Table of Contents
TNPSC General Tamil Study Material: If you are a candidate who preparing for the TNPSC Group 2 Exams and looking out for TNPSC Group 2 Study Materials or notes for your preparation? Then this article is for you. We are here to provide you some free TNPSC General Tamil Study material. You will get some important TNPSC General tamil Topics in this Article.
இந்த பதிவில்TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும் TNPSC பொதுத்தமிழ் பாடத்தின் பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Fill the Form and Get All The Latest Job Alerts
பாரதியார்
பிறப்பு : 11.12.1882 ; இறப்பு – 11.09.1921
ஊர் : எட்டயபுரம் (தூத்துக்குடி மாவட்டம்)
பெற்றோர் : சின்னசாமி இலக்குமி அம்மையார்
மனைவி : செல்லம்மாள்
இயற்பெயர் : சுப்பிரமணியம் (எ) சுப்பையா
சிறப்புப் பெயர்
- தேசியக்கவி மகாகவி – வ.ரா. (ராமசாமி ஐயங்கார்)
- விடுதலைக்கவி தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- பாட்டுக்கொரு புலவன் பாரதி – கவிமணி நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா –பாரதிதாசன்
புனைப்பெயர்கள்
- காளிதாசன் சக்திதாசன் சாவித்திரி ஓர் உத்தம தேசாபிமானி நித்திய தீரர்.
இயற்றிய நூல்கள்
- முப்பெரும் கவிதை பாடல்கள்: கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்
- உரைநடை இலக்கியம்: ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு, நவதந்திர கதைகள்
- சிறுகதைகள்: சின்ன சங்கரன் கதை, ஆறில் ஒரு பங்கு, ஸ்வர்ணகுமாரி கதை
- பாடல்கள்: சுதந்திரப்பாடல்கள் தேசியப்பாடல்கள் தலைவர் வாழ்த்துக்கள், பக்தி பாடல்கள் சமூகப்பாடல்கள், புதிய ஆத்திசூடி பாப்பா பாட்டு
பத்திரிக்கைப்பணி
1.“விவேக பானூ” – பாரதியின் ‘தனிமை இரக்கம்’ பாடல் முதன் முதலாக இந்நாலேட்டில் வெளிவந்தது.
2.சுதேசமித்திரன் – 1904 – துணையாசிரியராகப் பொறுப்பு – தினசரி இதழ்
ஆசிரியர்பணி
1.சக்ரவர்த்தினி – 1905 இதழைத்தொடங்கினார் (மாத இதழ்)
2.இந்தியா -1907–வாரப்பத்திரிக்கை
3.பாலபாரதம் – 1908 – ஆங்கில இதழ்
4.விஜயா கர்மயோகி – 1909
5.சூரியோதயம் – 1910
மேற்க்கோள் பாடல்கள்
- “தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்”
- “காக்கை குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”
- “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”
- “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
- தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”
- “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா”
- “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
- “ஏழை என்றும் அடிமை என்றும் எவரும் இல்லை சாதியில்”
- “நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்”
- “எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்.”
- “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”
- “செப்புமொழி பதினெட்டு உடையாள் – எனினும் சிந்தனை ஒன்றுடையாள்”
- “தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்”
- “செந்தமிழ் நாடென்னும் போதினிலே”
- “சிந்து நதியின் மிசை…….”
- “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
பாரதிதாசன்
காலம் : 29.04.1891முதல் 21.04.1964
பிறந்த ஊர் : புதுச்சேரி
இயற்பெயர் : கனக சுப்புரத்தினம் (பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப் பெயர் மாற்றி அமைத்துக் கொண்டார்)
பெற்றோர் : கனக சபை – இலக்குமி அம்மாள்
மனைவி : பழனி அம்மையார்
சிறப்புப்பெயர்கள் : பாவேந்தன் புரட்சிக்கவி பாரதிதாசன் தமிழ்க்கவி தமிழரின் கவி தமிழின் மறுமலர்ச்சிக்காகத் தோன்றியக் கவி.
நூல்கள்
- பாரதிதாசன் கவிதைத் தொகுப்பு – 1 2 3
- இசைஅமுது தொகுப்பு – 1 2
- குடும்ப விளக்கு
- அழகின் சிரிப்பு
- பாண்டியன் பரிசு
- இருண்ட வீடு
- சேரதாண்டவம்
- தமிழச்சியின் கத்தி
- மணிமேகலை வெண்பா
- சஞ்சீவி பர்வத்தின் சாரல்
- தமிழியக்கம்
- இசையமுது
- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- திருக்குறள் உரை
- பிசிராந்தையார் நாடகம்
- எதிர்பாராத முத்தம்
- இளைஞர் இலக்கியம்
- படித்த பெண்கள்
- நல்ல தீர்ப்பு
குறிப்புகள்
- 16 வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
- புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது “எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா” என்ற பாடல்.
- 1970ம் ஆண்டு “பிசிராந்தையார்” நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும் ரூ5000 பரிசும் வழங்கப்பட்டது.
- 1946 ஜீலை 29ல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி’ என்று பாராட்டப்பட்டு ரூபாய் 25000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ஆசிரியர் பணி
- 1909 – காரைக்கால் நிரவிப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். புதுவை அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். பாண்டிச்சேரி அரசாங்கத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இவர் இயற்றியதே “வாழ்வினில் செம்மையுறச் செய்பவன் நீயே” என்ற பாடல்.
- இதழ்ப்பணி குடியரசு பகுத்தறிவு போன்ற ஏடுகளில் பாடல் கட்டுரை கதை போன்றவற்றை எழுதினார். ‘குயில்’ என்ற இலக்கிய ஏட்டினை நடத்தி வந்தார். இவரின் கவிதை ‘உருசிய கவிஞர் இரசூல் கம்சதேவ்’ போல் நடை அமையப்பெற்றதாகக் கூறுவர். திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கழைக்கழகம் அமைந்துள்ளது.
மேற்க்கோள் பாடல்கள்
- “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
- “தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்”
- “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு”
- “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை”
- “நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்;”
- “புதியதோர் உலகு செய்வோம்”
- “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்”
- “இருட்டறையில் உள்ளதடா உலகம்”
- “கொலை வாளினை எடடர் கொடியோர் செயல் அறவே”
- “எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்”
- “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே”
- “எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்
- கல்லாரைக் காணும்கால் கல்விநல்காக் கசடர்க்கு தூக்குமரம் அங்கே உண்டாம்”
Read more TNPSC Tamil study materials: எதுகை,மோனை,இயைபு
நாமக்கல் கவிஞர்
காலம் : 1888 – 1972
பிறந்த ஊர் : மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)
இயற்பெயர் : வெ. இராமலிங்கம் பிள்ளை
பெற்றோர் : வெங்கட்ராமன் அம்மணி அம்மாள்
நூல்கள்
- மலைக்கள்ளன் (நாவல்)
- என் கதை (சுயசரிதம்)
- அவனும் அவளும் (காவியம்)
- காணாமல் போன கல்யாணப்பெண்
- பிரார்த்தனை (கவிதை)
- சங்கொலி (கவிதை)
- மாமன் மகள் (நடகம்)
- அரவணை சுந்தரம் (நாடகம்)
- தமிழன் இதயம்
- கவிதாஞ்சலி
- இலக்கிய இன்பம்
- தேமதுரத் தமிழோசை (கவிதை)
- திருக்குறள் புது உரை
- திருக்குறளும் பரிமேலழகரும்
- திருவள்ளுவர் திடுக்கிடுவார்
- கம்பனும் வால்மீகியும்
குறிப்புகள்
மத்திய அரசு அவருக்கு “பத்ம பூஷன்” விருதளித்துப் போற்றியது. தமிழக அரசு கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் அரசவைக் கவிஞராகவும் பின்னர் சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.
மேற்க்கோள் பாடல்கள்
- “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
- “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”
- “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
- “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
- “பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும்.”
- “காந்தியை மறக்காதே – என்றும் சாந்தியை இழக்காதே”
Read more Tamil Nadu districts
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
காலம் : 27.08.1876 – 26.09.1954 (78 வயது)
ஊர் : தேரூர்
பெற்றோர் : சிவதாணு பிள்ளை ஆதிலெட்சுமி
மனைவி பெயர் : உமையம்மாள்
சிறப்புப் பெயர் : கவிமணி தேவி
ஆசிரியர் பணி
தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிக் கல்லூரிப் பேராசிரியராக ஓய்வுப் பெற்றவர்.
நூல்கள்
- ஆசிய ஜோதி – (அர்னால்ட் எழுதிய ‘லைட் ஆப் ஏசியா’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
- மலரும் மாலையும் (கவிதை)
- மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்)
- கதர் பிறந்த கதை
- உமர் கய்யாம் பாடல்கள் (மொழிபெயர்ப்பு நூல்)
- தேவியின் கீர்த்தனங்கள்
- குழந்தைச் செல்வம்
- கவிமணியின் உரைமணிகள்
- கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- காந்தர் சாலை (வரலாற்று நூல்)
- பாரசீக மொழியில் உமர்கய்யாம் பாடிய ருபாயத்தின் மொழிபெயர்;ப்பு எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அதனைத் தழுவி எழுந்தது உமர்கய்யாம் பாடல்கள்.
சிறப்புகள்
- 1940-பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்வேள் உமாமகேசுவரபிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.
- 1943-அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும்பொருள் வழங்க முன் வந்த போது அதை வாங்க மறுத்துவிட்டார்.
- 1954-கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
- 2005-இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
மேற்க்கோள் பாடல்கள்
- “மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா….
- “வெய்யிற் கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு
- கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு….”
- “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி”
- “ஓடும் உதிரத்தில் – வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடி பார்த்தாலும் – சாதி தெரிவதுண்டோ….”
- “உள்ளத்தில் உள்ளது கவிதை – இன்ப ஊற்றெடுப்பது கவிதை தௌளத்தெளிந்த தமிழில் – உண்மை தெளிந்து சொல்வது கவிதை”
- “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா”.
*****************************************************
Coupon code- ME15-15% off on all+ double validity on all megapacks & testpacks

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group