Tamil govt jobs   »   Study Materials   »   Rivers in Tamil Nadu

Rivers in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள்

Rivers in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள்

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்காக பாய்கின்றன.  தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள்  ஏராளமாக உள்ளன.  ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப்பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு.  Rivers in Tamil Nadu பற்றி ஒரு சிறு குறிப்பை இக்கட்டுரையில் காணலாம்.

Rivers in Tamil nadu: District wise (மாவட்டங்கள் வாரியாக)

மாவட்டங்கள் ஆறுகள்
சென்னை கூவம் அடையாறு
திருவள்ளூர் கூவம்,ஆரணியாறு,கொற்றலையாறு
காஞ்சீபுரம் பாலாறு,அடையாறு,செய்யாறு
திருவண்ணாமலை தென்பெண்ணை, செய்யாறு
வேலூர் பாலாறு,பொன்னியாறு
விழுப்புரம் கோமுகி ஆறு,பெண்ணாறு
கடலூர் தென் பெண்ணை, கெடிலம்
நாகப்பட்டினம் வெண்ணாறு,காவிரி,வெட்டாறு
திருவாரூர் காவிரி,குடமுருட்டி பாமணியாறு
தஞ்சாவூர் காவிரி,குடமுருட்டி,பாமணியாறு கொள்ளிடம்
பெரம்பலூர் கொள்ளிடம்
திருச்சிராப்பள்ளி காவிரி,கொள்ளிடம்
நாமக்கல் காவிரி, நொய்யல், உப்பாறு
சேலம் காவிரி,வசிட்டா நதி
தருமபுரி காவிரி,தென்பெண்ணை,தொப்பையாறு
கிருஷ்ணகிரி தென்பெண்ணை,தொப்பையாறு
ஈரோடு காவிரி,நொய்யல்,அமராவதி.பவானி
கோயம்புத்தூர் அமராவதி, சிறுவாணி
கரூர் அமராவதி,நொய்யல்
திண்டுக்கல் மருதா ஆறு, சண்முகா ஆறு
மதுரை வைகை,பெரியாறு
தேனி வைகை,பெரியாறு,சுருளியாறு,மஞ்சளாறு
விருதுநகர் கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, அர்ஜூனா ஆறு
திருநெல்வேலி மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு
கன்னியாகுமரி கோதையாறு, பழையாறு
தூத்துக்குடி தாமிரபரணி, மணிமுத்தாறு

 

 

Rivers in Tamil Nadu: A Details (முன்னோட்டம்):

ஆறுகள்  பொதுவாக  ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். பெரிய பள்ளத்தாக்குகளில் ஓடும் ஆறுகளில் இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீரோட்டத்தின் கூறு மேலே தெரியக்கூடிய நீரின் அளவை விடப் பெருமளவு அதிகமாக இருக்கக்கூடும். உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன. ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை, பல வகையான தொழிற்சாலைகள் (எ.கா: காகித ஆலை) ஆற்று நீரையே நம்பியிருக்கின்றன. தற்காலத்தில் ஆற்றோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரமும் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்

 

READ MORE: Slash and Burn Agriculture

 

Rivers in Tamil nadu: Cauvery (காவிரி):

Cauvery
Cauvery

காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர் மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்திய தமிழ்நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இது கர்நாடகா மற்ற தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லைய உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சி உருவாக்குகிறது. ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சே மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மேட்டூர் நீர்த் தேக்கத்தில் இரு சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக வலதுகரை காவிரியுடன் இணைகிறது. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெ பகுதிக்குள் நுழைகிறது. கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல்  என்னும் இடத்தில் வலது கரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராலதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன. இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது “அகன்ற காவிரி” என அழைக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலோருள் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது. இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது. சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும் இவ்விரு கிளைகள் இணைந்து ‘ஸ்ரீரங்கம் தீவை” உருவாக்குகின்றன “கிராண்ட் அணைகட்” என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு “தென்னிந்தியாவின் தோட்டம்” என்று அழைக்கப்படுகிறது. பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது.

 

Rivers in Tamil nadu:  Palar (பாலாறு):

palar
palar

பாலாறு கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது. இது சுமார் 17,871 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாய்கிறது. இதில் 57% தமிழகத்திலும் மீதமுள்ள பகுதிகள் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் உள்ளன.

பொன்னி, கவுண்டினியா நதி, மலட்டாறு, செய்யாறு மற்றும் கிளியாறு ஆகியன திருமுக்கூடல் பாலாற்றின் துணை ஆறுகளாகும். இவ்வாற்றின் மொத்த நீளம் 348 கிலோமீட்டர் ஆகும். இதில் 222 கி.மீ தொலைவு தமிழ்நாட்டில் பாய்கிறது. இது வேலூர் மற்றும் காஞ்சிபுரம் வட்டங்கள் வழியாகப் பாய்ந்து, கூவத்தூருக்கு அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

 

Rivers in Tamil nadu:  Then Pennaiyar/Then Ponnaiyar (தென்பெண்ணையாறு / தென்பொருணையாறு):

Thenpennai
Thenpennai

இது கிழக்கு கர்நாடகாவின் நந்தி துர்கா மலைகளின் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகிறது. இதன் வடிநிலப்பரப்பு சுமார் 16019 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 77% தமிழ்நாட்டில் உள்ளது. கிருஷ்ணகிரி , தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக தென்கிழக்கு திசையில் சுமார் 247 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்நதி பாய்கிறது. கெடிலம் மற்றும் பெண்ணையாறு என இரண்டு கிளைகளாக திருக்கோவிலூர் அணைக்கட்டிற்கு அருகில் பிரிகிறது.

கெடிலம் ஆறு கடலூருக்கு அருகிலும் பெண்ணையாறு புதுச்சேரி  யூனியன் பிரதேசத்திற்கு அருகிலும் வங்கக் கடலில் கலக்கின்றன. சின்னாறு, மார்க்கண்ட நதி, வாணியாறு மற்றும் பாம்பன் ஆறு ஆகியன முக்கிய துணை ஆறுகளாகும். இந்த ஆறு உற்பத்தியாகும் இடங்களில் கனமழை காரணமாக திடீர், குறுகியகால வெள்ளப்பெருக்கினை ஏற்படுத்துகிறது. இது தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசன ஆதரமாக உள்ளது. ஆற்றின் குறுக்கே கிருணகிரி மற்றும் சாத்தனூர் நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெண்ணையாறு இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது. மேலும் தமிழ் மாதமான தை மாதத்தில் இந்த ஆற்றுப் பகுதியில் (ஜனவரி பிப்ரவரி) பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

 

Rivers in Tamil nadu: Vaigai (வைகை):

vaigai
vaigai

வைகையாறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருசநாட்டு குன்றுகளின் கிழக்குச் சரிவில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலம் சுமார் 7,714 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது.

இப்பரப்பளவு முழுவதும் தமிழகத்தில் அமைந்துள்ளது. இது மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்கிறது. இதன் மொத்த நீளம் சுமார் 258 கிலோ மீட்டராகும். இவ்வாற்றின் நீரானது இராமநாதபுரத்தின் பெரிய ஏரி மற்றும் பல சிறிய ஏரிகளில் நிரப்பப்பட்டு பின் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீரானது இராமநாதபுரம் அருகில் உள்ள பாக் நீர்ச்சந்தியில் கலக்கிறது.

 

Rivers in Tamil nadu: Thamirabarani (தாமிரபரணி):

Thamirabarani
Thamirabarani

தாமிரபரணி எனும் பெயர் தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடைகள்) என்பதிலிருந்து பெறப்பட்டது. இவ்வாறுகளில் கரைந்திருக்கும் செம்மண் துகள்கள் காரணமாக இந்நதியின் நீரானது செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.

தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது. இவ்வாற்றின் தோற்றம் அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. காரையாறு. சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி,பச்யைாறு,சிற்றாறு மற்றும் இராமநதி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

 

READ MORE: The Delhi Sultanate

Rivers in Tamil nadu: Major waterfalls (முக்கிய நீர்வீழ்ச்சிகள்):

Major waterfalls
Major waterfalls
மாவட்டங்கள் நீர்வீழ்ச்சிகள்
தர்மபுரி ஒகேனக்கல்
திருநெல்வேலி கல்யாண தீர்த்தம் மற்றும் குற்றாலம்
தேனி கும்பக்கரை மற்றும் சுருளி
நாமக்கல் ஆகாய கங்கை
நீலகிரி கேத்தரின், பைக்காரா
சேலம் கிள்ளியூர்
விருதுநகர் ஐயனார்
கோயம்புத்தூர் வைதேகி, செங்குபதி, சிறுவாணி மற்றும் கோவை குற்றாலம்
திருப்பூர் திருமூர்த்தி
மதுரை குட்லாடம்பட்டி
கன்னியாகுமரி திருப்பரப்பு, காளிகேசம், உலக்கை மற்றும் வட்டப்பாறை

 

 

Rivers in Tamil nadu: conclusion (முடிவுரை):

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகளை பற்றி நன்கு தெரிந்து கொண்டோம்.

ஆறுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் எங்கு கலக்கின்றன என்பதையும் அறிந்துள்ளோம். இக்கட்டுரை TNPSC GROUP 2 & 2A, GROUP 4  க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அல்லது 4 வினாக்கள் கேட்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை  உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

 

*****************************************************

Use Coupon code: DIWALI(75% OFFER)+ DOUBLE VALIDITY OFFER

TNPSC GROUP 4 SUCCESS GUIDE LIVE CLASSES
TNPSC GROUP 4 SUCCESS GUIDE LIVE CLASSES

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group