
- இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்திய காலத்தில், இந்திய நாட்டை மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரித்தாழும் கொள்கையை பின்பற்றியே இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
- முன்னோர்கள் இந்தியர்கள் என்ற ரீதியில் மதம், மொழி, இனம் தான்டி ஒன்றுபட்டு போராடியதனால் தான் சுதந்திரம் என்ற பெருங்கனவை அடைந்து கொள்ள முடிந்தது.
- இந்தியாவின் சுதந்திர தினம் இந்திய மக்களை வேற்றுமைகள் இன்றி மேலும் மேலும் ஒற்றுமை உடையவர்களாக மாற்றி கொண்டிருக்கின்றது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil