Tamil govt jobs   »   Study Materials   »   Tamil Nadu Governor | தமிழக ஆளுநர்

List of governors of Tamil Nadu | தமிழக ஆளுநர்

Get all information about the latest Tamil Nadu governor name list 2022, the current governor of Tamil Nadu, ex-governor of Tamilnadu, power of governor in tamil.

List of governors of Tamil Nadu

Tamil Nadu Governor: ஆளுநர் என்றால் ஆட்சி செய்பவர் என்ற பொருள் ஆகும். ஆளுநர் என்ற சொல் gouverneur என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லிலிருந்து பிறந்த கவர்னர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். பொதுவாக ஆளுநர் என்பவர், இறையாண்மைக்கு உட்படாத அரசு ஒன்றின், அரசுத்தலைவருக்குக் கீழ் செயல்படும் நிருவாக அதிகாரி ஆவார். கூட்டமைப்பு அரசொன்றில், ஆளுநர் ஒருவர் அரசினால் நியமிக்கப்படலாம் அல்லது மக்களால் அல்லது அரசு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆளுநர், ஆளுநரின் அதிகாரங்கள், Tamil Nadu Governor தொடர்பான விவரங்களை நாம் இந்த கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

 

Read More: Tamil Nadu

List of Tamil Nadu Governors

மதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969 அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மத்திய அரசின் வரையறையின் படி, இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையே பெற்றுள்ளனர். ஆனால், ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை, தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள், ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Sl. No. Name Start Date End Date President
1 சர்தார் உஜ்ஜல் சிங் 14 ஜனவரி 1969 27 மே 1971 சாகீர் உசேன்
2 (கே. கே. ஷா) 27 மே 1971 16 ஜூன் 1976 வி. வி. கிரி
3 மோகன் லால் சுகாதியா 16 ஜூன் 1976 08 ஏப்ரல் 1977 பக்ருதின் அலி அகமது
_ பி. கோவிந்தன் நாயர் (தற்காலிகம்) 09 ஏப்ரல் 1977 27 ஏப்ரல் 1977 பசப்பா தனப்பா ஜாட்டி
4 பிரபுதாஸ் பட்வாரி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1980
_ எம். எம். இஸ்மாயில் (தற்காலிகம்) 27 அக்டோபர் 1980 04 நவம்பர் 1980 நீலம் சஞ்சீவ ரெட்டி
5 சாதிக் அலி 04 நவம்பர் 1980 03 செப்டம்பர் 1982
6 சுந்தர் லால் குரானா (எஸ். எல். குரானா) 03 செப்டம்பர் 1982 17 பெப்ரவரி 1988 ஜெயில் சிங்
7 பி. சி. அலெக்சாண்டர் 17 பெப்ரவரி 1988 24 மே 1990 ரா. வெங்கட்ராமன்
8 சுர்ஜித் சிங் பர்னாலா 24 மே 1990 15 பெப்ரவரி 1991
9 பீஷ்ம நாராயண் சிங் 15 பெப்ரவரி 1991 31 மே 1993
10 எம். சென்னா ரெட்டி 31 மே 1993 02 டிசம்பர் 1996 சங்கர் தயாள் சர்மா
_ கிரிஷன் காந்த் (தற்காலிகம்) 02 டிசம்பர் 1996 25 ஜனவரி 1997
11 எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 1997 03 ஜூலை 2001
_ சி. ரங்கராஜன் (தற்காலிகம்) 03 ஜூலை 2001 18 ஜனவரி 2002 கே. ஆர். நாராயணன்
12 பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 2002 03 நவம்பர் 2004 அப்துல் கலாம்
-8 சுர்ஜித் சிங் பர்னாலா 03 நவம்பர் 2004 31 ஆகஸ்ட் 2011
13 கொனியேட்டி ரோசையா 31 ஆகத்து 2011 30 ஆகத்து 2016 பிரதிபா பாட்டில்
_ சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு ) 02 செப்டம்பர் 2016 06 அக்டோபர் 2017 பிரணாப் முகர்ஜி
14 பன்வாரிலால் புரோகித் 06 அக்டோபர் 2017 17 செப்டம்பர் 2021 ராம்நாத் கோவிந்த்
15 ஆர். என். ரவி 18 செப்டம்பர் 2021 தற்போது பதவியில்

Articles Related to the Governor

  • 152 முதல் 162 வரையிலான அரசியலமைப்பு சரத்துகள் ஆளுநரை பற்றிய தகவல்களை வழங்குகின்றன.
  • அரசியலமைப்பு சரத்து 153 இன் படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒரு ஆளுனர் இருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொறுப்பாக ஒரே ஆளுநர் இருப்பதைப் பற்றி, இந்த சரத்து எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
  • அரசியலமைப்பு சரத்து 153 இன் படி, ஆளுநர் இடத்தில் நிர்வாக அதிகாரம் உள்ளது. அதாவது, நேரடியாகவோ அல்லது துணை அதிகாரிகள் மூலமாகவோ நிர்வாக கடமையை மேற்கொள்ளலாம். மேலும், அரசியலமைப்பு சரத்து 155 இன் படி, குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகின்றார்.
  • அரசியலமைப்பு சரத்து 156 இன் படி, குடியரசுத் தலைவரின் மகிழ்ச்சியின் போது மட்டுமே, ஆளுநர் பணியில் தொடர முடியும். மேலும், ஆளுநருக்கும் பணியில் தொடர விருப்பம் இல்லை என்றால் குடியரசுத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்கலாம். ஆளுநர் பதவியில் அமர்ந்த நாளிலிருந்து 5 வருடங்கள் பணியில் தொடர முடியும். மேலும், அவருடைய பணி காலம் முடிந்த பின்பும், புதிய ஆளுநர், பதவி ஏற்கும் வரை பதவியில் தொடரலாம்.
  • அரசியலமைப்பு சரத்து 157 ஆனது ஆளுநர் ஆவதற்கான தகுதிகளை கூறுகின்றது. ஒரு ஆளுநர் ஆனவர், குறிப்பாக இந்திய குடிமகனாகவும், 35 வயதை நிறைவு செய்தவர் ஆகவும் இருக்க வேண்டும்.
  • அரசியலமைப்பு சரத்து 158 இன் படி, ஆளுநர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அல்லது மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், ஆளுநராக பதவி ஏற்ற நாளில் இருந்து, அந்த உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும். மேலும், ஆளுநர் எந்த ஒரு ஆதாயம் தரும் பதவிகளையும் வகிக்கக்கூடாது.
  • அவருக்கான ஊதியம் மற்றும் சலுகைகள் பாராளுமன்ற சட்டத்தால் நிர்ணயிக்கப்படும். இவை குறித்த குறிப்புகள், அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றது. ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது, ஊதியமும் படிகளும் எந்த விகிதத்தில் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை, குடியரசுத் தலைவர் நிர்ணயம் செய்வார்.
  • அரசியலமைப்பு சரத்து 159 இன் படி, ஆளுநர் பதவி பிரமாணம் மேற்கொள்ள வேண்டும்.
  • அரசியலமைப்பு சட்ட விதி 161 இன் படி, மாநில ஆளுநர் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும், தண்டனையை குறைக்கவும் அதிகாரத்தினை பெற்றிருக்கின்றார். எனினும், மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.

Read More: TRB Exam Date 2021 – TN TRB தேர்வு தேதி (Updated)

Powers of Governor

  • பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.
  • முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.
    அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது.
  • மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது.
  • சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது.
  • சட்டசபையை கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயின்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம் முடிவை எடுக்கமுடியாது.)
  • மாநில அரசு கொண்டுவரும் எந்தவொரு சட்டமுன்வரைவும் அல்லது சட்ட மசோதாவும், ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகே சட்டமாகும். இதுவும் கூட, ஒரு மரபுசார்ந்த அதிகாரமே, ஆளுநர் பண மசோதாவைத்தவிர வேறெந்த சட்ட மசோதாவையும் சட்டசபையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பலாம். ஆனாலும், சட்டசபை மீண்டும் அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினால், இரண்டாவது முறை ஆளுநர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். ஆனாலும், ஆளுநர் தன் விருப்புரிமையின் அடிப்படையில், ஒரு மசோதாவுக்கான ஒப்புதலை வழங்காமல், அம் மசோதாவை நாட்டின் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம்.
  • எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், தன் விருப்புரிமையின் அடிப்படையில் மாநில முதலமைச்சரை தேர்ந்தெடுக்கலாம்.
  • ஆளுநர் அவசரகாலத்தில் மாநில அமைச்சர்கள், முதலமைச்சரின் அறிவுரைகளை மீறி முடிவெடுக்கலாம். அவசரகாலத்தில் ஆளுநரே, அம்மாநிலத்தை ஆளும் பொறுப்பை வகிப்பார். மேலும் அவர் குடியரசுத்தலைவரின் உத்தரவை மாநிலத்தில் செயற்படுத்தும் ஒரு முகவர் போல அக்காலங்களில் செயல்படுவார்.
  • ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர் ஆவார்.

The Current Governor of Tamil Nadu

தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர், தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக, அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் ஆவார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக– மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே, ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.

தமிழ்நாடு மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு ஆர். என். ரவி பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.

Check Now: Principal Commissioner of Customs Notification Out for 07 Vacancy

The Current Governor of Tamil Nadu R.N.Ravi

The Current Governor of Tamil Nadu R.N.Ravi
The Current Governor of Tamil Nadu R.N.Ravi
  • தமிழ்நாட்டின் தற்போதய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும், நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். இதற்கு முன்பு, அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
  • பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
  • அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.
  • மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
  • அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். அந்த பணியின்போது, தெற்காசியாவில் மனிதர்களின் பூர்விக குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார். எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை, அவர் காவல் நோக்கில் ஆராய்ந்து அரசு பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார்.
  • இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
  • 2012 இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நாளிதழ்களில், தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
  • பின்னர் அவர், பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராகவும், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.
  • 2014 ஆம் ஆண்டின் மத்தியில், நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.
  • அதைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், அவர் தமிழக ஆளுநராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

Governors of India

இந்தியத் தலைமை ஆளுநர் 1858 முதல் 1947 வரை விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில், பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும், அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர், இந்திய அரசின் சார்பாளராகவும், பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப் பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர், பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம், 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர், இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார்.

Read More: RRB Group D 2021 Exam Dates Out

Join Now: TARGET RRB GROUP-D Batch | TAMIL | Live Classes By Adda247

Governors of States

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 153 இன் படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒரு ஆளுநர் இருப்பார். இந்த சரத்து, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, மத்திய அரசு எடுக்கும் முடிவின் படி, இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே, அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK - INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION -MEGAPACK – INCLUDES- TNPSC-GROUP-2/2A,GROUP-4 (Validity 12 Months)

Check TNPSC Live Classes and Test Series in ADDA247

List of Tamil Nadu Governors

மதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969 அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மத்திய அரசின் வரையறையின் படி, இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையே பெற்றுள்ளனர். ஆனால், ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை, தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள், ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Now: Bank of Baroda (BOB) Recruitment 2021

Tamil Nadu Governors Records

  • ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே, இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் மற்றும் அதிக நாட்கள் பதவி வகித்தவர்- மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் ஆகஸ்ட் 31 2011 வரை.
  • தமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவர் எம்.எம். இஸ்மாயில் என்பவர். தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த இவர், பதவி வகித்த காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980 – நவம்பர் 4, 1980).

Tamil Nadu Governors Conclusion

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

 

இது போன்ற தேர்வுகள் குறித்த தகவல்களுக்கு ADDA247 பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: WIN10(10% offer)

TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247
TNPSC -Group -2 /2A | Tamil Live | By ADDA247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group