Tamil govt jobs   »   Latest Post   »   Indus Valley Civilization in Tamil

Indus Valley Civilization in Tamil, Harappan Civilization for TNPSC

Indus Valley Civilization in Tamil

Indus Valley Civilization in Tamil: The Indus Valley Civilization (Harappa) is an ancient city considered the oldest civilization of the Indian subcontinent. The site’s name, Indus Valley Civilization (Harappa), is thought to be derived from the name of a modern village located near the banks of the Ravi River. The archaeological site was located 24 kilometers west of Sahiwal in Punjab province in the northeastern part of present-day Pakistan. Read the full article for more details about Indus Valley Civilization(Harappan)

Indus Valley Civilization 

Indus Valley Civilisation Drainage System

தற்போது அரப்பா என்றழைக்கப்படும் கிராமம் பண்டைய தொல்லியல் தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளது. நவீன அரப்பா பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து இருக்கின்ற ஒரு மரபுரிமை ரயில் நிலையமாக இருந்தாலும், இன்றும் அந்நகரம் 15,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட ஊராக உள்ளது. இத்தொல்லியல் தளத்தில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த பண்டைய கோட்டை நகரத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்நகரமும் இடிபாடுகளும் சிந்து மற்றும் பஞ்சாப்பை மையமாகக் கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரிகத்தையும் மற்றும் அதைத் தொடர்ந்து இருந்த கல்லைறை எச் கலாச்சாரத்தையும் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நகரத்தில் 23500 குடும்பங்கள் 370 ஏக்கர் பரப்பளவில் களிமண்ணும் சுட்ட செங்கற்களும் சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறசுது. சுமார் கி.மு 2600 – 1900 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்த இந்நாகரிகத்தின் காலத்தை முதிர்ந்த ஹரப்பா  காலகட்டம் என்கிறார்கள்.

Indus Valley Civilization  Important Sites

  • ஹரப்பா பாகிஸ்தான், மேற்கு பஞ்சாப், மாண்ட் கோமாரி, ராவி நதிக்கரை
  • மொகஞ்சதாரோ பாகிஸ்தான் – சிந்து மாகாணம் – லர்கானா – சிந்து நதிக்கரை
  • கோட்டிஜி – சிந்து மாகாணம்
  • காலிபங்கன் – ராஜஸ்தான்
  • லோதல், தோலவிரா, சூர்கோட்டா – குஜராத்
  • ஆலம்கீர் – உத்திரபிரதேசம்
  • ரூபார் – பஞ்சாப்
  • பனவாலி – ஹரியானா

Read More: Carnatic Wars, History, Period of War, Treaty

Indus Valley Civilisation Discovery

  • ஹரப்பா நகரத்தின்  இடிபாடுகளை  முதன்முதலில்  சார்லஸ்  மேசன்  என்ற ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார். அவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படைவீரரும், ஆராய்ச்சியாளரும் ஆவார். அவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பார்வையிட்டபோது சில செங்கல் திட்டுகள் இருப்பதைக் கண்டார்.
  • “அந்த பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். இதுதான் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம்,
  • 1856-ல் பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்குப் பதிலாக பயன்படுத்தினர்.
  • 1856-ல் பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. அவர்கள் அவற்றின் முக்கியத்துவத்தை உணராமல் அவற்றை இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்குப் பதிலாக பயன்படுத்தினர்.
  • 1920-ல் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொஹஞ்ச-தாரோ நகரங்களை அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர். அப்பொழுது நீண்டநாள் மறைந்து கிடந்த நகரத்தின் எஞ்சிய பகுதிகளை உலகின் பார்வைக்கு கொண்டு வந்தார்கள். 1924-ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குநர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும், மொஹெஞ்ச-தாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அவை இரண்டுமே ஒரு பெரிய நாகரிகத்தை சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.
  • ஹரப்பாவிலும், மொஹஞ்ச தாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்களுக்கிடையே சிறிய அளவு வேறுபாடு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். எனவே, ஹரப்பா நாகரிகம் மொஹஞ்ச-தாரோவை விட பழமையானது என முடிவுக்கு வருகின்றனர்.

Indus Valley Civilisation Time Period

சிந்து சமவெளி நாகரிகம் பெரும்பாலும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது:

  1. முற்கால ஹரப்பன் கட்டம் கிமு 3300 முதல் 2600 வரை,
  2. முதிர்ந்த ஹரப்பன் கட்டம் கிமு 2600 முதல் 1900 வரை, மற்றும்
  3. லேட் ஹரப்பா கட்டம் கிமு 1900 முதல் 1300 வரை.
  • புவி எல்லை – தெற்கு ஆசியா
  • காலப்பகுதி – வெண்கலக்காலம்
  • காலம்-பொ.ஆ.மு 3300 -1900

(கதிரியக்க கார்பன் வயதுக் கணிப்பு முறை மூலம் முடிவு செய்யப்பட்டது)

  • பரப்பு – 13 லட்சம் சதுர கி.மீ
  • நகரங்கள் – 6 பெரிய நகரங்கள்
  • கிராமங்கள் – 200க்கும் மேற்பட்டவை

Fill the Form and Get All The Latest Job Alerts

Indus Valley Civilisation Town Planning

  • ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம். அதற்கான காரணங்கள்
  • சிறப்பான நகரத் திட்டமிடல்
  • சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு
  • தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை
  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள்
  • விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம்
Indus Valley Civilisation Town Planning
Indus Valley Civilisation Town Planning

Read more: List Of Awards in India 

Streets and Houses

  • தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன.
  • தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக் கொள்ளும் படியும் இருந்தன.
  • சாலைகள் அகலமாகவும் வளைவான முனைகளைக்கொண்டதாகவும் இருந்தன. வீடுகள், தெருக்களின் இரு ஓரங்களிலும் சீராக அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை உடையனவாக காணப்படுகின்றன.
  • பெரும்பாலான வீடுகள் பல அறைகளையும் ஒரு முற்றத்தையும், ஒரு கிணற்றையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும், குளியலறையும் இருந்திருக்கின்றன.
  • அரண்மனைகளோ, வழிபாட்டுத் தலங்களோ இருந்ததை தீர்மானிக்கக் கூடிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

The Great Bath

  • இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. நீர் கசியாத கட்டுமானத்துக்கான மிகப் பழமையான சான்று எனலாம்.
  • இக்குளத்தின் சுவர்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக சுவரிலும், தளத்திலும் பல அடுக்குகள் இயற்கைத் தார் கொண்டு பூசப்பட்டிருந்தது.
  • வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் உள்ளன.
  • அருகில் இருந்த கிணற்றில் இருந்து நீர் இறைக்கப்பட்டு பெருங்குளத்தில் விடப்பட்டது. உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேறவும் வகை செய்யப்பட்டிருந்தது.

The Great Granary

  • தானியக் களஞ்சியம் செங்கற்களால் அடித்தளமிடப்பட்ட, பெரிய, உறுதியான கட்டட அமைப்பு.
  • இவை தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
  • தள வெடிப்புகளில் கோதுமை, பார்லி, தினைவகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறிக் காணப்பட்டன.

The Assembly Hall

  • மொஹஞ்ச-தாரோவில் இருந்த இன்னொரு மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கு ஆகும். இது 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்து விரிந்த கூடம் ஆகும்.

Indus Valley Civilisation Drainage System

Indus Valley Civilisation Drainage System

  • ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவு நீர் வடிகால் அமைப்பு இருந்தது. வடிகால்கள் செங்கற்களைக் கொண்டும் கல்தட்டைகளைக் கொண்டும் மூடப்பட்டிருந்தன.
  • வீட்டிலிருந்து கழிவுநீர் பல தெருக்களின்கீழ் அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலமாக முக்கிய வடிகால்களைச் சென்றடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது
  • ஒவ்வொரு வீட்டிலும் திடக் கழிவுகளைத் தேக்குவதற்கான குழிகள் இருந்தன. அவை திடக்கழிவுகளைத் தேக்கி, கழிவு நீரை மட்டும் வெளியேற்றின.

    Adda247 Tamil
    Adda247 Tamil Telegram

Indus Valley Civilisation Trade and Transport 

  • ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தார்கள்.
  • தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவைகள் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. பொருட்களின் நீளத்தை அளவிட, அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
  • அவர்கள் சக்கர வண்டிகளைப் பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத. திடமான சக்கரங்களைப் பயன்படுத்தினர்.
  • மெசபடோபியாவுடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்றிருக்கிறது. சிந்து வெளிமுத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளது இதை உறுதிப்படுத்துகிறது.
  • சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் – சின் என்பவர் சிந்து வெளிப் பகுதியிலுள்ள மெலுக்கா என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.
  • பாரசீக வளைகுடா மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்று உருளை வடிவ முத்திரைகள் சிந்து வெளிப்பகுதியிலும் காணப்படுகின்றன . இது இந்த இரு பகுதிகளிலும் வணிகம் நடந்ததைக் காட்டுகிறது.
  • லோதல் என்னும் இடம் குஜராத்தில் சபர்மதி ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

Indus Valley Civilisation Technology

  • சிந்துவெளி நாகரிக மக்கள் தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகளை உருவாக்கினர்.
  • குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தத்தினாலான அளவுகோல் 1704 மி.மீ. வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இது தான் மிகச் சிறிய பிரிவு ஆகும்)

Indus Valley Civilisation Apparel & Ornaments

Indus Valley Civilization in Tamil, Harappan Civilization_7.1

  • பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன.
  • அங்கு கண்டுபிடிக்கப்பட்ட நூலைச் சுற்றி வைப்பதற்கான சுழல் அச்சுக்கள் மூலம் அவர்கள் நூற்கவும் செய்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
  • கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.
  • ஆண், பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருக்கின்றனர்.
  • கழுத்தணிகள், கையணிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் காலணிகள் முதலியவற்றையும் அணிந்தனர். தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.

Indus Valley Civilisation Occupation

  • சிந்துவெளி மக்களின் முதன்மையான தொழில் பற்றி எதுவும் தெரியவில்லை, எனினும் வேளாண்மை, கைவினைப் பொருட்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர் என தெரிகிறது.
  • அங்கு வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களும் இருந்துள்ளனர்.
  • கால்நடை வளர்ப்பும் அவர்களது தொழிலாக இருந்தது.
  • அவர்கள் சக்கரத்தின் பயனையும் அறிந்திருந்தனர்.

Indus Valley Civilisation Pottery

Indus Valley Civilisation Pottery

 

  • மட்பாண்டங்களைச் சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். தீயிலிட்டுச் சுடப்பட்டன.
  • மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளைச் செய்தனர்.
  • அங்கு கிடைத்த உடைந்த பானைத் துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடனும், வடிவியல் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.

Indus Valley Civilisation Religious Life

Indus Valley Civilisation Religious Life

  • சிந்துவெளி மக்களின் வழிபாடு மற்றும் அவர்களின் மத நடைமுறைகள் பற்றி அறிய எந்த ஓர் ஆதாரமும் கிடைக்க வில்லை.
  • அங்கு கிடைக்கப்பெற்ற பெண் சிலைகள் மூலம் சிந்து வெளி மக்களிடையே தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

Read More: Which is the Longest River in India?

Indus Valley Civilisation Art

  • பொம்மை வண்டிகள், தலையையும், கால்களையும் அசைக்கக்கூடிய பசுபொம்மைகள், களிமண் பந்துகள், சிறிய பொம்மைகள், சிறிய களிமண் குரங்கு, சுடுமண் பொம்மைகள், கொட்டைகளைக் கொறிக்கும் அணில் பொம்மைகள், மண்ணால் ஆன நாய்கள், நடனமாடும் ஆண் பொம்மை போன்றவையும் கிடைத்துள்ளன.
  • கடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொம்மைகள் மக்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆர்வத்தைக் காட்டுகிறது.

Decline of Indus Valley Civilisation 

  • பொ.ஆ.மு 1900 ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது. அதற்குக் கீழ்க்கண்டவை காரணங்களாக அமைந்திருக்கலாம்.
  • ஆற்றின் கரையில் உள்ள அதன் நகரங்களில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
  • சுற்றுச்சூழல் மாற்றம்
  • படையெடுப்பு
  • இயற்கைச் சீற்றங்கள்
  • காலநிலை மாற்றம்
  • காலநிலை மாற்றம்
  • காடுகள் அழிதல்

Indus Valley Civilisation Facts

  • உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்று.
  • பழமையான நான்கு நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது.
  • உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்கள்.
  • மேம்பட்ட சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்பு.
  • சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய உணர்வு மேலோங்கியிருந்தது.
  • நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான ‘சிவிஸ்’ (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் ‘நகரம்’ ஆகும்.
  • மக்கள் வெண்கலத்தாலான பொருட்களைப் பயன்படுத்திய காலம் வெண்கலக் காலம் ஆகும்.
  • மனிதர்களால் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் செம்பு.
  • சிந்துவெளி மக்களுக்கு இரும்பின் பயன் பற்றி தெரியாது.
  • சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (carnellan) பயன்படுத்தினர்.
  • முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
  • மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம்
  • உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Indus Valley Civilisation conclusion

இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது, அரப்பாவில் ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகளுக்கு வித்திட்டவர்கள் அவர்களேயாகும். ஹரப்பா நாகரிகத்தை பற்றி இக்கட்டுரையில் தெளிவாக அறிந்து கொண்டோம். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

 Home page Adda 247 Tamil
Official Website Adda247

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

FAQs

Q. What is Indus Valley Civilization?

Ans. The Indus Valley Civilization (Harappa) is an ancient city considered the oldest civilization of the Indian subcontinent.

Q2, What are the major cities of the Indus Valley Civilization?

Mohanjodaro, Harappa, Kalibangan, Lothal, Chanhudaru, Dholavira, Banawali are the major cities of the Indus Valley Civilization