Tamil govt jobs   »   TNPSC Tamil Language Compulsory Paper   »   TNPSC Tamil Language Compulsory Paper

TNPSC Tamil Language Compulsory Paper: New Exam pattern| TNPSC : தமிழ்மொழி தேர்வு கட்டாயம் :புதிய தேர்வு முறை

TNPSC தமிழ்மொழி தேர்வு கட்டாயம்: ஆண்டு தோறும் TNPSC ஆல் நடத்தப்படும் முக்கிய தேர்வுகளில் ஒன்று குரூப் 4. தேர்வின் கடினத்தன்மை, தேர்வின் முறை (ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும்), ஊதியம், அரசு வேலை என்கிற அங்கீகாரம் இவையே இதை அதிக மக்கள் விரும்பும் காரணிகள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது முக்கியமான சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. TNPSC Tamil Language Compulsory Paper குறித்த பல்வேறு தகவல்களை பின்வருமாறு காணலாம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Tamil Language Compulsory Paper |TNPSC தமிழ்மொழி தேர்வு கட்டாயம் (முன்னோட்டம்)

அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் (டிசம்பர் 3, 2021) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இனி தமிழ் மொழி தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பாடத் திட்டங்கள், விதிகள், ஒவ்வொரு தேர்வுக்குமான நெறிமுறைகள் உள்ளிட்டவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினைப் பொருத்த வரையில், கட்டாயத் தமிழ் மொழித் தேர்வு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் பின்வரும் வழிவகைகளில் நடத்தப்படும்

• தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
• தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
• மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் / தாட்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

READ MORE: TN NHM Recruitment 2021 

 

TNPSC Tamil Language Compulsory Paper Group 1,1A,1B,1C, Group2/2A Pattern| TNPSC தமிழ்மொழி தேர்வு கட்டாயம் (குரூப் 1,1A,1B,1C, 2/2A தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்)

• தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற முதனிலை (Preliminary Examination) மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Examination) என இரண்டு நிலைகளைக் (Two stages of Examination) கொண்டதாக உள்ள தொகுதி I,IA,IB,IC, II மற்றும் IIA ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித் தேர்வானது. முதன்மைத் தேர்வுடன் (Main Written Examination) விரிந்துரைக்கும் வகையிலான (Descriptive Type) தேர்வாக அமைக்கப்படும்.
• மேற்படி முதன்மை எழுத்துத் தேர்வானது, மொழிபெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது) மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகள் கொண்டதாக நடத்தப்படும்.

TNPSC Tamil Language Compulsory Paper: New Exam pattern| TNPSC : தமிழ்மொழி தேர்வு கட்டாயம் :புதிய தேர்வு முறை_30.1
New exam pattern group 1, group 2/2a exam

• இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் (Qualifying Paper) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying marks) பெற்றால் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வின் (Main Written Examination) இதர போட்டித் தேர்வுத்தாள் / தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

READ MORE: RRB NTPC CBT 1 Result Release Date

TNPSC Tamil Language Compulsory Paper Group IV,III,VII B,VIII (Single stage Examination) Pattern | TNPSC தமிழ்மொழி தேர்வு கட்டாயம் (ஒரே நிலை கொண்ட  தேர்வுகளின் (குரூப் III மற்றும் IV) நடைமுறைகள் விவரம்)

• தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
• அதாவது, தொகுதி III, IV போன்ற ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளுக்கு, தமிழ்மொழித் தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக (Tamil Eligibility – Cum – Scoring Test) நடத்தப்படும். இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி -அ என கொள்குறி வகையில் (Objective Type)அமைக்கப்படும்.
• பொது அறிவு. திறனறிவு (Aptitude) . மனக்கணக்கு நுண்ணறிவு (Mental Ability) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி – ஆ என கொள்குறி வகையில் (Objective Type) நடத்தப்படும்.
• பகுதி அ- வில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே பகுதி ஆ- வில் எழுதிய தேர்வுத்தாளும்/ இதர தாட்களும் மதிப்பீடு செய்யப்படும்.
• இவ்விரண்டு பகுதிகளின் (பகுதி அ மற்றும் ஆ) அனைத்துத் தாட்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

READ MORE:SSC CGL Marks 2021 Out

TNPSC Tamil Language Compulsory Paper Forest apprentice, E.O Grade I (Single stage Examination) Pattern| TNPSC தமிழ்மொழி தேர்வு கட்டாயம் வனப் பயிற்சியாளர், E.O கிரேடு I போட்டித் தேர்வுகளின் நடைமுறைகள் விவரம்)

• தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள நேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
• மேற்படி, தமிழ்மொழி தேர்வானது, பகுதி – அ என கொள்குறி வகையில் (Objective Type) 150 மதிப்பெண்களுக்கு தகுதித்தேர்வாக மட்டுமே நடத்தப்படும். தரவரிசைக்கு இம்மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படாது.
• இத்தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே, பகுதி ஆ மற்றும் இதர போட்டித் தேர்வுத்தாள்/தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

TNPSC Tamil Language Compulsory Paper: New Exam pattern| TNPSC : தமிழ்மொழி தேர்வு கட்டாயம் :புதிய தேர்வு முறை_40.1
New exam pattern group IV, III, FOREST APPRENTICE E.O GRADE I exam

READ MORE: Assistant Director Of Industries And Commerce  & Assistant Superintendent In The Department Of MSME Oral Test

TNPSC தமிழ்மொழி தேர்வு கட்டாயம் (முடிவுரை)

இவ்வாறு பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்த விவரம் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் (டிசம்பர் 3, 2021) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படி தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ADDA 247 மூலம் இன் அனைத்து வித தகவல்களும் உடனுக்குடன் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். எனவே ADDA 247 உடன் எப்பொழுதும் இணைந்திருங்கள்.

TNPSC Tamil Language Exam Compulsory: FAQs

Q1. Is Tamil compulsory for TNPSC exams?
Ans: The State Government on Friday issued a G.O. makes the Tamil paper compulsory in the TNPSC and Teachers Recruitment Board examinations.

Q2. How many group exams are there in TNPSC?
Ans:  Tamil Nadu Public Service Commission (TNPSC) recruits for Group 1,2,3,4 services of the state government. TNPSC Group 1, Group 2, and other exams are called TNPSC exams.

Q3. What is the full form of TNPSC?
Ans: The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu that is responsible for governing the recruitment of personnel into the state’s public service. TNPSC operates under Articles 315 to 323 of Part XIV of the Constitution of India.

Q4. When will the TNPSC exam notification start?
Ans: The TNPSC Group 4 notification 2021 is expected to be released in September 2021 and online application process commence from September 2021 to October 2021. The TNPSC group 4 exam will be conducted in December 2021.

 

இது போன்ற தேர்விற்கு பயன்படும் கட்டுரைகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

*****************************************************

Use Coupon code: WIN10 (10% offer)

TNPSC Tamil Language Compulsory Paper: New Exam pattern| TNPSC : தமிழ்மொழி தேர்வு கட்டாயம் :புதிய தேர்வு முறை_50.1
ADDA247 TAMILNADU TNEB ASSESSOR LIVE CLASS STARTED NOV 29 2021

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

FAQs

Q1. Is Tamil compulsory for TNPSC exams?

Ans: The State Government on Friday issued a G.O. makes the Tamil paper compulsory in the TNPSC and Teachers Recruitment Board examinations.

Q2. How many group exams are there in TNPSC?

Ans: Tamil Nadu Public Service Commission (TNPSC) recruits for Group 1,2,3,4 services of the state government. TNPSC Group 1, Group 2, and other exams are called TNPSC exams.

Q3. What is the full form of TNPSC?

Ans: The Tamil Nadu Public Service Commission (TNPSC) is a department of the government of Tamil Nadu that is responsible for governing the recruitment of personnel into the state's public service. TNPSC operates under Articles 315 to 323 of Part XIV of the Constitution of India.

Q4. When will the TNPSC exam notification start?

Ans: The TNPSC Group 4 notification 2021 is expected to be released in September 2021 and online application process commence from September 2021 to October 2021. The TNPSC group 4 exam will be conducted in December 2021.