Tamil govt jobs   »   Job Notification   »   TNAU Rank List 2021-22 Out

TNAU Rank List 2021-22 Out, Tamil Nadu Agri Rank List PDF Download | தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு

TNAU Rank List 2021-22: Tamil Nadu Agricultural University Rank List PDF download link is now available on the official website at tnau.ac.in/ugadmission. In today’s article, we will cover all the new updates of the UG/ PG/ Diploma Admission Rank List of Tamil Nadu Agriculture University (TNAU). As per TNAU UG Admissions 2021-22 (Revised Schedule), the Rank list has been published on 28 January 2022 (Friday). Those who have applied for TNAU UG admission for the academic year 2021-22 can visit the official website to check the official rank list 2022.

TNAU RANK LIST 2021-22: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. மாணவர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 28.01.2022 அன்று வெளியிட்டது. தரவரிசைப் பட்டியலைத் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் ஏ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இந்த நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 21 ஆம் தேதியிலிருந்து ஆன்லைனில் தொடங்குகிறது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fill the Form and Get All The Latest Job Alerts

TNAU Rank List 2021-22

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இளங்கலை பாடப்பிரிவில், 11 வகையான வேளாண்மை, தோட்டகலை உள்ளிட்ட பாடங்களை, 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் அதன் கீழ் உள்ள 28 இணைப்பு கல்லூரிகளிலும் வழங்குகிறது. தற்போது நடப்பு கல்வியாண்டில், தமிழக அரசு உத்தரவின் பேரில், இளங்கலையில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய இரண்டு பாடங்களை தமிழில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 120 இடங்கள் உள்ளன.

இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவிற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மாணவர்களிடம் இருந்து வரவேற்தது. இதில் 47,600 பேர் வேளாண்மை படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். மேலும், தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட இரு பாடங்களுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

ஏற்கனவே பல்கலைக்கழகத்தால் மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட இருந்த நிலையில், 10.5 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, தமிழக அரசு வழிகாட்டுதலின் படி, மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Click here to Download the TNAU Rank List 2021 

TNAU COUNSELLING DATES 2021-22

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி, வருகிற பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 14, 15 ஆகிய தேதிகளில் தொழில்முறை கல்வி பிரிவினர், 17 மற்றும் 18 ஆம் தேதி அரசு பள்ளிகளில் படித்த 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவினருக்கு நடக்கிறது. பொதுக்கலந்தாய்வு 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை, 3 நாட்கள் இணையவழியில் நடைபெறும் என பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

Adda247 Tamil

TNAU COUNSELLING SCHEDULE 2021-22

Sl. No. NAME OF THE QUOTA COUNSELLING DATE COUNSELLING MODE
1 Ex-Servicemen 11.2.2022 FN Offline
2 Differently Abled Candidates 11.2.2022 FN Offline
3 Eminent Sports Person 11.2.2022 AN Offline
4 Vocational Stream 14.2.2022 and 15.2.2022 Offline
5 7.5% Quota (Government School Students) 17.2.2022 and 18.2.2022 Offline
6 General Counselling Phase I 21.2.2022 TO 23.2.2022 Online
7 Seat Allotment 25.2.2022 Online
8 Certificate Verification 2.3.2022 TO 5.3.2022 In Person
9 First Sliding and Seat Allotment 8.03.2022 Online
10 Certificate Verification -II 11.3.2022 TO 13.3.2022 In person
11 Sliding II and Seat Allotment 16.3.2022 Online
12 NRI Counselling 17.3.2022 Offline
13 Industrial Quota Counselling 18.3.2022 Offline
14 Certificate Verification -III 19.3.2022 TO 21.3.2022 In Person
15 Sliding III and Seat Allotment 24.3.2022 Online

Click here to Download the TNAU Official Counselling Schedule 2021

TNAU SLIDING PROCESS DATES 2021-22

  1. கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 25 ஆம் தேதி ஆன்லைன் முறையில் நடக்கிறது.
  2. மார்ச் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும்.
  3. முதல் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப்பிரிவுகள் இட ஒதுக்கீடு மார்ச் 8 ஆம் தேதி ஆன்லைன் முறையில் நடக்கிறது.
  4. முதல் நகர்வு பட்டியலுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 11 முதல் 13 ஆம் தேதி வரை நேரடியாக நடைபெறும்.
  5. இரண்டாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி, பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு ஆன்லைன் முறையில் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும்.
  6. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு நேரடி கலந்தாய்வு மார்ச் 17 ஆம் தேதியில் நடைபெறும்.
  7. வேளாண் தொழில் நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு நேரடி கலந்தாய்வு மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும்.
  8. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச் 19 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.
  9. மூன்றாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி, நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி, பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு ஆன்லைன் முறையில் மார்ச் 24 ஆம் தேதியில் நடைபெறும்.

Download the app now, Click here

Coupon code- PREP75- 75% off

Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)
Tamil Nadu Mega Pack (Validity 12 + 12 Months)

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247 tamil website  | Adda247 Tamil telegram group | Adda247TamilYoutube | Adda247App