Tamil govt jobs   »   Study Materials   »   Tamil Nadu Legislative Assembly

Tamil Nadu Legislative Assembly | தமிழ்நாடு சட்டப் பேரவை

Tamil Nadu Legislative Assembly : மாநிலச் சட்டப் பேரவை என்பது இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் அரசுகளுக்கு சட்டமியற்றும் இடமாக செயல்படுகின்றது. இந்த பேரவை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இம்மன்றத்தில் பங்கு பெறுவர். இந்த மன்றத்தின் தலைவராக சட்டப் பேரவைத் தலைவர் செயல்படுவார். இந்திய அரசியலமைப்பின் படி இதன் அதிகப்பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை, 500 க்கு மிகாமலும், குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 க்கு குறையாமல் அமைய வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பெற்ற சிறப்பு விதியின் கீழ் கோவா, சிக்கிம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 60 உறுப்பினர்களுக்கு குறைந்தும் செயல்படுகின்றன. Tamil Nadu Legislative Assembly தொடர்பான தகவல்களை, நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

Indian Constitution and the State Legislative Assembly

சட்ட மன்றத்தின் கீழ் அவையான மாநில சட்டப் பேரவை, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் அரசுகளுக்கு சட்டமியற்றும் இடமாக செயல்படுகின்றது.

இந்த பேரவை ஆனது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இம் மன்றத்தில் பங்கு பெறுவர்.

Members

இந்த மன்றத்தின் தலைவராக சட்டப் பேரவைத் தலைவர் செயல்படுவார். இந்திய அரசியலமைப்பின் படி, இதன் அதிகப்பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 500 க்கு மிகாமலும், குறைந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 க்கு குறையாமலும் அமைய வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பெற்ற சிறப்பு விதியின் கீழ் கோவா, சிக்கிம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 60 உறுப்பினர்களுக்கு குறைந்தும் செயல்படுகின்றன.

The Two houses of the State Legislative Assembly

இந்திய அரசியலமைப்பு அத்தியாயம் மூன்று, சரத்து 168 (2) ல் மாநில சட்டமன்றத்தை பற்றி கூறப்பட்டவைகள்: ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால், ஒன்றைச் சட்ட மேலவை என்றும் மற்றொன்றை சட்ட மன்றம் என்றும் அழைக்க வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில், அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Opponent Party

பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெற, இரண்டு முக்கிய விதிகள் உள்ளன. முதலாவதாக, ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கவேண்டும். அடுத்ததாக குறைந்தது 24 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கவேண்டும். இவை இரண்டையும் பெற்றிருக்கும் கட்சி பிரதான எதிர் கட்சியாக கருதப்படும். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சருக்குரிய தகுதியைப் பெறுவார்.

Download Now : 2021 Men’s FIH Hockey Junior World Cup Top 50 Questions

Member Nominated by the Governor

இவ்வுறுப்பினர்களில் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆங்கிலோ இந்திய சமுதாயத்திலிருந்து ஒரு நியமன உறுப்பினரும் நியமிக்கப்படுவார். இது மரபுப்படி நியமிக்கப்பெற்று பின்பற்றப்படுகின்றது. இவ்வுறுப்பினர் விவாதங்களிலோ, மன்ற வாக்களிப்புகளிலோ பங்குபெறுவதில்லை.

Term of the Assembly

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும், ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற பணியாற்ற கடமைப்பட்டவர்கள். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர், இவ்வுறுப்பினர்களின் இருக்கைகள் வெறுமையாக்கப் (காலியாக) பெற்று, மீண்டும் மாநில பொதுத் தேர்தல் நடத்தப்பெறும். இப் பேரவை உறுப்பினர்களில், அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியே மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதியுடையது ஆகும்.

Dissolution of the Assembly

அவசர காலப் பிரகடனத்தின் போது, இப் பேரவை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் பதவி வகிக்க அனுமதிக்கப் படுவர் அல்லது மன்றமும் கலைக்கப்படலாம். இப் பேரவையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுக்கெதிராக நம்பிக்கயில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சமயத்தில், அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், இப் பேரவை கலைக்கப்படும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அம் மாநில அரசு கலைக்கப்பட்டதாக பொருள் கொள்ளப்படும்.

Also Read: Temples in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

Tamil Nadu Legislative Assembly

தமிழ்நாடு சட்டப் பேரவை என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது.

இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில், தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப் பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது. தொடக்கத்தில் இது கீழவை மற்றும் மேலவை என்று ஈரவைகளாக செயல்பட்டது. 1986 இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரனால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். தற்போது உள்ளது 16வது சட்டப் பேரவை ஆகும்.

Also Read: Tamil Nadu Council of Ministers | தமிழக அமைச்சரவை

Tamil Nadu Legislative Assembly History and Origin

  • 1861 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு, முதல் கவுன்சில்கள் சட்டத்தை இயற்றியதன் மூலம் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றழைக்கப்பட்ட அவையைத் தோற்றுவித்தது. இந்த அவைக்கு மாகாண ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த அவைக்கு நான்கு இந்திய உறுப்பினர்களை நியமனம் செய்யும் உரிமை சென்னை மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டது. இந்த இந்திய உறுப்பினர்கள், மாகாண நிர்வாகத்தைப் பற்றிக் கேள்விகள் எழுப்பவும், தீர்மானங்களைக் கொண்டு வரவும், மாகாண வரவு செலவு திட்டத்தை ஆராயவும் உரிமை பெற்றிருந்தனர். ஆனால், சட்டங்கள் இயற்றவும், சட்ட மசோதாக்களுக்கு வாக்களிக்கவும் அவர்களால் இயலாது. நடுவண் அரசின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களில், தலையிடும் உரிமையும் அவர்களுக்குக் கிடையாது.
  • சென்னை ஆளுநரே சட்டமன்றத்தின் அவைத் தலைவராக இருந்தார். அவையை எங்கே, எப்பொழுது, எவ்வளவு நாட்கள் கூட்ட வேண்டும், என்ன விஷயங்களை விவாதிக்கலாம் என்பது பற்றி அவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருவரும், சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞரும் அவை விவாதங்களில் பங்கேற்று வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர்.
  • பெரும்பாலும் இந்திய ஜமீந்தார்களும், நிலக்கிழார்களும் தான் இம்முறையின் கீழ் சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுள் காலனிய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களுக்கு பலமுறை பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது.
  • 1861-92 கால கட்டத்தில் சட்டமன்றம் மிகக்குறைவான நாட்களே கூடியது. சில ஆண்டுகளில் (1874, 1892) அவை ஒரு நாள் கூடக் கூட்டப்படவில்லை.
  • சென்னை மாகாண ஆளுநர்கள், அவர்கள் கோடை விடுமுறைகளைக் கழிக்கும் உதகமண்டலத்தில் அவையைக் கூட்டுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கம் இந்திய உறுப்பினர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. மிகவும் குறைவான நாட்களே கூடிய சட்டமன்றம், ஒரு சில சட்ட முன்வரைவுகளையும், தீர்மானங்களையும் அவசர அவசரமாக நிறைவேற்றி வந்தது.

Also Read : List of Chief Ministers of Tamil Nadu

Chennai Province

தற்போதைய தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராகக் கருதப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு, இந்திய அரசாணை 1919-இன் படி, சென்னை மாகாண சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. இம் மேலவையின் ஆயுள் மூன்றாண்டுகளாக முடிவு செய்யப்பட்டது. மேலவையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர். அவற்றில் 34 உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்மன்றத்தின் முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ஜனவரி 9, 1921 ல் கூடியது. இதன் துவக்க விழா இங்கிலாந்து கோமகன் கனாட் (இங்கிலாந்து அரசரின் தந்தைவழி உறவான) அவர்களால், அப்பொழுதைய ஆளுநர் வெல்லிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் துவக்கிவைக்கப்பட்டது.

இந்திய அரசாணை 1935 இன் படி, சென்னை மாகாண சட்டம் ஆக்க அவை, ஈரவைகளாக (முறையே சட்டமேலவை மற்றும் சட்டப் பேரவை) அமைக்கப்பட்டது. சட்டப் பேரவைக்கு 215 உறுப்பினர்களும், சட்ட மேலவைக்கு 56 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சட்டமன்றம், முறையே , 1957-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கூட்டப்பட்டது. சட்ட மேலவையானது, காலாவதியாகாமல் மூன்றாண்டு காலத்திற்கு ஒரு முறை உறுப்பினர்கள் ஒய்வு பெறுமாறு அமைக்கப்பட்டது. அவ்வாறு ஒய்வு பெரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்குமாறு முறைபடுத்தப்பட்டது.

The Two Houses of the Tamil Nadu Legislative Assembly

  • சட்டப் பேரவை அல்லது சட்டமன்ற கீழவை

இந்திய அரசு ஆணை 1935 இன் படி, இந்த மன்றம் இரு அவைகளாகப் பிரிக்கப்பட்டு, கூட்டு மன்றமாக அழைக்கப்பட்டது. கூட்டுப் பேரவையில் 375 உறுப்பினர்களை கொண்டதாக அமைந்திருந்தது. அதில் 125 உறுப்பினர்கள் மாநில ஆட்சியாளர்களால் (மறைமுகத் தேர்வு) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். இம் மன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

  • சட்டமன்ற மேலவை அல்லது சட்ட மேலவை

சட்ட மேலவை (மாநிலங்களவை) என்பது ஒரு நிரந்தர மன்றம் ஆகும். இந்த அவையின் மொத்த உறுப்பினர்களாக 260 பேரும், அதில் 104 பேர் நேரடியாக இந்திய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர், 6 பேர் தலைமை ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) ஆல் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • அதிகாரங்கள்
    இரு அவைகளும் சம அதிகாரம், சம ஆற்றல் கொண்டவை. ஆனால் நிதி, வழங்கல் போன்ற மசோதாக்கள் சட்டமன்றத்திலேயே (கீழ் அவை) நடைபெறும்.

Also Read: Government of Tamil Nadu | தமிழ்நாடு அரசு

Location of the Tamil Nadu Legislative Assembly

Location of the Tamil Nadu Legislative Assembly
Location of the Tamil Nadu Legislative Assembly

தமிழ்நாடு சட்டமன்றம் புனித ஜார்ஜ் கோட்டை, சென்னையில் தற்போது உள்ளது. 1921-37 போது, சட்டமன்றத்தின் முன்னோடி சபை, கோட்டைக்குள் இருக்கும் சபை அறையில் கூடியது. அண்ணா சாலை, அரசு எஸ்டேட் வளாகத்தில் உள்ள சட்டசபை செனட் ஹவுசில் 14 ஜூலை, 1937 – 21 டிசம்பர் 1938 வரையும், ஜனவரி 27, 1938 -26 அக்டோபர் 1939 காலகட்டத்தில் விருந்து மண்டபத்திலும் (பின்னர் ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றம் பெற்றது) கூடியது. 1946-52 போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் கூடியது. 1952ல், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆன பின், அரசாங்கத்தின் எஸ்டேட் வளாகத்தில் உள்ள தற்காலிக இடத்திற்கு நகர்த்தப்பட்டது. அப்போதைய சட்டமன்ற கட்டிடம், 260 பேர் மட்டுமே அமரும் படி இருந்ததால், மார்ச் 1952 ல் இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. பின்னர் 3 மே 1952 அன்று, அதே வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்திற்கு நகர்ந்தது. இப்புதிய கட்டிடத்தில் (பின்னர் “கலைவாணர் அரங்கம்,” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கட்டிடம்) 1952-56 இல் செயல்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டமன்றத்தின் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. அதனால், சட்டமன்றம் 1956ல் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது. 2004 இல், 12வது சட்டமன்றத் தொடரின் போது, ஜே. ஜெயலலிதாவின் அதிமுக அரசு முதலில் ராணி மேரி கல்லூரிக்கும், பின்னர் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கும் சட்டமன்றத்தை மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. 13 வது சட்டமன்றத் தொடரின் போது, மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் சட்டமன்ற மற்றும் அரசு தலைமைச் செயலகத்தை மாற்ற ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்தது. 2007 இல், ஜெர்மன் கட்டடக்கலை நிறுவனம் ஜிஎம்பி இண்டெர்நேசனல் புதிய சட்டமன்ற வளாகத்தை வடிவமைத்துக் கட்டும் ஒப்பந்தத்தை வென்றது; கட்டுமானம் 2008 ல் தொடங்கி 2010 ல் முடிக்கப்பட்டது. மார்ச் 2010 இல் புதிய கட்டிடம் துவக்கப்பட்டு செயல்பாட்டை தொடங்கியது. 2011 தேர்தலில், அதிமுக வெற்றி பெற்றதால், சட்டசபை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கூடியது.

Also Read: Tamil Nadu Dance Forms | தமிழர்களின் நடனக்கலை

Tamil Nadu Legislative Assembly Elections

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஆகும்.

1952, 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள், சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்கள் என்று பெயரில் அழைக்கப்பட்டன.

தேர்தல் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சியில் அமர்ந்த முதலமைச்சர்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 இந்திய தேசிய காங்கிரசு இராசகோபாலாச்சாரி
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957 இந்திய தேசிய காங்கிரசு காமராசர்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 இந்திய தேசிய காங்கிரசு காமராசர்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 திராவிட முன்னேற்றக் கழகம் கா. ந. அண்ணாதுரை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 திராவிட முன்னேற்றக் கழகம் மு.க. ஸ்டாலின்

 

*****************************************************

Coupon code- WIN10-10% OFFER

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group