Tamil govt jobs   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வங்கிகளின்...   »   TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வங்கிகளின்...

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் – வங்கிகளின் வகைகள்

இந்தக் கட்டுரையில், TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 மாநிலப் போட்டித் தேர்வுகளான TNUSRB, TRB, TET, TNEB போன்றவற்றுக்கான  முறைகள் இலவசக் குறிப்புகளைப் பெறுவீர்கள்.தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

 

வங்கிகளின் வகைகள்

வணிக வங்கிகள் (Commercial Banks):

    • வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று, பேரளவில் உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும்.
  • நீர்மைத்தன்மையை தக்கவைக்கும் பொருட்டு வணிக வங்கிகள் பெரும்பாலும் நீண்டகால கடன்களை அளிப்பதில்லை.

விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (Agricultural Refinance Development Corporation – ARDC):

  • விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் (ARDC) பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்டது. இது ஜூலை 1, 1963 முதல் செயல்படத் தொடங்கியது.
  • விவசாய கடன்களின் இடைவெளியினைப் போக்கவும், பல்வேறு விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும்விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகத்தின் நோக்கங்கள்: 

  • மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் (Scheduled Banks) போன்ற தகுதி வாய்ந்த அமைப்புகளுக்கு தேவையான மறுநிதியினை வழங்குவது.
  • இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நிலவள வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் பட்டியல் வங்கிகள் வெளியிடும் கடன் பத்திரங்களை வாங்கி அதன் மூலம் நிதியளிப்பினை செய்வது. 

வட்டார ஊரக வங்கிகள் (Regional Rural Banks – RRBs):

  • இவை கிராமின் வங்கிகள் (Gramin Banks) என்றும் அழைக்கப்படுகிறன.
  • மறைந்த பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களின் 20-அம்ச பொருளாதர திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களை தொடர் கடன்சுழலில் (indebtedness) இருந்து விடுவிப்பதாகும்.
  • அக்கால கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதார திட்டத்தினை தொடர்ந்து வட்டார ஊரக வங்கிகள் 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
  • இவைகளுக்கான மூலதனம் 50% மைய அரசாலும், 15% மாநில அரசாலும், 35% நடத்துகின்ற வணிக வங்கிகளாலும் அளிக்கப்பட்டது. 
  • இவ்வங்கிகளின் நோக்கம் விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் (small and marginal farmers), நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் போரக பகுதியில் விவசாயம், வர்த்தகம், தொழில் மற்றும் இதர உற்பத்தி நடடிவக்கைகளை மேம்படுத்துவது ஆகும்.

ரிசர்வ் வங்கி வட்டார ஊரக வங்கிகளுக்கு வழங்கியுள்ள சலுகைகள்:

  • வட்டார ஊரக வங்கிககள் 3 சதவிகித ரொக்க இருப்பினையும், 25 சதவிகித சட்டபூர்வ பணப்புழக்க விகிதத்தையும் வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுகிறது. 
  • நபார்டு வங்கி மூலம் இவைகளுக்கு மறு கடன்களையும் வழங்கி வருகின்றன. 

விவசாய கடனுக்கான நபார்டு வங்கியின் பங்கு (NABARD AND ITS ROLE IN AGRICULTURAL CREDIT):

  • துவக்க காலத்திலிருந்தே மத்திய ரிசர்வ் வங்கி விவசாயக் கடன்கள் வழங்க தனித் துறையை ஏற்படுத்தியது.
  • 1982-ஆம் ஆண்டு ஜுலை மாதம் விவசாயம் மற்றும் ஊரக மேம்பாட்டிற்கான தேசிய வங்கி National Bank for Agriculture and Rural Developrmerit – NABARD) பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி தோற்றுவிக்கப்பட்டது. 
  • விவசாய மறுகடன் மேம்பாட்டு கழகத்தின் பணிகள் முழுமையும், வட்டார ஊரக வங்கிகளின் மறுகடன் பணிகளையும் நபார்டு செய்து வருகிறது.
  • அனைத்து விவசாயக் கடன்களுக்கான தலைமை அமைப்பாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது.
  • நபார்டு வங்கிக்கு மூலதனத்தை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசு ஆகியவை சரிபகுதியாக வழங்கியுள்ளது.
  • நபார்டு வங்கி மேலாண்மையைப் பொறுத்தவரை, இந்திய அரசின் மைய இயக்குநர் குழுவிலிருந்து நபார்டு வங்கியின் இயக்குநர் குழுவுக்கு மூவரைப் பரிந்துரைத்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் நபார்டின் தலைவராக இருப்பார்.

நபார்டு வங்கி வழங்கும் மூன்றடுக்கு கூட்டுறவுக் கடன் முறை:

நபார்டு

மாநில கூட்டுறவு வங்கி

|

மத்திய கூட்டுறவு வங்கி

|

துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்

நபார்டு வங்கியின் பணிகள்: 

  • நபார்டு வங்கி ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து வகையான உற்பத்தி மற்றும் முதலீட்டுக்காக விவசாயம், சிறு தொழில்கள், குடிசை மற்றும் கிராமத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், மற்றும் இதர ஊரக, தொழில் நடவேடிக்கைகளுக்கான மறுகடனை வழங்குகிறது.
  • இது மாநில கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள், நிலவள வங்கிகள் மற்றும் இந்தியரிசர்வ்வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட இதர நிதிநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு குறுகியகால, மத்தியகால மற்றும் நீண்டகால கடன்களை வழங்குகிறது. 
  • கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களின் பங்கு முதலீட்டை வழங்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு 20 ஆண்டு நீண்டகால கடன்களை நபார்டு வங்கி வழங்குகிறது.
  • மைய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது விவசாயம் மற்றும் ஊராக வளர்ச்சிக்கான பங்கு மூலதனம் அல்லது கடன் பத்திரங்களை பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கு நீண்டகால கடனை அளிக்கிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள், திட்டக் கமிஷன் (தற்பொழுது நிதி ஆயோக்) மற்றும் சிறிய அளவிலான தொழில்கள், கிராமம் மற்றும் குடிசைத் தொழில்கள், கிராமப்புற கைவினைப்பொருட்கள் ஆகியவற்றின் வளர்ச்சி, அனைத்து இந்திய மற்றும் மாநில அளவிலான நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நபார்டுக்கு உள்ளது. சிறிய மற்றும் பரவலாக்கப்பட்ட துறைகளில் உள்ள தொழில்கள் போன்றவை. 
  • நபார்டு வங்கி, வட்டார ஊரக வங்கிகள் மற்றும் துவக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தவிர்த்த அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஆய்வு செய்யும் பணியினை செய்கிறது.
  • வேளாண்மை மற்றும் ஊராக வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேம்படுத்தும் விதமாக ஆய்வு மற்றும் வளர்ச்சி நிதியினை பராமரிக்கிறது.

 

 

**************************************************************************

TNPSC பொருளாதார இலவச குறிப்புகள் - வங்கிகளின் வகைகள்_3.1இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here