Home   »   TNPSC Group 4 Exam 2022   »   TNPSC Group 4 Exam 2022

TNPSC Group 4 Exam Date 2022 [Out] | TNPSC குரூப் 4 2022க்கான தேர்வு தேதி வெளியானது

TNPSC Group 4 Exam Date 2022: Every Year TNPSC (Tamil Nadu Public Services Commission) conducts TNPSC Group 4 Exams for the recruitment Of personnel into the state’s public service. On this page, you will get information about TNPSC Group 4 Exam Date 2022, with additional information like TNPSC Group 4 Exam Admit Card, Exam Pattern, TNPSC Group 4 Exam Syllabus, Answer Key, Result, Etc.

TNPSC Group 4 Events 2022 Gr-IV Exam Dates (Tentative)
TNPSC Group 4 Notification Release Date March 2022
Online Registration Starts from 2nd Week of March 2022
TNPSC Group 4 Exam Date June 2022
TNPSC Group 4 Result Date August 2022

TNPSC Group 4 Exam 2022

அரசு  பதவிகளில்  தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- 4) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு மாநிலத்தில் நடத்துகிறது. இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் தேர்வு. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் TNPSC ஆல் வெளியிடப்படவில்லை. இப்போது நிலைமை சற்று சீரடைந்து வருவதால் விரைவில் அறிவிப்பு வரவிருக்கிறது. இது எளிய முறையில் அரசு வேலை வாங்க நினைப்போருக்கும், பட்டப்படிப்பு முடிக்க இயலாதவர்களுக்கு அரசு பணியில் சேர உதவும் அறிய வாய்ப்பு. பின்வரும் பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த கட்டுரையில் நாம் TNPSC GROUP 4 தேர்விற்கான TNPSC Group 4 Exam Date 2022QUALIFICATIONS, APPLICATION PROCESS, EXAM PATTERN, SYLLABUS, VACANCY, CUT OFF, SALARY என அனைத்தையும் குறித்து பார்ப்போம்.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC Group 4 Exam 2022 Overview

TNPSC Group 4 Exam Date 2022 [Out] | TNPSC குரூப் 4 2022க்கான தேர்வு தேதி வெளியானது_40.1

TNPSC Group 4 Exam Date 2022 [Out] | TNPSC குரூப் 4 2022க்கான தேர்வு தேதி வெளியானது_50.1
TNPSC Group 4 Exam

 

 1. தமிழக அமைச்சரவையில் பணி
 2.  தமிழ்நாடு நீதித்துறை மந்திரி பணி
 3. தமிழ்நாடு கணக்கெடுப்பு மற்றும் நிலப் பதிவு துணைநிலை பணி
 4. தமிழ்நாடு செயலக பணி
 5. தமிழ்நாடு சட்டமன்ற, சட்டசபை பணி
 6. டி.என்.பி.எஸ்.சி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர் , பில் கலெக்டர், கள ஆய்வாளர், வரைவாளர், தட்டச்சு செய்பவர், ஸ்டெனோ-தட்டச்சு (தரம் -3) பதவி

ஆகிய அரசு  பதவிகளில்  தேர்வர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு – 4 (குரூப்- 4) ஐ தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) தமிழ்நாடு மாநிலத்தில் நடத்துகிறது.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNPSC GROUP 4 Exam Date 2022  

புதிய TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2021-22 இன் படி, TNPSC ஆல் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும், அதற்கான எழுத்து தேர்வு july மாதத்திலும் நடைபெறும்.

TNPSC Group 4 Exam Dates
(Tentative)
TNPSC Group 4 Notification 29 March 2022
TNPSC Group 4 Last Date for Application 28 April 2022
TNPSC Group 4 Hall Ticket july 2022
TNPSC Group 4 exam date 2022 24 july 2022
Declaration of TNPSC Group 4 Results Available Soon

TNPSC GROUP 4 EXAM 2022 EXAM PATTERN

TNPSC GROUP 4 EXAM , ஒரு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என இரு நிலைகளை கொண்ட தேர்வாகும். இதில் நீங்கள் பொது அறிவு + பொது ஆங்கிலம் அல்லது பொது அறிவு + பொது தமிழ் என இரண்டு வகையில் ஒன்றை தேர்ந்தெடுத்து பரீட்சை எழுதலாம்.

TNPSC குரூப் 4 தேர்வு மூன்று (3) பிரிவுகளாக இருக்கும். அனைத்து கேள்விகளும் கொள்குறி வினாக்களாக இருக்கும்.

தேர்வு வகை பாடங்கள் கேள்விகளின்

எண்ணிக்கை

மதிப்பெண்கள் குறைந்தபட்ச தகுதி

மதிப்பெண்கள்

காலம்
கொள்குறி வினா (OMR) பொது அறிவு(75 வினாக்கள்) 75 300 90 3 மணி நேரம்
திறனறிவு மற்றும் புத்தி கூர்மை (25 வினாக்கள்) 25
பொது தமிழ்/ பொது ஆங்கிலம் (100 வினாக்கள்) 100
மொத்தம் (200 வினாக்கள்) 200 300
 • பொது அறிவு (75 வினாக்கள் ) + திறனறிவு மற்றும் புத்தி கூர்மை வினாக்கள் (25 வினாக்கள் ) மற்றும் பொது தமிழ் (100 வினாக்கள் )

TNPSC குரூப் 4 தேர்வில் சரியான பதில்களுக்கு தலா 1.5 மதிப்பெண் வழங்கப்படும் தவறான பதில்களுக்கு எந்த மதிப்பெண் குறைப்பும் செய்யப்படாது.

READ MORE: Is Computer Automation Certificate Compulsory For TNPSC Group 4 Exam?

 

TNPSC GROUP 4 EXAM 2022 SYLLABUS 

TNPSC GROUP 4 :பொது அறிவு (GENERAL STUDIES) 

UNIT 1(அலகு 1): பொது அறிவியல் (General Science) 

 • இயற்பியல் (Physics): பேரண்டத்தின் அமைப்பு பொது அறிவியல் விதிகள் – புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் – தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் – இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் – வெப்பம், ஒளி மற்றும் ஒலி.
 • வேதியியல் (Chemistry): தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் – அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் – நுண்ணுயிர் கொல்லிகள்.
 • தாவரவியல் (Botany): வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள் – உயிரினங்களின் பல்வேறு வகைகள் – உணவூட்டம் மற்றும் திட்ட உணவு – சுவாசம்.
 • விலங்கியல் (Zoology): இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி- இனப்பெருக்க மண்டலம் – சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் – மனிதனின் நோய்கள் – பரவும் மற்றும் பரவா நோய்கள் உட்பட – தற்காத்தல் மற்று தீர்வுகள் – விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு.

UNIT II (அலகு II): நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)

 • வரலாறு (History): நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் -தேசியம், தேசிய சின்னங்கள் – மாநிலங்களின் தோற்றம் செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள் – விளையாட்டு மற்றும் போட்டிகள் – நூல்களும் நூலாசிரியர்களும் – விருதுகளும் மற்றும் பட்டங்களும் – இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.
 • அரசியல் அறிவியல் (Political Science): பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் 2. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் 3. பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் 4. சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள், அதன் பயன்பாடுகள்.
 • புவியியல் (Geography): புவி நிலக்குறியீடுகள்.
 • பொருளாதாரம் (Economy): சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள்.
 • அறிவியல் (Science) : அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்.

UNIT III (அலகு III): புவியியல் (Geography)

பூமியும் பேரண்டமும் – சூரிய குடும்பம் – பருவக் காற்று, மழைபொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை நீர்வள ஆதாரங்கள் இந்தியாவிலுள்ள ஆறுகள் மண்வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் காடுகள் மற்றும் வனஉயிர்கள் – – விவசாய முறைகள் – போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்று தகவல் பரிமாற்றம் – சமூக புவியியல் – மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இயற்கை பேரழிவுகள் – பேரிடர் நிர்வாகம்.

UNIT IV (அலகு IV): இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு (History and Culture of India and Tamil Nadu)

சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள் – விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள் – தென் இந்நிய வரலாறு, பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் புராதாணம் – இந்தியா சுதந்திரம் பெற்றது வரை – இந்திய பண்பாட்டின் இயல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை – இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள், இந்தியா மதச் சார்பற்ற நாடு – பகுத்தறிவாளர்களின் எழுச்சி – தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் – அரசியல் கட்சிகள், பிரபலமான திட்டங்கள்.

UNIT V (அலகு V): இந்திய அரசியல் (Indian politics) 

இந்திய அரசியல் அமைப்பு – அரசியல் அமைப்பின் முகவுரை – அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் – மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள் – குடியுரிமை – உரிமைகளும் கடமைகளும் – அடிப்படை உரிமைகள் – அடிப்படை கடமைகள் – மனித உரிமை சாசனம் – இந்தியநாடாளுமன்றம் – பாராளுமன்றம் – மாநில நிர்வாகம் – மாநில சட்ட மன்றம் – சட்ட சபை உள்ளாட்சி அரசு – பஞ்சாயத்து ராஜ் – தமிழ்நாடு இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு – சட்டத்தின் ஆட்சி – தக்க சட்ட முறை தேர்தல்கள் – அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII – பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் லோக் – அதாலத் – முறை மன்ற நடுவர்(Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு தலைவர் (Comptroller and Auditor General) தகவல் அறியும் உரிமை – பெண்கள் – முன்னேற்றம் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.

UNIT VI(அலகு VI): இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்டங்கள் – மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – கிராம நலம் சார்ந்த திட்டங்கள் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் மக்கட் தொகை, கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, வறுமை தமிழகத்தின் பொருளாதார போக்கு.

UNIT VII (அலகு VII): இந்திய தேசிய இயக்கம் (Indian National Movement)

தேசிய மறுமலர்ச்சி – தேசத்தலைவர்களின் எழுச்சி – காந்தி, நேரு, தாகூர் – பல்வேறு போராட்ட முறைகள் – சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி., பெரியார், பாரதியார் மற்றும் பலர்.

UNIT VIII (அலகு VIII): திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள் (APTITUDE & MENTAL ABILITY TESTS)

தகவல்களை விவரங்களாக மாற்றுதல் விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் – பார்வைக்கு உட்படுத்துதல் – அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் -விவர பகுப்பாய்வு விளக்கம் – சுருக்குதல் – சதவிகிதம் – மீப்பெரு பொது(HCF) வகுத்தி மீச்சீறு பொது மடங்கு (LCM) – விகிதம் மற்றும் சரிவிகிதம் – தனிவட்டி – கூட்டுவட்டி – பரப்பளவு – கனஅளவு – நேரம் மற்றும் வேலை – தர்க்க அறிவு – புதிர்கள் – பகடை – கானொளி தர்க்க அறிவு – எண் கணித தர்க்க அறிவு – எண் தொடர்கள்.

Read More: TNPSC குரூப்- 4 புதிய பாடத்திட்டம் | TNPSC GROUP 4 NEW SYLLABUS

TNPSC GROUP 4: பொதுத் தமிழ் (General Tamil) 

பகுதி – (அ) இலக்கணம்

 1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
 2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
 3. பிரித்தெழுதுக
 4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
 5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
 6. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
 7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
 8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல
 9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
 10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
 11. வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்
 12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
 13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
 14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
 15. இலக்கணக் குறிப்பறிதல்
 16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
 17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
 18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
 19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
 20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்

பகுதி – (ஆ) இலக்கியம்

 1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)

அன்பு – பண்பு – கல்வி-கேள்வி-அறிவு -அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.

 1. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
 2. கம்பராமாயணம் – தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
 3. புறநானூறு – அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
 4. சிலப்பதிகாரம்-மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
 5. பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
 6. சிற்றிலக்கியங்கள் :திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
 7. மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகளி
 8. நாட்டுப்புறப்பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
 9. சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

பகுதி –இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

 1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
 2. மரபுக்கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.
 3. புதுக் கவிதை – ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் – தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
 4. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு. நேரு – காந்தி – மு.வ. – அண்ணா – ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
 5. நாடகக்கலை – இசைக்கலை தொடர்பான செய்திகள்
 6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்
 7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
 8. தமிழின் தொன்மை செய்திகள் தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான
 9. உரைநடை – மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.
 10. உவே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
 11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்
 12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
 13. பெரியார் – அண்ணா – முத்துராமலிங்கத் தேவர் – அம்பேத்கர் – காமராசர் – சமுதாயத் தொண்டு.
 14. தமிழகம் ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
 15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்
 16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
 17. தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
 18. தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள் – தொடர்பான செய்திகள்
 19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
 20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர். இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.

TNPSC GROUP 4 EXAM 2022 SALARY

TNPSC GROUP 4 EXAM 2022 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்வோர் பிடித்தம் போக 20,000 ரூபாய் பெறுவர். VAO வாக பணி அமர்த்தப்படும் நபர் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் சென்று வசிக்க நேரிடும். ஆனால் இப்போது பெரும்பாலான நபர்கள் வாரம் 2 அல்லது மூன்று முறை மட்டுமே செல்கின்றனர். அவர்களுக்கும் மாதம் தோறும் பிடித்தம் போக 19000 முதல் 20000 கைக்கு கிடைக்கும் சம்பளம்.

TNPSC GROUP 4 EXAM 2022 VACANCY

TNPSC Group 4 Exam Date 2022 [Out] | TNPSC குரூப் 4 2022க்கான தேர்வு தேதி வெளியானது_60.1

TNPSC GROUP 4 EXAM 2022 தேர்வில் சுமாராக எப்போதும் காலியிடங்கள் 5000 முதல் 10000 வரை நிரப்பப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), புதிய TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2021-22 இன் படி, TNPSC ஆல் நடத்தப்படும் குரூப் 4 தேர்வின் கீழ், முன்பே நிரப்பப்பட இருந்த 5255 காலி பணியிடங்களும், தற்போது காலியாக உள்ள 3000 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE:சென்ற ஆண்டின் விரிவான காலியிடங்கள் பற்றி தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

APPLY ONLINE FOR TNPSC GROUP 4 EXAM 2022

TNPSC GROUP 4 EXAM  விண்ணப்பிக்கும் லிங்க் தேர்வு அறிவிப்பு வெளியானதும் பயன்பாட்டிற்கு வரும். ONE TIME REGISTRATION ID மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்திய வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மறுபடியும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம். உங்களில் விருப்ப பாடம் (ஆங்கிலம் அல்லது தமிழ்), தேர்வு மையம் அனைத்தும் தேர்வு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC GROUP 4 EXAM 2022 ELIGIBILITY CRITERIA

TNPSC GROUP 4 EXAM 2022 இன் தகுதி வரம்பு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல். தமிழ் மொழியில் பயின்றோருக்கு 20% முன்னுரிமை வழங்கப்படும். தட்டச்சர் பதவிகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழில் தட்டச்சு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

READ MORE: ADDA247 TAMIL வாராந்திர தமிழ்நாடு மாநில GK Q&A-PDF PART-20

TNPSC GROUP 4 EXAM 2022 CUT OFF

TNPSC GROUP 4 EXAM 2022 கட் ஆப் என்பது தேர்விற்கான காலியிடங்கள், விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தேர்வு எழுதியவர் எண்ணிக்கை, தேர்வு தாளின் கடினம் இவை எல்லாம் கொண்டு முடிவு செய்யப்படும். கட் ஆப் என்பது வகுப்பு வாரியாக வழங்கப்படும். ஒரே மதிப்பெண் பெற்றிந்தால் பிறந்த தேதி பார்க்கப்படும், கல்வி தகுதி, பிறந்த தேதி என அனைத்திலும் சமமாக இருந்தால் யார் முதலில் விண்ணப்பித்தது என இறுதியாக பார்க்கப்படும்.

BC,OC,MBC- 180 + வினாக்கள்

SC, ST- 175+ வினாக்கள்

BC(M) -170+ வினாக்கள்

**வினாக்களுக்கு சரியான பதில் எழுதி இருக்க வேண்டும்

READ MORE: முந்தைய ஆண்டின் கட் ஆப் குறித்து விரிவாக பார்க்க கிளிக் செய்யவும்

TNPSC GROUP 4 EXAM 2022 ANSWER KEY

TNPSC GROUP 4 EXAM 2022 விடை குறிப்புகள் தேர்வு முடிந்த ஒரு வாரத்தில் www.tnpsc.gov.in  என்ற  அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியாகும். விடை குறிப்பில் தவறு இருந்தால் நீங்கள் சரியான ஆதரங்களுடன் சுட்டி காட்டலாம்.

TNPSC GROUP 4 EXAM 2022 RESULT

TNPSC GROUP 4 EXAM 2022 தேர்வுகள் முடிந்த ஒரு மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் முடிவுகள் வெளியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.

TNPSC GROUP 4 2022 தேர்வு குறித்த உங்களுக்கான அனைத்து சந்தேங்களையும் இந்த கட்டுரை தீர்த்து இருக்கும் என நம்புகிறேன். இன்னும் எதற்கு தாமதம் உங்களின் தேர்விற்கான தயாரிப்பை தொடங்குங்கள். TNPSC குரூப் 4 தேர்விற்கு சீராக பயிற்சித்தால் உங்களுக்கான உறுதியான இடம் ஒன்று உண்டு.

வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

Read In English: TNPSC GROUP 4

இது போன்ற தேர்வு குறித்த பயனுள்ள குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்க

Download the app now, Click here

Use Coupon code: APL15(15% OFF)

TNPSC Group 4 Exam Date 2022 [Out] | TNPSC குரூப் 4 2022க்கான தேர்வு தேதி வெளியானது_70.1

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Congratulations!

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Download your free content now!

We have already received your details.

Please click download to receive Adda247's premium content on your email ID

Incorrect details? Fill the form again here

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF மே 2022

Thank You, Your details have been submitted we will get back to you.