Tamil govt jobs   »   Study Materials   »   Five-Year Plans of India

Five-Year Plans of India, Year, Goals and Objectives

Five-Year Plans of India: Five Year Plan in India was first launched in 1951. Five-Year Plans have played an important role in India’s economic progress since independence. These plans have guided How to use scarce resources and obtain maximum economic benefits. It is important to know that the Indian Five Year Plans adopted the Soviet system of government from Russia. In this article, we have discussed the complete information about the Five Year Plan in India.

Five-Year Plans of India

Five-Year Plans of India: இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் என்பது 1947-2017 வரையில் இந்தியப் பொருளாதாரமானது திட்டமிடலை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பகுக்கப்பட்டு திட்டக் குழு (இந்தியா) (1947-2014) மற்றும் நிதி ஆயோக் (2014-2017) மூலம் வடிவமைக்கப்பட்டும், செயல்படுத்தப்பட்டும், மேற்பார்வையிடப்பட்டு வந்தது.

நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சி 2014 இல் அமைந்தவுடன் Five-Year Plans of India  – திட்ட கமிசன் கலைத்து விட்டு புதிய அமைப்பாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது.

Five-Year Plans of India: overview  

பொருளாதார திட்டமிடலின் நோக்கம் வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களைத் திறம்படப் பயன்படுத்தி விரும்பிய இலக்குகளை அடைதலாகும். ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் பொருளாதாரத் திட்டமிடலை மேற்கொள்ளும் முறை ரஷ்யாவிடமிருந்து [முன்னால் சோவியத் ரஷ்யா (USSR)] தருவிக்கப்பட்டது. இதுவரை இந்தியா 12 ஐந்தாண்டுத் திட்டங்களைத் செயல்படுத்தியுள்ளது. பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டமே(2012-2017) இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக நிதி ஆயோக்  (National Institution for Transforming India)  மூலம் திட்டமிட முடிவு செய்துள்ளது.

Five-Year Plans of India: Year

Five Year Plans Years
First Five year Plan 1951- 1956
Second Five year Plan 1956-1961
Third Five year Plan 1961-1966
Plan Holidays – Annual Plans 1966-1969
Fourth Five year Plan 1969-1974
Fifth Five year Plan 1974-1979
Sixth Five year Plan 1980-1985
Seventh Five year Plan 1985-1990
Annual Plans 1989-1991
Eighth Five year Plan 1992-1997
Ninth Five year Plan 1997-2002
Tenth Five year Plan 2002 –2007
Eleventh Five-year Plan 2007-2012
Twelfth Five year Plan 2012-2017

First Five Year Plan

  • இது ஹாரேட் டாமர் (Harrod-Domar) மாதிரியை அடிப்படையாக் கொண்டது.
  • இதன் முதன்மை நோக்கம் நாட்டின் வேளாண்மை முன்னேற்றமாகும்.
  • இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்கை விட அதிகம்) வெற்றி பெற்றது.

Second Five Year Plan

  • இத்திட்டம் PC மஹலநோபிஸ் (P.C. Mahalanobis) மாதிரியை அடிப்படையாக்க் கொண்டது
  • இதன் முதன்மை நோக்கம் நாட்டின் தொழில் மேம்படுத்துவதாகும். முன்னேற்றத்தை
  • இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் வெற்றி பெற்றது.

Third Five Year Plan

  • இத்திட்டம் “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அழைக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் முதன்மை நோக்கம் சுதந்திரமான பொருளாதாரம் மற்றும் சுய முன்னேற்ற நிலையை ஏற்படுத்துதல் ஆகும்.
  • சீன – இந்தியப்போரின் காரணமாக இலக்கு வளர்ச்சியான 5.6% ஐ அடைய இயலவில்லை.

Plan Holiday (1966-1969)

  • இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தோல்வியே இத்திட்ட விடுமுறைக்கான முதன்மைக் காரணமாகும்.[
  • இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வேளாண்மை, வேளாண் சார் துறைகள் மற்றும் தொழில் துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

Fill the Form and Get All The Latest Job Alerts

Fourth Five Year Plan 

  • இத்திட்டத்தின் இரண்டு முக்கிய நோக்கங்கள் நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு நிலையை அடைதலாகும்.
  • இத்திட்டம் அதன் இலக்கான 5.7% வளர்ச்சியை எட்டாமல் 3.3% வளர்ச்சியை மட்டுமே பெற்றுதோல்வியடைந்தது.

Fifth Five Year Plan

  • இத்திட்டத்தில் வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
  • ஒட்டுமொத்தமாக நோக்குகையில் இலக்கு வளர்ச்சியான 4.4% ஐ விட அதிகமாக 4.86 வளர்ச்சி பெற்று இத்திட்டம் வெற்றி பெற்றது.
  • இத்திட்டத்திற்கான முன் வரைவு D.P.தார்(DHAR) அவர்களால் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்பே) கைவிடப்பட்டது.

Rolling Plan 

  • 1978-79 ஆம் ஆண்டு ஒரு வருட திட்டம் காலத்திற்காக இச்சுழல் தொடங்கியது.
  • இது ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கப்பட்டது.

Sixth Five Year Plan

  • இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை தற்சார்பு ஆகும். “வறுமை ஒழிப்பு” (GARIBI HATAO) என்பதே இதன் இலட்சியமாகும்.
  • இது முதலீட்டு திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
  • இத்திட்டதின் வளர்ச்சி இலக்கு 5.2%. ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது.

Seventh Five Year Plan 

  • இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • முதன்முறையாக பொதுத்துறைக்கும் மேலாகதனியார்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது.
  • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.

Annual Plans 

  • மைய அரசில் நிலையற்ற அரசியல்சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலவில்லை. எனவே 1990 – 91 மற்றும் 1991 – 92 ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

Eighth Five Year Plan

  • இத்திட்டத்தில் வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனித வள் மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
  • இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது.
  • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 6%.  ஆனால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப்பட்டது.

Ninth Five Year Plan 

  • சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது
  • இத்திட்டகால இலக்கான 7% வளர்ச்சி எட்டப்படவில்லை. இந்தியப் பொருளாதாரம் 5.0% வளர்ச்சியை மட்டுமே அடைந்தது.

Tenth Five Year Plan 

  • இத்திட்டம் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது.
  • இத்திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை 15% ஆக்க குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
  • இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.01. ஆனால் 7.2% மட்டுமே எட்டப்பட்டது.

Eleventh Five Year Plan 

  • இதன் முக்கிய நோக்கம் “விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”
  • இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆனால் எட்டப்பட்டது 7.9% மட்டுமே.

Twelfth Five Year Plan

  • இதன் முதன்மை நோக்கம் “விரைவான அதிகமான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியே” ஆகும்.
  • இதன் வளர்ச்சி இலக்கு 81% ஆகும்.

NITI Aayog 

திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு 2015ம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இது நீடித்த வளர்ச்சியை மேற்பார்வையிடவும் ஒருங்கிணைக்கவும் மற்றும் செயல்படுத்தவும் செயல்படும். நிதி ஆயோக் என்பது இந்திய அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையமாகும். தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறைகளையும். புதிய கொள்கைகளையும் ஏற்படுத்தவும், தனிப்பட்ட பிரச்சினைகளுக்கான ஆதரவையும் தரும். இது சார்ந்த சாதனைகளை புரிந்து கொள்ள தனிப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

Important Study notes
Tamilnadu Government Holidays 2023 PDF List
Types of Soils in India
Which is the Longest River in India? – Top 10 Longest Rivers in India
Important Days in April 2023, List of National and International Dates
Important Days in March 2023
Gupta Empire In Tamil, Kings, Administration and Society
Indus Valley Civilization in Tamil, Harappan Civilization for TNPSC
Emperor Ashoka in Tamil, Life and History
Pala Empire in Tamil – Origin, Rise and legacy of a Dynasty
Carnatic Wars, History, Period of War, Treaty
Which is the Longest River in India?
Sources of the Indian Constitution, Features Borrowed
List of Major Port in India
Five-Year Plans of India, Goals and Objectives

*****************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

How many Five Year Plan in India was there?

India had 12 five-year programs in total. The Narendra Modi-led NDA administration abolished the Five-Year Plans in 2015.

When was Five Year Plan introduced in India?

Five Year Plan in India was first launched in 1951.