Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC Book Back Questions Revision Tamil...

TNPSC Book Back Questions Revision Tamil Medium – Urban changes during the British period

TNPSC Samacheer Book Back Questions: ADDA 247 Tamil is giving you TNPSC Samacheer Book Back Questions Urban changes during the British period MCQs for all competitive exams. Here you get Multiple Book Back Choice Questions and Answers. Here you will find all the important questions and answers that will help you increase your knowledge and move you toward fulfilling your goals. Study these TNPSC Book Back Questions MCQs and succeed in the exams.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Q1. பழங்கால நகரங்கள் எனப்படுவது

(a) ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ

(b) டெல்லி மற்றும் ஹைதராபாத்

(c) பம்பாய் மற்றும் கல்கத்தா

(d) மேற்கண்ட எதுவுமில்லை

S1.Ans.(a)

Sol.

  • ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத் மற்றும் மதுரை ஆகியவை புகழ்பெற்ற பண்டைய கால நகரங்கள் ஆகும்.

Q2. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்

(a) சூரத் 

(b) கோவா

(c) பம்பாய் 

(d) மேற்கண்ட அனைத்தும்

S2.Ans.(b)

Sol.

  • ஐரோப்பியர்களின் வருகை நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. 
  • அவர்கள் முதலில் சூரத், டாமன், கோவா மற்றும் பாண்டிச்சேரி போன்ற சில கடலோர நகரங்களை உருவாக்கினர். 
  • இந்தியாவில் தங்களை நன்கு நிலைநிறுத்திக் கொண்ட பிரிட்டிஷார் மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய மூன்று நகரங்களை நிர்வாகத் தலைநகராகவும் வணிக மையங்களாகவும் வளர்த்தனர். 

Q3. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை

(a) சூயஸ் கால்வாய் திறப்பு

(b) நீராவிப் போக்குவரத்து அறிமுகம்

(c) ரயில்வே கட்டுமானம்

(d) மேற்கண்ட அனைத்தும்

S3.Ans.(d)

Sol.

  • திறப்பு, நீராவிப் சூயஸ் கால்வாய் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே சாலைகள் அமைத்தல், கால்வாய்கள், துறைமுகங்கள், தொழிற்சாலைகள் வளர்ச்சி, நிலக்கரி சுரங்கம், தேயிலைத் தோட்டம், வங்கிப்பணி, கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீடு வளர்ச்சியினால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நகரமயமாக்கலில் புதிய போக்கு தொடங்கியது.

 

Q4. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது

(a) வர்த்தகத்திற்காக

(b) தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக

(c) பணி புரிவதற்காக

(d) ஆட்சி செய்வதற்காக

S4.Ans.(a)

Sol.

  • ஆங்கிலேயர்கள் வர்த்தகத்திற்காக இந்தியா வந்தனர். 

Q5. புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்

(a) பம்பாய் 

(b) கடலூர்

(c) மதராஸ் 

(d) கல்கத்தா

S5.Ans.(c)

Sol.

  • ஆங்கில கிழக்கிந்திய தொழிற்சாலைகளைக் நிறுவனம் அதன் அமைத்ததோடு குடியேற்றத்தின் பாதுகாப்பிற்காக கோட்டைகளையும் அமைத்தனர்.
  • சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையும் கல்கத்தாவில் வில்லியம் கோட்டையும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

Q6. 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது?

(a) புனித வில்லியம் கோட்டை

(b) புனித டேவிட் கோட்டை

(c) புனித ஜார்ஜ் கோட்டை

(d) இவற்றில் எதுவுமில்லை

S6.Ans.(c)

Sol.

  • புனித ஜார்ஜின் தினமான ஏப்ரல் 23, 1640 அன்று இதன் முதல் தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. 
  • புனித ஜார்ஜ் கோட்டையை கட்டப்பட்டதற்கு டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் கூட்டாக பொறுப்பாவார்கள். 
  • இது 1774 வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது.

II கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. இந்தியாவில்இருப்புப் பாதைபோக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு —————–. (1853)
  2. இந்தியாவின்உள்ளாட்சி அமைப்பின் தந்தைஎன்று அழைக்கப்படுபவர்—————–. (ரிப்பன் பிரபு)
  3. 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில்—————–

அறிமுகப்படுத்தியது. (இரட்டை ஆட்சி)

  1. நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர்—————–. (சர் ஜோசியா சைல்டு)
  2. ——————இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர். (1639)

III 

Q7.பொருத்துக

  1. பம்பாய் – 1.சமய மையம்
  2. இராணுவ குடியிருப்புகள் – 2.மலை வாழிடங்கள்
  3. கேதர்நாத் – 3.பண்டைய நகரம்
  4. டார்ஜிலிங் – 4.ஏழு தீவு
  5. மதுரை – 5.கான்பூர்

(a) 5 4 2 1 3

(b) 5 3 4 2 1

(c) 3 4 5 1 2

(d) 4 1 3 2 5

 

S7.Ans.(a)

Sol.

  • ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத் மற்றும் மதுரை ஆகியவை புகழ்பெற்ற பண்டைய கால நகரங்கள் ஆகும்.
  • மலைப்பிரதேசங்கள் படைகள் தங்குமிடமாகவும் எல்லைகளைப்பாதுகாக்கவும் தாக்குதலைத் தொடங்கும் இடமாகவும் இருந்தன.
  • மலைவாழிடங்கள் வட மற்றும் தென் இந்தியாவில் வளர்ச்சி பெற்றன. எ.கா. சிம்லா, நைனிடால், டார்ஜிலிங், உதகமண்டலம், கொடைக்கானல். 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

  1. இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன.சரி
  2. பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம்

பெற்றனர்.சரி

  1. புனித வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது.(தவறு)
  2. குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்.சரி
  3. மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது. (தவறு)

V சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Q8. கூற்று: இந்தியா பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.

காரணம்: பிரிட்டிஷாரின் ஒரு வழியிலான சுதந்திரமான வர்த்தகக் கொள்கை மற்றும் தொழில்துறை புரட்சி இந்திய உள்நாட்டு தொழில்களை அழித்தன.

(a) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

(b) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

(c) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

(d) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை.

S8.Ans.(c)

Sol.

  • பாரம்பரியத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்திய கைவினைத் தொழில் பொருட்கள், உற்பத்தி செய்யும் நகரங்கள் தொழிற்புரட்சியின் விளைவாக அழிந்தன. அதிகப்படியானஇறக்குமதி வரி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பிற கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியப் பொருட்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படுவது குறையலாயின. இவ்வாறு இந்தியா, பிரிட்டனின் வேளாண்மை குடியேற்றமாக மாறியது.

Q9. பின்வரும் எந்த அறிக்கை / அறிக்கைகள் உண்மையற்றவை?

  1. i) ஸ்ரீரங்க ராயலு ஆங்கிலேயர்களுக்கு மதராசபட்டணத்தை மானியமாக

வழங்கினார்.

  1. ii) டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பானவர்கள்.

iii) 1969ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

(a) i மட்டும் 

(b) i மற்றும் ii

(c) ii மற்றும் iii 

(d) iii மட்டும்

S9.Ans.(c)

Sol.

  • தமர்லா வெங்கடபதி ஆங்கிலேயருக்கு மதராசபட்டனத்தை மானியமாக வழங்கினார்.
  • புனித ஜார்ஜ் கோட்டையை கட்டப்பட்டதற்கு டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் கூட்டாக பொறுப்பாவார்கள். 
  • பின்னர் 1969இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

 

Q10. கூற்று: ஆங்கிலேயர்கள் தங்கள் மாற்று தலைநகரங்களை மலைப்பாங்கான பகுதிகளில் அமைத்தனர்.

காரணம்: அவர்கள் இந்தியாவில் கோடைக்காலத்தில் வாழ்வது கடினம் என உணர்ந்தனர்.

(a) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

(b) கூற்று தவறு மற்றும் காரணம் சரி

(c) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

(d) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்கவில்லை

S10.Ans.(c)

Sol. கூற்று சரி மற்றும் காரணம் கூற்றை விளக்குகிறது

 

**************************************************************************

TNPSC Group 1 & 2 Studymate
TNPSC Group 1 & 2 Studymate
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here