Table of Contents
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும். கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி கர்நாடகம் வரை பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான காரணம், தீபகற்ப இந்தியாவின் நான்கு முக்கிய ஆறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகள் இம்மலைத் தொடரின் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு முக்கிய காரணமாகும். இம் மலைத்தொடர் வங்காளவிரி குடாவிற்கு இணையாக நீண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கில் தக்காண பீடபூமி அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. The Eastern Ghats மேற்கு தொடர்ச்சி மலையைப் போன்று அவ்வளவு உயரமானதாக காணப்படவில்லை.
The Eastern Ghats: A preview (முன்னோட்டம்):
மேற்கு தொடர்ச்சி மலையைப் போலன்றி கிழக்கு தொடர்ச்சி மலையானது ஒரு தொடர்ச்சியற்ற குன்றுகளாகும். இம்மலையானது பல இடங்களில் வங்காள கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மலையின் உயரம் 1,100 மீட்டர் முதல் 1,600 மீட்டர் வரை மாறுபடுகிறது. இக்குன்றுகள் பீடபூமியை சமவெளியிலிருந்து பிரிக்கின்றன. ஜவ்வாது, சேர்வராயன், கல்வராய், கொல்லிமலை மற்றும் பச்சை மலை தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு தொடர்ச்சி மலையின் முக்கிய குன்றுகளாகும். இவைகள் மாநிலத்தின் வட மாவட்டங்களில் அமைந்துள்ளன. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள முக்கியமான மலைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
The Eastern Ghats : Javadhu Hills (ஜவ்வாது மலை):
கிழக்கு தொடர்ச்சி மலையின் நீட்சியான இம்மலைகள் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பரவியுள்ளன. இம்மலை இவ்விரண்டு மாவட்டங்களையும் பிரிக்கிறது. சுமார் 1.100 முதல் 1,150 மீட்டர் உயரம் கொண்ட பல்வேறு சிகரங்கள் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன. இம்மலையின் மிக உயரமான சிகரம் மேல்பட்டு ஆகும். 1967 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காவலூர் வானவியல் தொலைநோக்கி மையம் இங்கு அமைந்துள்ளது. ஜவ்வாது மலையின் பல பகுதிகள் நீல நிற சாம்பல் கிரானைட் பாறைகளால் உருவானது. பல்வேறு பழ மரங்கள், மருத்துவ மூலிகைகள் மற்றும் சந்தன மரங்கள் போன்றவற்றிற்கு இப்பகுதி பெயர் பெற்றது ஆகும். சட்டவிரோத மரம் வெட்டுதலால் தற்பொழுது இப்பகுதியின் சந்தன மரங்கள் அழிந்துவிட்டன.
The Eastern Ghats : Kalvarayan Hills (கல்வராயன் மலை):
“கல்வராயன்” என்ற சொல் தற்போதுள்ள பழங்குடியினரின் பண்டைய கால பெயரான “கரலர்” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு முக்கிய மலை கல்வராயன் மலையாகும். இம்மலை ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகளுடன் இணைந்து காவிரி மற்றும் பாலாறு ஆகியவற்றின் ஆற்று வடிநிலப் பகுதியைப் பிரிக்கிறது. இம்மலைத் தொடரின் உயரம் 600 மீ முதல் 1.220 வரை காணப்படுகிறது. இது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வட பகுதி சின்ன கல்வராயன் எனவும் தென்பகுதி பெரிய கல்வராயன் எனவும் குறிப்பிடப்படுகிறது. சின்ன கல்வராயன் மலைப் பகுதியின் சராசரி உயரம் 825 மீட்டராகவும் பெரிய கல்வராயன் மலையின் சராசரி உயரம் 1.220 மீட்டராகவும் உள்ளது.
READ MORE: Rivers in Tamil Nadu
The Eastern Ghats : Servarayan Hills (சேர்வராயன் மலை):
1,200 முதல் 1.620 மீட்டர் வரையிலான உயரம் கொண்ட சேர்வராயன் மலைத் தொடர் சேலம் நகருக்கு அருகே அமைந்துள்ளது. இம்மலைத்தொடரின் பெயரானது உள்ளூர் தெய்வமான “சேர்வராயன்” என்ற பெயரில் இருந்து வந்ததாகும். இவற்றில் அமைந்துள்ள 1,620 மீட்டர் உயரம் கொண்ட “சோலைக்காடு” என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள உயரமான சிகரமாகும். ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காடு மலைவாழிடம் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்குள்ள சேர்வராயன் கோவில் இப்பகுதியின் உயரமான பகுதி ஆகும் (1,623 மீட்டர்).
The Eastern Ghats : Kolli Hills (கொல்லிமலை):
கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். இது சுமார் 2,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 1,300 மீட்டர் வரை உயரம் கொண்ட இம்மலைத் தொடரானது, தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது. அரப்பளீஸ்வரர் கோவில் இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் இங்கு பசுமை மாறா காடுகள் அல்லது சோலை காடுகள் அதிகம் காணப்படுகின்றன. பல காபி தோட்டங்கள், பழங்கள், பூக்கள் மற்றும் மலை சவுக்குப் பண்ணைகள் இம்மலைப் பகுதியில் காணப்படுகின்றன.
The Eastern Ghats : Pachaimalai (பச்சை மலை):
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் உயரம் குறைந்த குன்றுத் தொடராக இது காணப்படுகின்றது. தமிழ் மொழியில் “பச்சை” என்பது பசுமையைக் குறிக்கிறது. இம்மலைகளில் காணப்படும் தாவரங்கள் மற்ற பகுதியை விட பசுமையாக காணப்படுவதால் இது பச்சைமலை என அழைக்கப்படுகிறது. இம்மலைகளில் பலாப்பழம் ஒரு குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளைபொருளாக உள்ளது.
READ MORE: Western Ghats of India
The Eastern Ghats : Major hills (முக்கிய மலைகள்):
மாவட்டங்கள் | மலைகள் |
கோயம்புத்தூர் | மருதமலை, வெள்ளியங்கிரி மற்றும் ஆனைமலை |
தர்மபுரி | தீர்த்த மலை, சித்தேரி மற்றும் வத்தல் மலை |
திண்டுக்கல் | பழனிமலை மற்றும் கொடைக்கானல் |
ஈரோடு | சென்னிமலை மற்றும் சிவன் மலை |
வேலூர் | ஜவ்வாது, ஏலகிரி மற்றும் இரத்தினமலை |
நாமக்கல் | கொல்லிமலை |
சேலம் | சேர்வராயன், கஞ்சமலை மற்றும் சுண்ணாம்புக் குன்றுகள் |
விழுப்புரம் | கல்வராயன் மற்றும் செஞ்சிமலை |
பெரம்பலூர் | பச்சை மலை |
கன்னியாகுமரி | மருதுவாழ் மலை |
திருநெல்வேலி | மகேந்திரகிரி மற்றும் அகத்திய மலை |
நீலகிரி | நீலகிரி மலை |
The Eastern Ghats : conclusion (முடிவுரை):
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள முக்கியமான மலைகளை பற்றி இக்கட்டுரையில் மிக தெளிவாக பார்த்தோம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க
Download the app now, Click here
*****************************************************
Use Coupon code: HAPPY(75% OFFER)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group